நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்
Do not labor for the food which perishes, but for the food which endures to everlasting life. (John 6:27a)
Jn4:13,14; Mt6:19,31-33; Lk10:40-42; 1Co6:13; 1Co7:29-31; 1Co9:24-27; 2Co4:18; Col2:21-23; Col3:2; Heb12:16; Jas1:11; 1Pet1:24; 2Pet3:11-14; Ecc5:11-16; Isa55:2; Hab2:13.
அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்: அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்: அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார். (யோவான் 6:27)
யோவான் 4:13,14; மத்6:19,31-33; லூக்கா 10:40-42; 1கொரிந்தியர் 6:13; 1கொரிந்தியர் 7:29-31; 1கொரிந்தியர் 9:24-27; 2கொரிந்தியர் 4:18; கொலோசெயர் 2:21-23; கொலோசெயர் 3:2; எபிரெயர் 12:16; யாக்கோபு 1:11; 1 பேதுரு 1:24; 2 பேதுரு 3:11-14; பிரசங்கி 5:11-16; ஏசாயா 55:2; ஆபகூக் 2:13.
நிலைநிற்கும் போஜனம்:
நித்திய ஜீவன் வரையிலும் நிலைநிற்கிற போஜனம் குறித்து சிந்திக்கும்போது 3 பகுதிகளை நாம் அறிய வேண்டும்.
1. மத்தேயு 4:4. மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். கர்த்தருடைய வார்த்தை அனுதின உணவு, மெய்யான உனவு, நித்தியஜீவன் வரைக்கும் கொண்டுபோகும் உணவு.
இந்த வசனம் என்ற உணவானது.
– கசப்பாயிருக்கும். வெளி 10:10
– பாலாகிய உணவு 1கொரிந்தியர் 3:2; எபிரெயர் 5:13
– பலமான ஆகாரம். எபிரெயர் 5:14.
நாம் கர்த்தருடைய வார்த்தையை எந்த முறையில் சுவீகரித்து கொள்கிறோமோ அப்படியாகத்தான் நமது வாழ்க்கை இருக்கும்.
கசப்பு – ஊழியகாரனின் அனுபவம்.
பால் – இளம் விசுவாசியின் அனுபவம். பலமான – முதிர்ந்த விசுவாசியின் அனுபவம்.
2. வெளி 3:20. அவனிடத்தில் நான் பிரவேசித்து அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான். (யோவான் 14:23) ஆண்டவரை சிநேகிப்பதின் அடையாளமே அவரது கற்பனைகளை கைகொள்வதாகும். யோவான் 15:10.
கற்பனைகள் என்பது அவரது உபதேசமாயிருக்கிறது.
இந்த உபதேசத்தில் நிலைத்திருந்தால் அவரும் அவனில் நிலைத்திருப்பார். கனிகொடுக்கிற அளவுக்கு அவன் புஷ்டியாயிருப்பான்.
இந்த புஷ்டியானது முதிர்வயது வரையிலும் தொடரும். சங்கீதம் 92:15.
3. யோவான் 6:54. இந்த பகுதியை நாம் அவ்விடத்தில் தியானிக்கலாம். நமது கிரியைகளின் அடித்தளம் இயேசு செய்த இரட்சண்ய கிரியைகளாகும். எனவே, நமது கிரியைகள் யாவும் நித்திய ஜீவன் வரைக்கும் எட்டுகிறதாயிருக்க வ