அவருடைய பரிபூரணத்தினால் நாம் கிருபையின் மேல் கிருபை பெற்றோம்.
அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம். (யோவான் 1:16)
மத்தேயு 13:12; ரோமர் 5:2,17,20; எபேசியர் 1:7,8; எபேசியர் 2:5-10; எபேசியர் 4:7,13; கொலோசெயர் 1:19,20; தீத்து 2:11-13; தீத்து 3:6,7; சரியா 4:7; ஆதியாகமம் 6:8…..
பரிபூரணம் – நிறைவு – குறைவில்லாத….
நாம் கிருபை பெற அவர் பரிபூரணராக வெளிப்பட்டார்….
இயேசு கிறிஸ்து எவைகளில் எல்லாம் பரிபூரணத்தை வெளிபடுத்தினார்?…..
1.பாவமில்லாத முழு மனித தன்மையில்……..
2.பரிசுத்தத்தில் பரிபூரணம்…..
3.தேவனோடுள்ள உறவில் பரிபூரணம்……
4.தேவ சித்தம் நிறைவேற்றுவதில் பரிபூரணம்…….
5.இரட்சிப்பை உண்டுபண்ணுவதில் பரிபூரணம்…..
அன்று……
தேவனுடைய பரிபூரணத்தை சுமந்துவந்த இயேசுகிறிஸ்து பாடுகளையே – துன்பங்களையே அனுபவித்தார்….
ஆனால் தேவன் அவரை உயர்த்தினார்….
இன்று…..
தேவ ஊழியர்கள் தேவனின் பரிபூரணத்தை சுமந்து செல்ல விரும்பியிருந்தால் இயேசு கிறிஸ்துவைபோல பாடுபடுகிறதற்கும்-துன்பம் அனுபவிப்பதற்கும் துணிந்திருப்பார்கள்…
தேவனும் நம்மை உயர்த்த சித்தமாகியிருப்பார்..
பாடு இல்லாமல் வீடுபேறு இல்லை…
சிலுவையின்றேல் சிங்காசனமில்லை…
பாடுகளின் மத்தியில் தான் தேவகிருபை வெளிப்படும்….