சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாகாது

சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாகாது.

because you know the Truth, and that no lie is of the truth. (1John 2:21)

Proverbs 1:5,6; Proverbs 9:8,9; Romans 15:14,15; 2Peter 1:12; Psalms 119:118; Proverbs 11:9; Isaiah 32:1-8; John 10:5.

சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். (1 யோவான் 2:21)

நீதிமொழிகள் 1:5,6; நீதிமொழிகள் 9:8,9; ரோமர் 15:14,15; 2பேதுரு 1:8; சங்கீதம் 119:118; நீதிமொழிகள் 11:9; ஏசாயா 32:1-8; யோவான் 10:5.

பொய்யில்லா சத்தியம்:

பொய் என்பது உளபூர்வமான மாறுபாடாகும். எது இல்லையோ அதை இருப்பதாக பாவிப்பதே பொய்யாகும். உண்மைக்கு மாறானது பொய்மையாகும். சகலத்தையும் அறிந்துக்கொள்ளும்படியாக கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டவனில் சத்தியம் வாழ்ந்திருக்கும். அப்படிப்பட்ட சத்தியத்தை அறிந்தும், அனுபவித்தும், அறிவித்தும் செயல்படுகிறவர்களுக்கு யோவான் இந்நூலை எழுதுகின்றார். அதாவது சத்தியத்தில் ஒரு பொய்யும் இல்லை என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார்.

பொய் கலவாத சத்தியத்தை அறிந்திருக்க வேண்டும். உண்மைக்கும் பொய்யுக்கும் உறவு இல்லை. ஆகவே எவ்விதமான சத்தியத்தோடும் பொய்மை கலந்திருக்காது. ஆகவே சத்தியத்தை அறிய வாஞ்சிக்கிறவன் அதற்காய் செயல்படுகிறவன் பொய்யை விட்டு பிரிந்து நிற்கின்ற சத்தியத்தை மட்டுமே அறியவும் கற்கவும் வேண்டும். என்னுடைய இறையியல் கல்வியில் ஏராளமான பொய்மைகளை கொண்டுள்ள – பொய்யாய் பெயர் பெற்றுள்ள சத்தியங்களைக் கண்டு கொண்டேன். விவிலியத்தை சிறு வயது முதலே நன்றாக அறிந்திருந்ததினால் இறையியலில் பிணைந்து கிடக்கின்ற பொய்மைகளை விட்டு உண்மை இறையியலை அறிய வேண்டும் என்று பிரயாசப்பட்டேன். அதையே இன்றும் நடைமுறைப்படுத்துகின்றேன். என்னுடைய இறையியல் சித்தாந்தமானது விவிலிய இறையியல் சித்தாந்தம். நடைமுறை இறையியலாக எடுத்துரைப்பதாகும்.

சத்தியத்தில் பொய் இல்லை என்பதை அறிந்திருக்க வேண்டும். கிறிஸ்துவே சத்தியம். கிறிஸ்துவே உண்மை. கிறிஸ்துவின் உபதேசங்கள் உண்மையின் உபதேசங்கள். கிறிஸ்துவின் கிரியைகள் தூய்மையானதும் உண்மையானதுமாகும். கிறிஸ்துவில் – கிறிஸ்துவின் ஆளுமையில் பொய்மையின் சாயல் இணைந்திருக்கவில்லை. அவரது உண்மையின் சாயலுக்கு முன்பாதாக பொய்மையின் பண்பாளனாகிய சாத்தானாலும், பொய்யர்களினாலும் நிற்க முடியவில்லை. உண்மையை – சத்தியத்தை சத்தியமாக போதிக்கும் நம்மில் பொய்மையின் குணநலன்கள் ஒட்டிக்கொண்டுள்ளதானால் நம்மிலிருந்து வெளிப்படுவது சத்தியமல்ல என்பதை உணர்ந்துக் கொள்வோமாக.

சத்தியத்தை அறிவிக்கிறோம் என்று சொல்லுகிறவர்கள் பொய் சொல்லுகிறவர்களல்ல. ஆதி அப்போஸ்தலர்கள் பிற எல்லா ஊழியர்களும் உண்மையை உறுதியாய் பற்றிக்கொண்டு நின்றதினால்தான் இவ்வுலகில் தங்கள் உயிரை இழந்தார்கள். தாங்கள் அறிவிக்கும் சத்தியம் உண்மையுள்ளதாயிருப்பதினால் தங்களில் ஒரு பொய்யும் இருக்கலாகாது என்பதில் கவனமாயிருந்தார்கள். சத்திய சுவிசேஷத்தை உலகெங்கும் அறிவித்து கொண்டிருக்கும் எத்தனை பேர் உண்மையோடும் உத்தமத்தோடும் வாழ்கிறார்கள் என்பதை ஆராய்ந்து பாருங்கள். வழிகளிலே பொய் சொல்லுகிறார்கள். உறவிலே பொய்யாய் நடக்கிறார்கள். கொடுக்கல் வாங்கலில் பொய்யை ஊதுகிறார்கள். அபிஷேகத்தில் அந்திய அக்கினையை கொழுந்துவிட்டு எரிய செய்கிறார்கள். இன்னும் பல. இவர்கள் பிரசங்க மேடையிலே சத்திய நெருப்பாய் ஜொலிக்கிறார்கள். எனக்கு விளங்கவில்லை. என் ஆவியில் சமாதானம் இல்லை. போதகனை பாராதே, போதகத்தை பார் என்பது பொய். போதகனை பார் போதகத்தை கவனி என்பதே மெய். சத்தியத்தை சத்திய வாசகன் மட்டுமே அறிவிக்க முடியும். அப்பொழுது சத்திய ஆவி ஊற்றப்படுவார். எழுப்புதல் உண்டாகும். வேறு வழியில் எழுப்புதல் வரவே வராது. சரித்திரத்தில் நடந்த நிகழ்வுகளிலெல்லாம் இதுவே நடைமுறையாயிருந்துள்ளது.

கேள்வி. அபிஷேகம் பெற்றவனின் நாவில் பொய்யின் ஆவி, கண்களில் பொய்யின் காட்சி, நடைமுறையில் பாசங்கு இருப்பதின் பொருளென்ன?

கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன்; அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக. நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது. கிருபையும் சத்தியமும் ஒன்றயொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும். சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும். கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும். நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும். சங்கீதம் 85:8-13.

ADD YOUR COMMENT

Powered By Indic IME