வரமாட்டான்

பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்.

No one can come to Me unless the Father who sent Me draws him. (John 6:44)
Jn3:14; Jn6:65; Jn8:43,44; Jn12:32,37-40; Mt25:10; Rom8:30,36-39; Song1:4; Jer31:3; Hos2:19; Hos11:4.

என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்: கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். (யோவான் 6:44)

யோவான் 3:14; யோவான் 6:65; யோவான் 8:43,44; யோவான் 12:32,37-40; மத்தேயு 25:10; ரோமர் 8:30,36-39; உன்னதப்பாட்டு 1:4; எரேமியா 31:3; ஓசியா 2:19; ஓசியா 11:4.

இழுத்துகொள்ளுதல்:

இழுத்தல் என்பதின் பொருள் உள்ளான ஆற்றலைகொண்டு அருகில் கொண்டு வருதலாகும்.
பிதா தமது வார்த்தையினால் மனுஷர்களை தம்பக்கம் கொண்டுவர விரும்புகிறார்.
பிதா தமது வல்லமையினால் மனுஷர்களை தம்பக்கம் கொண்டுவர விரும்புகிறார்.
பிதா தமது காருண்ணியத்தினால் மனுஷர்களை தம்பக்கம் கொண்டுவர விரும்புகிறார்.
பிதா தமது அன்பினால் மனுஷர்களை தம்பக்கம் கொண்டுவர விரும்பினார். தமது அன்பின் இறுதி நிலையாகிய தம் குமாரனை ஜீவபலியாக சிலுவையில் ஒப்புகொடுத்து மனுஷர்களை தம்மண்டை
இழுக்கிறார்.

பிதா மனுக்குலத்தை தம்மிடம் இழுத்துகொள்ள பயன்படுத்தியுள்ள யாவும் பொதுப்படையானது. எல்லாருக்குமுரியது.
எவரொருவர் அதற்குரியவர்களாய் இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே அவரிடம் சேர்க்கப்படுவர்.
கடலில் போடப்படும் வலையில் எல்லாம் அகப்பட்டாலும் நல்ல மீன்களை மட்டுமே மீனவர் சேர்ப்பதுபோல பிதாவும் தமது குமாரனின் சுவிசேஷ வலையில் அகப்படும் யாவரையும் தம்மிடம் சேர்த்துகொள்ளுவதில்லை. தமக்குரியவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்கிறார்.

பாவம் வந்ததினால்தான் இழுத்துகொள்ளுதல் என்ற நிலைப்பாடும் உண்டாயிற்று.

பிதாவின் இழுத்தலுக்கு ஒத்துவராத ஒருவரும் இயேசுவிடம் வர இயலாது. சபையில் உறுப்பினராக இருந்து கொள்ளலாம்.

பிதா ஒருவனை இழுத்து தம் குமாரனில் இணைத்துகொள்ள விரும்புகிறார்.
ஒரு பெண்ணைதேடி மணமகனோடு இணைத்து வைப்பதுபோல அவரில் – அவருக்குள் இணைக்கபடுகிறவர்களே ராஜ்ஜியத்தின் புத்திரர்.
பிதா ஒருவனை இழுத்து தம் குமாரனோடு இணைத்து குமாரனின் சாயலுக்கு ஒப்பாக மாற்றுகிறார். இதுவே ஆதிமேன்மையாக கருதப்படுகிறது.

அன்பானவர்களே,
நாம் நமது ஜாதி, கட்சி, சமூகபிரிவுகளில் ஈடுபட்டு பிதாவின் இழுவைக்கு உட்படாதிருக்கின்றோமெனில் இன்றே அவைகளை – அப்படிபட்டவைகளை தூக்கி எறிந்துவிட்டு அவரின் இழுத்தலுக்கு உட்படுவோம்.

உள்ளான மாற்றமும், வெளியரங்கமான மாற்றமும் நமக்கு மிகவும் அவசியமாகின்றது.
பிதா எனக்குள் கிரியை செய்து குமாரனோடு இணைத்திருக்கிறார் என்பதை எனது வெளியரங்க சாயலே வெளிபடுத்தும்.

கர்த்தாவே நீர் என்னை இழுத்துகொண்டு உமது மகனின் சாயலுக்கொப்பாய் மாற்றினதற்காய் நன்றி. நான் தொடர்ந்து உமது அன்புக்குள் கட்டுபட்டு, கீழ்படிந்து செயல்பட எனக்கு உதவி செய்யும். செயலற்றவைகளை என்னிலிருந்து விலக்கிப்போடும். உயிருள்ளவனாய் நிற்க உதவிடும்.

Powered By Indic IME