பொல்லாங்கனால் உண்டாயிருந்த காயீனைப்போலிருக்கவேண்டாம்
not as Cain who was of the wicked one and murdered his brother. (1John 3:12)
Gensis4:4-15; Hebrew 11:4; Jude 1:11; Matthew 13:19,38; 1John 3:8; 1John 2:13,14.
பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம். அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே. (1 யோவான் 3:12)
ஆதியாகமம் 4:4-15; எபிரெயர்11:4; யூதா 1:11; மத்தேயு 13:19,38; 1யோவான் 3:8; 1யோவான் 2:13,14.
காயீன்.
காயீன் பொல்லாங்கனால் உண்டானவன், பிறந்தவன், தோன்றியவன் என்று கூறுகின்றார். பொல்லாங்கன் என்றால் கெட்ட தன்மைக் கொண்டவன், கெட்ட சிந்தைக் கொண்டவன், கெட்ட செயல்களை செய்கிறவன் என்று பொருளாகும். காயீன் உலகத்தின் முதல் மனுமகனாயிருக்கின்றான். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிறந்த முதல் மனித வித்து, மனித குமாரன் ஆவான். சிலர் சொல்லுகிறபடி காயீன் ஏவாளுக்கும் சர்ப்பத்துக்கும் பிறந்தவன் அல்ல. அது தவறான உபதேசமாகும். தேவனுடைய கட்டளையை மீறி பாவம் செய்து தேவனால் சாவையும், விலக்கப்படுதலையும் பெற்றுக்கொண்ட ஆதாம் ஏவாளின் மனித சேர்க்கையில் உண்டான முதல் மனிதகுமாரன். ஆதாமும் ஏவாளும் பொல்லாங்கனாகிய சாத்தானால் அடிமைபடுத்தப்பட்டதினால் அவர்களுக்கு பிறந்த முதல் பிள்ளை பொல்லாங்கனால் உண்டானவனாயிருக்கின்றான். தேவனால் சேர்க்கைக்குட்படுத்தப்பட்ட ஆதாமும் ஏவாளும் பாவம் செய்யாதிருந்து தேவனால் உண்டாயிருக்கும் முதல் மனித குமாரனை பெற்றெடுத்திருக்க வேண்டும். ஆனால் முதல் கனி தேவனுக்கு கிடைக்காமல் போனது.
இதினிமித்தம் தேவன் இரு காரியங்களை செய்தார். முதலாவது பொல்லாங்கனுக்கு அடிமைபட்டுப்போன ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தேவன் தமது தண்டனையை கொடுத்து உணர்வுள்ளவர்களாக்கி ஒரு மனுமகனைக் கொடுத்தார். அவன் ஆபேல் எனப்பட்டான். காயீன் சாத்தானின் குணத்தையும், ஆபேல் தேவனின் குணத்தையும் கொண்டவர்களாயிருந்தனர். இரண்டாவது, பொல்லாங்கனால் உண்டான மனுகுலத்தை மீட்டெடுக்க தேவன் தமது குமாரனை ஆண் பெண் சேர்க்கையின்றி பிறப்பித்தார். அவர்தான் மனுமகனாகிய இயேசு கிறிஸ்துவின் ஆவார். இவர்மூலம் மனுகுலம் மீட்டெடுக்கப்படும்.
தேவனுடைய பிள்ளைகள் இரண்டு காரியங்களை செய்யக்கூடாதபடிக்கு கற்பிக்கப்படுகிறார்கள். ஒன்று அந்நிய நுகத்தில் அவிசுவாசியுடன் பூட்டப்படாதிருக்க வேண்டும். இன்னொன்று பெற்றோரின் கீழ்படியாமையினால் பிறப்பிக்கப்படும் பிள்ளைகள் தேவனுடைய இராஜ்யத்துக்கு எதிராகவே இருப்பார்கள். ஆகையினால் பொல்லாங்கனின் தன்மைகளை துறந்து தேவகுமாரனின் தன்மையுடையவர்களாயிருப்போம்.
கேள்வி. கிறிஸ்துவுக்குள் திருமணம் செய்து பிறந்த பிள்ளைகள் கிறிஸ்துவுக்குள் பிள்ளைகளை பெற்றெடுக்காமல் பிறந்த பிள்ளைகளின் அல்லது பிற்பாடு இரட்சிக்கப்பட்ட பிள்ளைகளை திருமணம் செய்து கொள்ளலாமா?
ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன். அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான், சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான். இவைகள் ஞான அர்த்தமுள்ளவைகள்; அந்த ஸ்திரீகள் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையிலுண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளைபெறுகிறது, அது ஆகார் என்பவள்தானே. ஆகார் என்பது அரபிதேசத்திலுள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி; இவள் தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்டிருக்கிறாளே. மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள். அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, களிப்பாய் எழும்பி ஆர்ப்பரி; புருஷனுள்ளவளைப் பார்க்கிலும் அநாத ஸ்திரீக்கே அதிக பிள்ளைகளுண்டு என்று எழுதியிருக்கிறது.
சகோதரரே நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம். ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினது போல, இப்பொழுதும் நடந்துவருகிறது.
அதைக்குறித்து வேதம் என்னசொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது. இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம். கலாத்தியர் 4:22-31.