நான் வியாதியாயிருந்தேன். என்னை விசாரிக்க வந்தீர்கள்
வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள், வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள், காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.(மத்தேயு 25:36)
மத்தேயு 25:34-46; அப்போஸ்தலர் 20:35; அப்போஸ்தலர் 28:8,9; ரோமர் 12:15; 1கொரிந்தயர் 9:22; 1தெசலோனிக்கேயர் 5:14; யாக்கோபு 1:27; யாக்கோபு 5:14,15.
பாவியாகிப்போன மனுக்குலத்தை நேசித்ததினால்தான் கிறிஸ்து மனிதனாக இப்பூமிக்கு வந்து தன்னை பலியாக்கி பாவியை பரிசுத்தனாக்கினார்.
தாழ்மையின் சிந்தையே.
எளியவர்களையும், வறியவர்களையும், பலவீனர்களையும், கைவிடப்பட்டவர்களையும், உடைந்துப்போனவர்களையும் குறித்து கரிசனைகொள்ள வைக்கின்றது.
பணக்காரன் எளியவனோடும், இருப்பவன் இல்லாதவனோடும், பலமுள்ளவன் பலமில்லாதவனோடும், படித்தவன் படியாதவனோடும், அழகுள்ளவன் அழ்கற்றவனோடும், சங்கமமாவதே கிறிஸ்தவம்.
கிறிஸ்தவம்…
வார்த்தை ஜாலமல்ல.
வாழ்க்கை நிகழ்வுகள்.
ஆகாயத்தில் சிலம்பம் அடிப்பதல்ல.
ஆழத்திலே நீச்சல் அடிப்பது.