அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி சுத்தம் பண்ணுகிறார்.
every branch that bears fruit He prunes, that it may bear more fruit. (John 15:2)
Job 17:9; Psalm 51:7-13; Isaiah 27:9; Isaiah 29:19-21; Hosia 6:1-3; Romans 5:3-5; Romans 8:28; 2 Corinthians 4:17,18; 1Thessalonians 5:23,24; Revelation 3:19.
என்னில் கனிகொடாதிருக்கிற கொடிஎதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார், கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். (யோவான் 15:2)
யோபு 17:9; சங்கீதம் 51:7-13; ஏசாயா 27:9; ஏசாயா 29:19-21; ஓசியா 6:1-3; ரோமர் 5:3-5; ரோமர் 8:28; 2கொரிந்தியர் 4:17,18; 1தெசலோனிக்கேயர் 5:23,24; வெளி3:19.
சுத்தம் பண்ணுகிறார்:
கனி கொடாத கொடியை அறுத்து போடுவதின் காரணம் கொடியைச் சுத்தம் பண்ணுவதற்கே. கொடியை சுத்தம் பண்ணுவதற்கான காரணம் அது அதிக கனி கொடுக்க வேண்டும் என்பதற்கே. செடியாகிய கிறிஸ்துவில் கொடியாக படரும் தேவனுடைய பிள்ளைகள் அதிக கனி கொடுக்க வேண்டும் என்பது அவரின் எதிர்பார்ப்பு. அது அதிக கனி கொடுக்க கனி கொடாத கிளையை அறுத்து அகற்றி கொடியை சுத்தம் பண்ணுகிறார். கிறிஸ்துவாகிய செடியை அல்ல, கொடியாகிய நம்மை அல்லது கிளையாகிய நம்மையே.
கிறிஸ்துவில் படர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் கிளை கனி கொடுக்காததின் காரணம் என்ன?கிறிஸ்துவின் சிந்தையை கொண்டிருக்கவில்லை, கிறிஸ்துவின் கற்பனைகளுக்கு அடங்கி போகவில்லை. எனவே அப்படிபட்ட சுபாவ கிளைகளை அறுத்துபோட்டு கொடியை சுத்தம் பண்ணுகிறார்.
தேவனுடைய பிள்ளைகள் பலவிதமான பாடுகளினூடே தான் கடந்து செல்ல வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கை எளிதான வாழ்க்கை அல்ல. வசனத்தினாலும், ஆவியினாலும், இரத்தத்தினாலும் சுத்தம்பண்ணுகிறவர் உபத்திரவங்களையும் பாடுகளையும் கொடுத்தும் சுத்தம் பண்ணுகிறார்.
ஒரு தேவ மனிதன் பாடுகளையும் துன்பங்களையும் அனுபவிக்கின்றானென்றால் ஒன்றில் அவன் பாவம் செய்திருக்க வேண்டும், இல்லையெனில் தெய்வீக சுபாவங்களுக்கு இன்னும் அவன் வராதிருந்திருக்க வேண்டும், இல்லையென்றால் கிறிஸ்துவின் சாட்சியாக நிற்க வேண்டியதாக இருக்கலாம். இவையெல்லாமே நம்மை மேலும் தூய்மையுடையவர்களாக்கி மகிமையின் மேல் மகிமையடைய அழைத்து செல்கின்றதாயுள்ளது.
அவர் என்னை அடிக்கிறாரென்றால் நான் சுத்தமாவேன், அவர் என்னை விட்டுவிடுகிறாரென்றால் நான் பாவியாவேன்.
சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. எபிரேயர் 10:19-23.