தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவர்.

தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவர்.

God is greater than our heart, and knows all things. (1John 3:20)

1John 4:4; John 2:24,25; John 10:29,30; John 21:17; Hebrew 4:13; Hebrew 6:13; Revalation 2:23; Job 33:12; Psalms 44:20,21; Psalms 139:1-4; Jermiah 17:10; Jermiah 23:24.

நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார். (1 யோவான் 3:20)

1யோவான் 4:4; யோவான் 2:24,25; யோவான் 10:29,30; யோவான் 21:17; எபிரெயர் 4:13; எபிரெயர் 6:13; வெளி 2:23; யோபு 33:12; சங்கீதம் 44:20,21; சங்கீதம் 139:1-4; எரேமியா 17:10; எரேமியா 23:24.

இருதயத்திலும் பெரியவர்.

தேவன் சிருஷ்டி கர்த்தாவாக அறியப்படுகின்றார். காணப்படுகிறவைகள், காணப்படாதவைகள் அனைத்துக்கும் அவரே சிருஷ்டி கர்த்தாவாவார். மனிதனை படைத்தவரும் அவரே. மனிதனின் இருதயத்தையும், சிந்தையையும் உருவாக்கினவர் அவரே. மனிதனுடைய இருதயத்தின் ஆழத்தையும் அகலத்தையும் அறிய அவரால் இயலும். மனித இருதயத்தின் நினைவுகளையும் அதின் எல்லைகளையும் அவரால் அறிய இயலும். மனதின் நீரோட்டங்களை, நீர்கால்களை அவரே திருப்புகிறார். சிலரின் நீர்கால்களை துன்மார்க்கத்துக்கும், சிலரின் நீர்கால்களை சன்மார்க்கத்துக்கும், சிலரின் நீர்கால்களை மனந்திரும்புதலுக்கும் திருப்புகிறார். ஏன் இப்படி செய்கிறீர் என்று ஒருவரும் அவரிடம் கேட்க இயலாது.

அவர் நம்மை விடவும் பெரியவர். அவர் நமது மனதையும், இருதயத்தையும் விட பெரியவர். ஆகையினால் நம் இருதயம் எங்கே அனல்கொள்கிறது, எதிலே அனல் கொள்கிறது என்பதையும் அறிகின்றார். உலகத்திலே அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை, ஓரிடமுமில்லை. அதை போன்று அவருக்கு மறைவாக மனதில் ஒன்றையும் மறைத்து வைக்க இயலாது. நாம் உளபூர்வமாக தேவனின் கட்டளைகளை கைக்கொள்கிறோமா என்று நாமோ, பிறிதொருவரோ அவருக்கு சாட்சி பகர வேண்டியதில்லை. நமக்குள் உள்ள அன்பின் நிறம் என்ன என்பதையும், தன்மை என்ன என்பதையும் குறித்து அவருக்கு போதிக்க வேண்டியதில்லை. யோவான் 21:15-17. நாம் கீழ்படியாமல் இருந்துக்கொண்டு உளபூர்வமாக அன்பு செலுத்தாமலிருந்து கொண்டு வாயின் வார்த்தைகளால் அவரிடம் பொய் சொல்ல இயலாது. நமது வாயின் வார்த்தைகள் நம்மிலிருந்து புறப்படும் அதே நேரத்தில் நமது இருதயத்தையும் ஆராய்கிறார். ஆகையினால் நமது இருதயத்தின் குற்ற பின்னணியத்தையும், அல்லது குற்றமற்ற தன்மையையும் அவரிடம் வெளியரங்கமாய் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.

மனசாட்சியின் வெளியரங்கம் வார்த்தைகளில் ஒளிவு மறைவின்றி வெளிப்படும். அவ்விதம் வெளிப்படாதிருக்குமானால் நமது நடக்கைகளில் செயல்களில் நம்மை அறியாமலே அவைகள் வெளிப்பட்டுவிடும். அப்பொழுது நாம் அவர் முன்பாக குற்றவாளிகளாகவோ, அல்லது உத்தமர்களாகவோ அறியப்படுவோம். அவர் நமக்குள் உருவாக்கி வைத்துள்ள இருதயம், மனசாட்சி போன்றவற்றை அவரே இயக்குவதினால் நாம் வெளிப்படையாக நடந்துக் கொள்ள வேண்டும். தவறை தவறு என்றும், உண்மையை உண்மை என்றும் ஒத்துக்கொண்டு வாழ வேண்டும். நாம் அவமானபடுவோம் என்று நினைத்துக்கொண்டு ஒன்றை மறைப்பதினால் தேவன் முன்னிலையில் நமது உத்தமத்தை இழந்து விடுகிறோம். ஊழியர்கள் இதை குறித்து விழிப்புடன் காணப்பட வேண்டும். நம் இருதயத்தை அடைக்கிறவரும் அவரே, அதை திறந்து பார்க்கிறவரும் அவரே. நாம் அவரின் ஊடுருவும் கண்களிலிருந்து தப்பவியலாது. அவர் நம் இருதயத்திலும் பெரியவர். இருதயத்தையும் அறிகிறவர்.

கேள்வி. இருதயத்தில் ஒளித்து வைக்கப்படும் நிகழ்வுகளின் அடிப்படையில்தான் நமக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதை அறிவீர்களா?

பவுல் ஆலோசனை சங்கத்தாரை உற்றுப்பார்த்து: சகோதரரே இந்நாள் வரைக்கும் எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடே தேவனுக்குமுன்பாக நடந்துவந்தேன் என்று சொன்னான். அப்போஸ்தலர் 23:1..
நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன். அப்போஸ்தலர் 24:16…

நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,
கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்றபிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள். பிலிப்பியர் 2:14-16..

ADD YOUR COMMENT

Powered By Indic IME