எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளிப்படும்படிக்கு பிரிந்துபோனார்கள்
they went out that they might be made manifest, that none of them were of us. (1John 2:19)
John 17:9; Matthew 24:24; Mark 13:22; Mark 4:5,6,16,17; Luke 8:13; John 15:2; Acts 15:24; Acts 20:30; 2Peter 2:20,21; Deuteronomy 13:13; Psalms 41:9; 125:1,2; Proverbs 21:16; Proverbs 18:1; 2Timothy 4:9; 1Corinthians 7:15.
அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை. நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே. எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள். (1 யோவான் 2:19)
யோவான் 17:9; மத்தேயு 24:24; மாற்கு 13:22; மாற்கு 4:5,6,16,17; லூக்கா 8:13; யோவான் 15:2; அப்போஸ்தலர் 15:24; அப்போஸ்தலர் 20:30; 2பேதுரு 2:20,21; உபாகமம் 13:13; சங்கீதம் 41:9; சங்கீதம் 125:1,2; நீதிமொழிகள் 21:16; நீதிமொழிகள் 18:1; 2தீமோத்தேயு 4:9; 1கொரிந்தியர் 7:15.
பிரிந்துப்போகுதல்.
ஜென்மசுபாவத்துக்குரியவர்களும், மாம்சத்திலே நிலைகொண்டிருப்பவர்களும், தேவனுடைய ஆவியில்லாதவர்களும், உலகத்தோடும் சாத்தானோடும் தொடர்புள்ளவர்களும், ஐசுவரியத்தின்மேல் மயக்கம் கொள்கிறவர்களும், பொருளாசையுடையவர்களும், சிற்றின்ப பிரியர்களும் இயேசு கிறிஸ்துவை விட்டும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை விட்டும், ஐக்கியத்தை விட்டும் பிரிந்து போகிறார்கள். அப்படிப்பட்டவர்களை குறித்து யோவான் கூறும்போது அவர்கள் நம்முடையவர்களல்லாததினால் நம்மை விட்டு பிரிந்துப்போனார்கள். அவர்களை குறித்து பொறாமை கொள்ளாமல் அவர்கள் திரும்ப இணைக்கப்படும்படியாக ஜெபிக்கிறவர்களாக காணப்படுவோம் என்கிறார்.
கேட்டின் மகன் பிரிந்து போனான் என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றார். தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசை வைத்து பிரிந்து போனான் என்று பவுல் கூறுகின்றார். பிரிந்து போகிறவர்கள் இச்சையினிமித்தம் பிரிந்துப் போகிறார்கள் என்று சாலொமோன் கூறுகின்றார். பிரிந்து போகிறவர்கள் ஆவியில்லாதவர்கள் என்று நிருபங்கள் போதிக்கின்றது. அவிசுவாசி பிரிந்து போனால் போகட்டும் என்று கொரிந்தியரில் பவுல் கூறுகின்றார். கிறிஸ்துவில் இணைக்கப்பட்டவர்கள் விவிலியத்தோடும், சபையோடும், சபை ஐக்கியத்தோடும், ஆவியோடும் இணைக்கப்பட்டுள்ளதினால் ஓரிடத்தில் உண்டாகும் பிரிவினையானது அடித்தளமாகிய கிறிஸ்துவில் இணைக்கப்பட்ட உறவை வெட்டிவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நம்மில் பலர் உபதேசங்களை முன்வைத்தும், மொழி ஜாதி இனத்தை முன்வைத்தும் ஒருவரிலொருவர் ஐக்கியமாயிருப்பதற்கு பதிலாக பிரிந்து செல்வது கிறிஸ்துவோடுள்ள உறவை சிதைக்கும். ஒரு ஊழியகாரர் தேவனால் அழைக்கப்பட்டு சபையால் அனுப்புவிக்கப்படாமல் தாய் சபையை விட்டு பிரிந்து போவதற்கான விலைகிரயம் கொடுத்துதானாக வேண்டும். சபையானது பிரிந்து போக விரும்புகிறவர்களை வழி அனுப்பிவைக்க வேண்டும். அவர்களை வாழ்த்தி அனுப்ப வேண்டும். அவர்களை குறித்து தீதாக பேசுவதையும் அவர்களை சபிப்பதையும் நிறுத்த வேண்டும். பிரிந்து போகிறவன் தேவனால் பிரிந்து போகாதிருந்தால் ஆரம்பித்த இடத்துக்கே நிச்சயமாக வந்து சேருவான்.
கேள்வி..
பிரிந்துபோன சபைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?..
அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன். அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு, அவர்களுக்கு நன்மைசெய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்றுபோகாதபடிக்கு, எனக்குப்பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து, அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்தத் தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன். எரேமியா 32:38-41.
ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும். புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.
கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை. நீதிமொழிகள் 15:31-33…