ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டுமென்பதே ஆதி விசேஷம்

ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டுமென்பதே ஆதி விசேஷம்.

message that you heard from the beginning, that we should love one another. (1John 3:11)

1John 4:7; John 13:34,35; John 15:12; Galathians 6:2; Ephesians 5:2; 1Thesalo 4:9; 1Peter 3:8,9; 1Peter 4:8; 2John 1:5.

நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. (1யோவான்3:11)

1யோவான் 4:7; யோவான் 13:34,35; யோவான் 15:12; கலா 6:2; எபே 5:2; 1தெச 4:9; 1பேதுரு 3:8,9; 1பேதுரு 4:8; 2யோவான் 1:5.

ஆதி விசேஷம்.

விசேஷம் என்பது செய்தி, அறிவிப்பு, பிரகடனம், கட்டளை என்றுப் பொருள் படுகின்றது. ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டுமென்பது ஆதி கட்டளையாகும். இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் சீஷர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆதி கட்டளையாகும். இந்த கட்டளையை மூன்று விதங்களில் நாம் தியானிக்கலாம்.

முதலாவது, இது சீஷர்களுக்கான கட்டளையாகும். சீஷர்கள் தங்களில் ஒருவருக்கொருவர் அன்புகூரவேண்டும் என்பதாகும். யார் பெரியவர்? யார் விசேஷித்தவர்? என்றல்ல, ஒருவர் கால்களை ஒருவர் கழுவி, ஒருவர் குறைவை ஒருவர் நிவிர்த்தியாக்கி, ஒருவர் குற்றங்களைஒருவர் மன்னித்து ஒருவர் பாரங்களை ஒருவர் சுமந்து ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும்.

இரண்டாவது, இது இக்கால ஊழியர்களுக்கானது ஆகும். ஊழியர்களுக்குள் பொறுப்புகளின் அடிப்படையில் வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமப்பதில் ஒருவருக்கொருவர் உதவி செய்வது அவசியமாயிருக்கிறது. அனுபவங்கள், பொறுப்புகள் அடிப்படையில் வித்தியாசத்தை குறைகூறும்படியாக நடந்துக்கொள்ளலாகாது செயல்படுவது நல்லது. ஊழியர்கள் ஒருவர் குறைவை ஒருவர் சரி செய்து வாழ்வது அவசியமாயுள்ளது. வசதியுள்ள ஊழியர்கள் கிராமபுற ஊழியர்களை தேடிக் கண்டுபிடித்து உதவி செய்யும் பக்குவம் இக்காலத்தில் குறைந்துப்போயிற்று. ஆதி சபையில் குறைவுபட்ட சபைக்கு உதவி செய்யும் வழிமுறைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

மூன்றாவது, ஒரு கிறிஸ்தவன் இன்னொரு கிறிஸ்தவனிடம் அன்புகாட்டுவது பற்றியே இங்கு எழுதப்பட்டுள்ளது. கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு எதிர்த்து நிற்கிறவர்களிடமல்ல, அல்லது சமுகத்தில் காணப்படும் எளியவர்களுக்கு உதவி செய்வதை குறித்தல்ல, கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்குள் ஒருவர் குறைவை ஒருவர் சரி செய்து ஒருவர் குற்றங்களை ஒருவர் மன்னித்து ஒருவரிலொருவர் அன்புகாட்டவே போதிக்கின்றார். இதனால் சமுகத்தில் உள்ள எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம் என்று பொருளல்ல, தன்னிடத்தில் உள்ள குறைவுகளை சரி செய்யாது வெளியிலுள்ளோரின் குறைவுகளை சரி செய்வது உண்மையான அன்பல்ல, மாய்மாலமான அன்பேயாகும்.

அன்பு என்பதற்கு பிறரை நான் அறிவது ஆகும். என்னை நான் அறிந்திருப்பதுபோல பிறரை நான் அறிவதே உண்மையான அன்பாகும். ஒரு மேய்ப்பன் தன் மந்தையை அறிந்திருப்பதும், ஒரு நிர்வாகி தன் பணியாட்களை அறிந்திருப்பதும், ஒரு தகப்பன் தன் குடும்பத்தை அறிந்திருப்பதுமே உண்மையான அன்பாகும். இந்த அறிவே ஒருவரிலொருவர் அன்புகூருவதற்கு அடிப்படையாகும். சொல்லும் செயலும் ஒன்றுபோலிருப்பதே உண்மையான அன்பாகும்.

கேள்வி. நான் இன்னொருவரை எந்த அளவுக்கு அறிந்திருக்கிறேனோ அந்த அளவுக்கு இன்னொருவருக்குள் அன்பை வெளிபடுக்த்துகிறேனா?..

மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும் மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து, தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள். ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்.
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது. நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்?. 1பேதுரு 3:8-13.

ADD YOUR COMMENT

Powered By Indic IME