உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.
Therefore the world does not know us,because it did not know Him. (1John 3:1)
John 1:10; Luke 23:34; Matthew 13:14; Matthew 22:29; Matthew 26:74; Luke 19:43,44; Luke 24:16; John 17:25; Acts 3:17; Acts 17:23; Romans 1:28.
நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள். உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. (1 யோவான் 3:1)
யோவான் 1:10; லூக்கா 23:34; மத்தேயு 13:14; மத்தேயு 22:29; மத்தேயு 26:74; லூக்கா 19:43,44; லூக்கா 24:16; யோவான் 17:25; அப்போஸ்தலர் 3:17; அப்போஸ்தலர் 17:23; ரோமர் 1:28.
அறியாத உலகம்.
மாம்சத்தில் வந்த இயேசுவை இன்னாரென்று அறியாமல் அவரை இஸ்ராயேலர்கள் சிலுவைக்கு ஒப்புக்கொடுத்தனர். அவரது இரத்தத்தினால் உண்டான சபையையும் உபத்திரவபடுத்தினார்கள். இஸ்ராயேலர்கள் இன்று வரையிலும் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு காலம் வரப்போகிறது என்று தீர்க்கதரிசிகள் கூறியுள்ளனர்.
யோவான் இவ்விடத்தில் உலகம் இயேசுவை அறியவில்லை என்று குறிப்பிடுகின்றார். யோவான் சுவிசேஷத்திலும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. கர்த்தராகிய இயேசு இவ்வுலகத்திலே வந்தார். முழு உலகிற்கும் தேவனாகிய கர்த்தர் தமது மகனை முழு உலகின் மீட்பிற்காக இஸ்ராயேலரிடையில் அனுப்பினார். இயேசு கிறிஸ்து பாவிகளை இரட்சிக்க வந்த உலக இரட்சகர் என்பதை அறியாதிருந்ததினால் தான் இஸ்ராயேலரின் அறியாமையை பயன்படுத்தி உரோமர்கள் இயேசுவை சித்திரவதை செய்தனர். சபை உருவானபின்பு இதே உரோமர்கள் கிறிஸ்தவ சபைகளை பல வருடங்கள் உபத்திரவபடுத்தினர். அவர்கள் இயேசுவை இன்னார் என்று அறியாததினால் அவரை பின்பற்றியவர்களையும் கொடுமை படுத்தினர்.
அன்றுமுதல் இன்று வரையிலும் உலகத்தின் ஒவ்வொரு இனகுழுக்களினாலும், மொழி அமைப்புகளினாலும், அரசியல் சித்தாந்தங்களினாலும், சமயவாதிகளினாலும், சமுகவாதிகளினாலும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபை துன்புறுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு காரணம் கிறிஸ்துவை இன்னார் என்று அறியாததுவே ஆகும். இதினிமித்தம் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களையும் நரமாம்ச பட்சிகள் என்றும், தேச துரோகிகள், மததுரோகிகள் என்றும் முத்திரை குத்தி உபத்திரவபடுத்துகின்றார்கள்.
இயேசுவை அறியாத உலகம் இயேசுவை நிராகரித்ததுபோலவே அவரை பின்பற்றுகிற நம்மையும் இந்த உல்கம நிராகரிக்கும். அவர்கள் நம்மை வெறுக்கவும், நிராகரிக்கவும் இது அவர்களின் வேளையும், தேவனுடைய சித்தமுமாயிருகிகிறது. நமது காலங்கள் அவரின் கரங்களிலிருந்து நமது கரங்களுக்கு வருவது வரையிலும் நாம் பொறுத்திருப்போம்.
கேள்வி. நம்மை எதிர்க்கிறவர்களை நாம் எதிர்ப்பதற்கு இயேசு கிறிஸ்துவும் அவரது விவிலியமும் நமக்கு கற்றுதந்துள்ளதா?…
கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர்: நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள். நாம் தேவனுடைய சந்ததியாயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையிலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.
அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார். அப்போஸ்தலர் 17:27-31.