தியான சிலுவை மொழிகள்

தியான சிலுவை மொழிகள்

தியான சிலுவை மொழிகளில் மூன்று விதமான சிந்தனைகள் உண்டு…..

இந்த சிந்தனைகள் இக்கால சூழலுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது…..

இதை அடிப்படையாக கொண்டு நீங்கள் பொருள் மாறாமல் மாற்றியமைக்கலாம்….

வசன மேற்கோள்கள் கொண்டு இணைத்து சிந்திக்கலாம்…..

இவை எனது தனிப்பட்ட தியானங்களில் உருவானவைகள்…..

1. சிலுவை சுமந்து போகும்போது கூறிய மொழிகள்…..
லூக்கா 23:26-33..
– எனக்காக அழ வேண்டாம்…
– மலடிகள் பாக்கியவதிகள் எனப்படும் நாட்கள் வருகிறது….
– மறைந்து கொள்ள முடியாமலும், சாக முடியாமலும் இருக்கிற நாட்கள் வருகிறது…
– பச்சை மரத்தையே பட்டை வெட்டும் கூட்டமது…

2. சிலுவையில் அறையபட்டபின்பு இயேசுகிறிஸ்து கூறியதாக 7 மொழிகள் தரப்பட்டுள்ளன..

A. லூக்கா 23:34. பிதாவே மன்னியும். மன்னிக்கும் அன்பு….
– தந்தையே இவர்கள் மீது கோபம் கொள்ளாதிரும்…யோவான் 3:18,36; யோவான் 8:21,24; யோவான் 16:9
– தந்தையே இவர்கள் உமது ஜனம்…யோவான் 17:6,7.
– தந்தையே உம்மிடம் கோபம் மட்டுமல்ல மன்னிக்கும் அன்பும் உண்டு….சங்கீதம் 86:5
– தந்தையே என் வேதனையை நான் சகித்துக் கொள்ளுகிறேன்…எபிரேயர் 12:2
– தந்தையே அவர்கள் அறியாமல் செய்வதை பொறுத்தருளும்…மத்தேயு 17:12; லூக்கா 24:16; யோவான் 3:10; யோவான் 8:43; யோவான் 16:3; அப்போஸ்தலர் 3;17 அப்போஸ்தலர் 13:27;

B. லூக்கா 23:35-43. சேர்த்துக்கொள்ளும் அன்பு…..
– சகித்துக் கொள்ளும் அன்பு.. லூக்கா 23:35-39
– துன்பத்திலும் சிந்தை- சித்தம் இடறாமல் செவிசாய்க்கும் அன்பு.. லூக்கா 40-42
– ஏற்றுக்கொள்ளும் – சேர்த்துக் கொள்ளும் அன்பு….பரதீசில்…மன்னிக்கபட்டவர்கள் சேர்க்கப்பட்டனர்…..
– அணைத்துக்கொள்ளும் அன்பு – என்னோடு – கிறிஸ்துவோடு…
– பகிர்ந்தளிக்கும் அன்பு……இருப்பாய்.

C. யோவான் 19:25-27. கைவிடா அன்பு..
– தம்மிடம் வருவோரையும் அவர் கைவிடுவதில்லை….யோவான் 6:37
– தம்மிடம் இறைஞ்சுவோரையும் அவர் கைவிடுவதில்லை. லூக்கா 18:7.
– கைவிடபட்டவர்களையும் அவர் கைவிடுவதில்லை…ஏசாயா 54:6; ஏசாயா 60:15; 2கொரிந்தியர் 4:9
– பரிசுத்தவான்களையும் அவர் கைவிடுவதில்லை….சங்கீதம் 37:28.
– அவரை நேசிப்பவர்களையும் அவர் கைவிடுவதில்லை. மத்தேயு 12:50;
யோவான் 19:25-27.

D. மத்தேயு 27:45,46; மாற்கு 13:33,34. உரிமை கோரும் அன்பு…
– நான் உம் நேச மகன் அல்லவா? ஏன் கைவிட்டீர்?…..மத்தேயு 3:17; மத்தேயு 17:5.
– நான் உம்மால் அனுப்பப்பட்டவன் அல்லவா? ஏன் கைவிட்டீர்?.
யோவான் 10:36.
– நான் உம் விருப்பம் செய்கிறவன் அல்லவா? ஏன் கைவிட்டீர்?..
யோவான் 4:34.
– எத்தனை தடவை என்னை தேற்றியிருக்கிறீர்,
அரவணைத்திருக்கிறீர். இப்பொழுது ஏன் என்னை கைவிட்டீர்?
லூக்கா 22:43
– நான் நேசித்த சொந்த ஜனமும் என்னை கைவிட்டனர். நீங்களும் கைவிட்டீங்களே. ஏன்?யோவான் 1:11; மத்தேயு 15:24.

E. யோவான் 19: 28,29. தவிக்கும் அன்பு…..
– இந்த பூமியில் பிறக்க இடம் தராத உலகம்…லூக்கா 2:7
– பிறந்தபின் ஓட ஓட துரத்திய உலகம்….மத்தேயு 2:13-15.
– தலை சாய்க்க இடம் தராத உலகம்….மத்தேயு 8:20; லூக்கா 9:58.
– பசி, தாகம், களைப்பு நீக்க உதவாத உலகம்….யோவான் 4:8,9.
– இருந்த உடமைகளையும் பறித்துக்கொண்ட உலகம். யோவான் 19;23,24.
– நன்மை செய்திருந்தும் தீமை செய்த உலகம்…அப்10:38;லூக்6:35;1பேது2:20
– குற்றமற்றவராயிருந்தும் குற்றம் சுமத்தும் உலகம்…மத்தேயு 26:60; மத்தேயு 27:4; லூக்கா 23:22; 1 பேதுரு 1;19.

F. யோவான் 19:30. திருப்தியடைந்த அன்பு..
தந்தையே…………
– அனுப்பிய இடத்துக்கு வர தயாராகி விட்டேன்.பரதீசு……..யோவான் 16:5…..
– சொன்னதை செய்து முடித்து விட்டேன்…..யோவான் 17:4….
– கொடுத்ததை முழுவதுமாக கொடுத்து விட்டேன்……யோவான் 17:8,14,22….
– தூய்மையாக வழ்ந்து முடித்து விட்டேன்….யோவான் 17:19….
– ஜெயிக்கவேண்டியவைகள் அனைத்தையும் ஜெயித்து விட்டேன்…யோவான் 16:33…

G. லூக்கா 23:46. உயிர் விட்ட அன்பு…
– கெட்டு போனதை மீட்க உயிர் விட்ட அன்பு…மத்தேயு 18:11,14; யோவான் 3;16
– பாவிகளை மீட்க உயிர் விட்ட அன்பு…..1தீமோத்தேயு 1:15
– செத்தவர்களை உயிர்ப்பித்து உயிர் விட்ட அன்பு….யோவான் 5:21;
– தீமையை அகற்ற நன்மை செய்து உயிர் விட்ட அன்பு….1 பேதுரு 3:17
– யுத்தகளத்தில் போர்புரிந்து ஜெயித்து உயிர் விட்ட அன்பு…கொலோசெயர் 2:15.
– உருகி உருகி உயிர் விட்ட அன்பு…..மத்தேயு 27:50
– சுமந்து சுமந்து உயிர் விட்ட அன்பு….எபிரேயர் 9:28 யோவான் 19:17

3. அன்பின் வெற்றி…
மத்தேயு 27:51-54; மாற்கு 15:38,39; லூக்கா 23:47-53; யோவான் 19;31-42….
1. இயற்கையின் போராட்டம்…மத்தேயு27:51 பூமியதிர்ச்சி, காரிருள்
2. சாத்தானின் கட்டு – மரணகட்டு உடைந்தது…மத்தேயு 27:52,53. தூயோர் உயிர்ப்பிக்கபடல்
3. மகா சந்நிதான மறைவு நீக்கப்படல்….மத்தேயு 27:51…
4. சாட்சியங்கள் பிறந்தன….மத்தேயு 27:54; மாற்கு 15:39; லூக்கா 23:47..
5. ரகசிய சீடர்கள் பரசிய சீடர்கள் ஆயினர்…மத்தேயு 27:57-60; மாற்கு 15:43-46; யோவான் 19;38-40.
6. குத்தினவர்கள் நோக்கிப் பார்த்தனர்…யோவான் 19:37..
7. தீர்க்கதரிசனம் நிறைவேறியது…காலெலும்புகள் முறிக்கபடவில்லை..யோவான் 19:36;
சங்கீதம் 34:20; யாத்திராகமம் 12:46; எண்ணாகமம் 9:12; 1கொரிந்தியர் 5:7.

ADD YOUR COMMENT

Powered By Indic IME