பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
For this purpose the Son of God was manifested, that He might destroy the works of the devil. (1John 3:8)
1John 3:5; Mark 1:24; Luke 10:18-20; John 12:31; John 16:11; Romans 16:20; Revalation 20:2,3,10,15; Isaiah 27:1; Collossians 2:13-15.
பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான். ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். (1 யோவான் 3:8)
1யோவான் 3:5; மாற்கு 1:24; லூக்கா 10:18-20; யோவான் 12:31; 16:11; ரோமர் 16:20; வெளி 20:2,3,10,15; ஏசாயா 27:1; கொலோசெயர் 2:13-15.
அழிப்பதே நோக்கம்.
இயேசு கிறிஸ்து மனிதகுமாரனாக வெளிப்பட்டதின் நோக்கம் கூறப்பட்டுள்ளது. பிசாசின் கிரியைகளை – செயல்களை அழிப்பதற்காகவே மனிதகுமாரனாகிய இயேசு தோன்றினார்.
ஆதிமுதல் தேவனுடைய கிரியைகள் நல்லதாகவும், நன்மை பயக்குவிப்பதாகவும் இருந்தது. தீமைக்கு இடம் கொடுத்த சாத்தான் தேவனுடைய நற்செயல்களை குலைத்துப்போடும்படியாகவும், அழித்துப்போடும்படியாகவும் ஆதிமுதல் செயல்பட்டு வருகின்றான். பிசாசினுடைய இத்தகைய செயல்களை தடுத்து நிறுத்தவும், அவைகளை அழிக்கவும் தேவன் பிரமாணத்தைக்கொடுத்து பிரமாணத்துக்கு உட்பட்ட தமது மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார். அதுமுதல் தேவனுடைய ஜனத்தாருக்கும், பிசாசினுடைய ஜனத்தாருக்கும் இடையில் பகைமை உண்டாகி அது யுத்தம் வரையிலும் செல்லுவதாக உள்ளது.
இயேசு கிறிஸ்து பிசாசை ஜெயித்தார். வார்த்தையினாலும், ஆவியினாலும், விரலினாலும் சாத்தானை ஜெயித்தார். அவனுடைய செயல்களை அழித்து மனிதகுலத்துக்கு புதுவடிவம் கொடுக்க அற்புதங்களை நடப்பித்தார். மரணத்தை, வியாதிகளை ஜெயித்தார். குருடர்கள் பார்வையடைந்தனர். முடவர்கள் எழும்பி நடந்தனர். இருளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. அறியாமை அகன்றது. கட்டப்பட்டவர்களை கட்டவிழ்த்தார். பிசாசை கட்டினார். நற்போதகங்கள் கொடுத்து நற்கிரியைகளை செய்ய வைத்தார். இதனால் சாத்தானின் பொல்லாத கிரியைகளுக்கு முடிவுண்டாகி தேவனுடைய கிரியைகள் புது பொலிவுடன் ஜொலிக்க ஆரம்பித்தது.
அழிப்பது என்பதற்கு கட்டவிழ்ப்பது, அகற்றுவது, இல்லாமல் ஆக்குவது என்று பொருளாகும். அகற்றுதலையும் கட்டவிழ்த்தலையும் நடத்தினார் , இன்றும் நடத்தி வருகிறார். அவனை இல்லாமல் ஆக்கும் திருப்பணியை செய்யும்படி காத்துக்கொண்டிருக்கிறார்.
சாத்தானின் செயல்களாகிய துன்மார்க்கமான செயல்கள் இக்காலத்தில் அதிகரித்துக் காணப்படுகிறது. இழந்துபோன செல்வாக்கை திரும்பவும் நிலைநாட்ட பிசாசானவன் தனது ஏவலாட்களை ஏவிவிட்டுக் கொண்டேயிருக்கின்றான். அன்று ஜெலபெருக்கினால் துர் கிரியைகளுக்கு முடிவுண்டாக்கியதுபோல இன்று அக்கினியினால் துர்கிரியைகளுக்கு முடிவுண்டாக்க தேவன் காத்துக்கொண்டிருக்கிறார். பாவம் பெருகும் இடத்தில் தேவ கிருபை பெருகுவது உண்மைதான். ஆனால் தேவனுடைய கோபம் பற்றியெரிவதையும்நாம் அடிக்கடி காண்கின்றோம். துர்கிரியைகளின் பெருக்கம் அதிகரிக்கும்போது தேவனுடைய ஆதிகிரியைகளாகிய இயற்கை தனது வேலையை செய்யும்படியாக எழும்பும். அதுவே இக்காலத்தில் நாம் காணும் கொரொனா வைபவம். இத்தியாதி மாற்றம் 100 வருடங்களுக்கு ஒரு முறைபூமியில் நடப்பிக்கப்படுகின்றது.
நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் தேவன் நன்மை செய்கிறார்.
கேள்வி. பிசாசின் செயல்கள் அழிக்கப்படுவதற்காகத்தான் சில நேரங்களில் தேவன் பொறுமையாயிருக்கிறாரோ?.
பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். எபிரேயர் 2:14,15.
தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.
அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். 2தெசலோனிக்கேயர் 1:7-10…