பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியுள்ளார்கள்

பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியுள்ளார்கள்.

because many false prophets have gone out into the world. (1John 4:1)

1John 2:18; Matthew 24:5,23-26; Mark 13:21,22; Luke 21:8; Acts 20:29; 1Timothy 4:1; 2Timothy 3:13; 2Peter 2:1; 2John 1:7.

பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். (1 யோவான் 4:1)

1யோவான் 2:18; மத்தேயு 24:5,23-26; மாற்கு 13:21,22; லூக்கா 21:8; அப்போஸ்தலர் 20:29; 1தீமோத்தேயு 4:1; 2தீமோத்தேயு 3:13; 2பேதுரு 2:1; 2யோவான் 1:7.

கள்ளதீர்க்கதரிசிகள் உண்டு.

தீர்க்கத்தரிசி என்றால் தேவனுக்காக மனிதரிடம் வந்து நிற்கிறவன். தேவனுடைய நீதியை எரியும் தீவட்டியாக மனிதரிடத்தில் சுமந்து வருகிறவன். தேவனுடைய இருதயத்தை மனிதரிடையில் திறந்துக் காண்பிக்கிறவன். தேவனுடைய பரிசுத்தத்தை மனிதரிடையில் பிரகடனப்படுத்துகிறவன். முன் நடந்தவைகளையும் பின் நடக்கப் போகிறவைகளையும் சுட்டிகாட்டி நிகழ்காலத்தில் ஜனங்களின் இருதயத்தை தேவனிடமாய் திருப்புகிறவன். தன் தகுதியைக் குறித்தோ, தான் அடையப்போகும் பாடுகளைக் குறித்தோ, தன்னை அவமனப்படுத்துகிறது குறித்தோ கவலைப்படாதவன். தன் பணியை முடித்துக்கொண்டு அடையாளம் தெரியாதவனாய் மாறுகிறவன். இத்தியாதி ஏழு குணங்களும் உடைய ஒரு தீர்க்கதரிசி ஜனங்களிடையில் காணப்பட வேண்டும் என்பது தேவனுடைய விருப்பம். இயேசு கிறிஸ்து, யோவான் ஸ்நானகன் போன்றோர் இவ்விதமே காணப்பட்டனர்.

ஆதி சபையிலிருந்து இன்று வரையிலும் ஜனங்களிடையில் இரண்டுவிதமான கள்ளதீர்க்கதரிசிகள் காணப்படுகின்றனர். ஒன்று சபைக்கு உள்ளே காணப்படும் கள்ளதீர்க்கதரிசிகள், இன்னொன்று சபைக்கு வெளியே காணப்படும் கள்ளதீர்க்கதரிசிகள். கள்ள தீர்க்கதரிசிகளையும், தேவனுடைய தீர்க்கதரிசிகளையும் அடையாளம் கண்டுக் கொள்ள இயலாதபடிக்கு அற்புதங்களும் அடையாளங்களும், ஆசீர்வாதங்கள் சார்ந்தவைகளும் அவர்களை மூடிக்கொண்டுள்ளன. எந்தவொரு தேவனுடைய தீர்க்கதரிசியும் பொருளாசை, விபசாரம், அந்நியமார்க்கம் ஆகிய மூன்று பெரிய பாவங்களோடு எவ்விதத்திலும் தன்னை இணைத்துக்கொண்டு தன்னை அசுசிபடுத்திக்கொள்ள மாட்டான். அநேக தீர்க்கதரிசிகளில் பொருளாசை என்ற செழிப்பு சார்ந்த இச்சை மண்டி கிடக்கின்றது. ஐசுவரியம் தேவன் கொடுப்பதுதான். அதை தவறாக பயன்படுத்தாது தேவ இராஜ்யத்தின் எழுச்சிக்காக மட்டுமே பயன்படுத்த கொடுக்கப்படுகின்றது. இதை தவிர்த்து ஐசுவரியத்தை தனதாக்கிக் கொண்டு தன்னை வளர்த்துக்கொள்ளுகிற எந்த தீர்க்கதரிசியும் கள்ளதீர்க்கதரிசியே.

விபசாரம், வேசித்தனம் சார்ந்த இச்சைகள் அனேக தீர்க்கதரிசிகளிடம் காணப்படுகின்றது. ஆனால், சிலர் வெளியரங்கமாயும், பலர் ரகசியமாயும் இந்த பாவத்தில் வாழ்கிறார்கள். மனைவி அல்லது கணவன் உயிரோடிருக்க விவாகரத்து பண்ணிக்கொண்டு வேறு திருமணம் செய்துக்கொள்கின்ற எந்த தீர்க்கதரிசியும் கள்ளதீர்க்கதரிசியே. இதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை. உண்மை தீர்க்கதரிசி இச்சையை விட்டு வெளியேறினவன். சிந்தையும் மாம்சீக உடலும் ஆவியின் கட்டுபாட்டுக்குள் கொண்டவன். இன்னும் பல.

அந்நியமார்க்கம் என்பதை அந்நிய தெய்வங்கள் சார்ந்தவை என்றுக் கூறுகின்றேன். அந்நிய தெய்வங்களோடு இணைக்கப்பட்டுள்ள எந்த கலாச்சாரமும், நாமங்களும், பயிற்சிகளும், உபதேசங்களும் ஒரு தீர்க்கதரிசியால் கைக்கொள்ளப்படுமானால் அவன் நிச்சயமாக கள்ளதீர்க்கதரிசியே. சமரச சமய போதனைகளிலும், கூட்டு ஜெபங்களிலும் சார்ந்துக்கொண்டு செயல்படுகிறவர்களும் கள்ளதீர்க்கதரிசியே.

ஓசியா சொல்வதுபோல வேசித்தன ஆவி அவர்களை வழிதப்பி திரிய வைக்கிறது. தேவனுடைய மனிதர்களே சமரசம் செய்துக்கொள்ள இயலாது. இப்படிப்பட்டவர்களை விட்டு விலகுங்கள்.

கேள்வி. கர்த்தரின் இருதயத்தை திறந்து காண்பிக்கும் ஒரு தீர்க்கதரிசியை உங்கள் வாழ்நாளில் பார்த்ததுண்டா?.

எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை. தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்து விடு. எருசலேமின் பாழான ஸ்தலங்களே, முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார். எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள். புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்.
நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார். ஏசாயா 52:1,2,9-12

ADD YOUR COMMENT

Powered By Indic IME