நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்
whatever we ask we receive from Him, because we keep His commandments and do those things that are pleasing in His sight. (1John 3:22)
1John 5:14; Matthew 7:7,8; Matthew 21:22; Mark 11:24; Luke 11:9-13; John 9:31; John 14:13; 15:7; John 16:23,24; James 1:5; James 5:16; Psalms 10:17; P#lms 34:4,15-17; Psalms 50:14,15; Psalms 145:18-20; Proverbs 28:9.
அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம். (1 யோவான் 3:22)
1யோவான் 5:14; மத்தேயு 7:7,8; மத்தேயு 21:22; மாற்கு 11:24; லூக்கா 11:9-13; யோவான் 9:31; யோவான் 14:13; யோவான் 15:7; யோவான் 16:23,24; யாக்கோபு 1:5; யாக்கோபு 5:16; சங்கீதம் 10:17; சங்கீதம் 34:4,15-17; சங்கீதம் 50:14,15; சங்கீதம் 145:18-20; நீதிமொழிகள்28:9.
பெற்றுக்கொள்ளுதல்.
தேவனால் எல்லாம் உண்டாயிற்று. ஆகையினால் தேவனாலே எல்லாம் கிடைக்கிறது என்பது பொதுவான விவிலிய உபதேசம். யாக்கோபு 1:17 ன் படி எல்லாம் அவரிடமிருந்தே உண்டாகி வருகின்றது என்றுக் கூறப்பட்டுள்ளது. கேட்பவர்களுக்கு கொடுக்கிறார் என்பது இயேசுவின் போதனை, மட்டுமல்ல அது சபையின் கொள்கையாகும். மேலும் அது பக்தனின் அனுபவமாகும். ஆண்டவரிடமிருந்து ஒன்றைப்பெற்றுக்கொள்வதற்கு ஐந்து விதிமுறைகளை வகுத்துள்ளார் யோவான். இதனை தன் அனுபவத்தில் கொண்டிருந்ததினால்தான் எழுதி வைத்துள்ளார்.
முதலாவது, ஆண்டவரின் கற்பனைகளை கைக்கொள்ள வேண்டும். சாக்குபோக்கு சொல்ல முடியாது. சிறு வயதிலிருந்து கர்த்தரின் கட்டளைகளின்படி வாழ வேண்டும். ஒழுங்குமுறை இல்லாமல் வாழ்வு வாழ இயலாததுபோல கற்பனைகளை புறந்தள்ளி ஆண்டவரிடமிருந்து ஒன்றையும் பெற்றுக்கொள்ள முடியாது. கட்டளைகளே விளக்கு. சரியான திசைக்கு செல்லும்படியான கலங்கரை விளக்கு.
இரண்டாவது ஆண்டவருக்கு பிரியமானவைகளை செய்ய வேண்டும். அவர் விரும்பும் நற்கிரியைகள் செய்வதற்காகவே நம்மை இரட்சித்துள்ளார். நற்கிரியைகள் என்பது கொடுப்பது, உதவுவது, சுமப்பது போன்ற பண்புகள் கொண்டதாகும். அவருக்கு பிரியமானதை செய்து நிறைவேற்றிய இயேசுவைபோல நடந்துக்கொள்ள வேண்டும். மரணமே வருகிறதாயிருந்தாலும் அவரை பிரியப்படுத்துவதை விட்டு விடலாகாது.
மூன்றாவது, குற்றமற்ற மனசாட்சி உடையவனாயிருக்க வேண்டும். பரிசுத்த ஆவியின் நிறைவு மட்டுமே குற்றமற்ற மனசாட்சியை உருவாக்கும். ஏனெனில் அங்கே கர்த்தரின் கற்பனைகள் வடிவம் பெற்று செயற்பாடாக மாறும். வழுவிப்போகாமை, இடறிபோகாமை, பின்வாங்காமை போன்றவைகள் யாவும் குற்றமற்ற மனசாட்சியின் தன்மையாகும். பிறர் தன்னில் குற்றம் கண்டுபிடிக்க இயலாதபடி வாழ முயற்சிப்பதுவும் ஆகும். குற்றமற்ற மனசாட்சியில் பிறக்கும் அன்பே உண்மை அன்பாகும்.
நான்காவது, கிரியையினாலும், உண்மையினாலும் அன்புகூருதல். இதனை உளபூர்வமான செயல் என்று முன்னர் கூறினோம். மேற்சொன்ன மூன்றின் அடிப்படையில் செயலிலும், வாக்கிலும் உண்மையுள்ளவனாயிருத்தல் ஆகும். செய்வதை உண்மையாகவும், மனவிருப்பபடியும் செய்வது ஆகும். கடமைக்காக செய்வதல்ல, மனவிருப்பத்தின்படி செய்வதாகும்.
ஐந்தாவது, வேண்டிக்கொள்வது ஆகும். எல்லாம் செய்திருந்தும் அவரிடம் கேட்பது நடைமுறையில் இல்லாதிருக்குமானால் பெற்றுக்கொள்வது சாத்தியமில்லை. தேவை என்ற மனோபாவமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கும். கொடுப்பவர் குறித்த தெளிவே கேட்கவேண்டும் என்ற வாஞ்சையை உண்டாக்கும். நமது தேவைகள் அவருக்கு சித்தமானபடி அமையுமானால் அவரிடம் கேட்பதும், வேண்டுவதும் எளிதாகும். பெற்றுக்கொள்வது சுலபமாகும்.
நாம் பெற்றுக்கொள்ளுகிற இடத்தில் இருப்பது உண்மையாயின் அவர் கொடுக்கிற இடத்தில் இருக்கிறார் என்பதுவும் உண்மையேயாகும்.
கேள்வி. நாம் அவரிடமிருந்து பெற்றுக்கொள்வதினால் அவருக்கு என்ன லாபம்?.
சர்வாங்க தகனபலிகளோடே உமது ஆலயத்திற்குள் பிரவேசிப்பேன்; என் இக்கட்டில் நான் என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன். ஆட்டுக்கடாக்களின் நிணப்புகையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக இடுவேன்; காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன். அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார். என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார். மெய்யாய் தேவன் எனக்குச்செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. சங்கீதம் 66: 13-20.