யோவான்…. அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல….
அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர், அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான். (யோவான் 1:27)
யோவான் 3:23-36; மத்தேயு 8:8; மத்தேயு 10:37,38; லூக்கா 7:6f; லூக்கா 15:19f; லூக்கா 21:36; அப்போஸ்தலர் 41; கொலோசெயர் 1:10; 1தெசலோனிக்கேயர் 2:11; 2தெசலோனிக்கேயர் 1:5, 1 யோவான் 1:2; 1யோவான் 11:8; ஆதியாகமம் 32:10; சங்கீதம் 31:12…..
நான் பாத்திரன் அல்ல…..
மோசே….
தேவன் மோசேயை உயர்த்தியிருந்தும் வல்லமை ஞானம் யாவும் தந்திருந்தும் தேவன் முன்பாகவும் சகோதரர் முன்பாகவும் தன்னை உயர்த்தவில்லை……
இயேசு……
தேவனுடைய குமாரனாயிருந்தும் தேவனால் அனுப்பப் பட்டிருந்தும் தேவடைய கிரியைகளை செய்திருந்தும் தன் தந்தைக்கு ஈடாக தன்னை உயர்த்தவில்லை.. பிலிப்பியர் 2:6….
யோவான் ஸ்நானன்…
கிஸ்துவுக்கு முன்வந்தும் லியாவின் ஆவியை பெற்றிருந்தும் கிறிஸ்துவுக்கு தன்னை சமமாக்கவில்லை… மத்தேயு 3:11; யோவான் 3:30…….
பவுல்…..
கல்விமானாயிருந்தும் கிறிஸ்துவின் தரிசனம் பெற்றிருந்தும் சபைகுறித்த வெளிப்பாடுகள் பெற்றிருந்தும் புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாக அழைக்கப்பட்டிருந்தும் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களுக்கு தன்னை ஈடாக்கவில்லை…. 1தீமோத்தேயு 1:15…..
ஏசாயா……
தேவ மகிமை சாயலை தேவாலயத்தில் முகமுகமாய் கண்டிருந்தும் தன்னில் உள்ள சிறு குறைவை சரிசெய்ய தன்னை முற்றிலும் தாழ்த்தினான்… ஏசாயா 6:1-8..
இதேபோன்று எண்ணிறந்த தேவமனிதர்கள் தங்களின் தராதரம் குறித்து தெளிவுள்ளவர்களாயிருந்தனர்….
– நரைத்தவர் முன்னிலையில் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்கு….. லேவியராகமம் 19:32….
– மூத்த ஊழியர்கள் முன்பாக நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்கு.. நீதிமொழிகள் 5:11-14; புலம்பல் 4:16; புலம்பல் 5:12…..
– தகப்பன் தாய் முன்பு நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்கு…
– ராஜாக்கள் அதிகாரிகள் முன்பாகநடந்து கொள்ள வேண்டிய ஒழுங்கு…. ரோமர் 13:1-7…
-கணவன் முன்பு மனைவி நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்குகள் உண்டு.
மேன்மைக்கு முன்னானது தாழ்மை. நீதிமொழிகள் 15:33….