நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினால் அறிந்திருக்கிறோம்.
By this we know that we are in Him. (1John 2 :5)
1John 2:27,28; 1John 3:24; 1John 4:13,15,16; 1John 5:20; John 6:56; John 15:5; Romans 8:1; 1Corinthians 1:30; 2 Corinthians 5:17,21; Colossians 2:9,10,
அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். (1 யோவான் 2:5)
1யோவான் 2:27,28; 1யோவான் 3:24; 1யோவான் 4:13,15,16; 1யோவான் 5:20; யோவான் 6:56; யோவான் 15:5; ரோமர் 8:1; 1கொரிந்தியர் 1:30; 2கொரிந்தியர் 5:17,21; கொலோசெயர் 2:9,10,
அவருக்குள் இருக்கிறோம்.
அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு தங்களை இயேசு கிறிஸ்துவின் இரட்சண்ய கிரியைகளுக்கு ஒப்புக்கொடுத்தவர்களில் தேவ அன்பு மெய்யாகவே பூரணப்பட்டிருக்கும் என்பது மாத்திரமல்ல, அப்படிப்பட்டவர்கள் அவருக்குள் வாழ்கிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை மெய்ப்பிக்கின்றார்.
கற்பனைகளை கைக்கொள்ளுகிறவர்கள் தான் அவருக்குள்ளும், அவர் தனக்குள்ளும் இருக்கிற உன்னத அனுபவத்தை அறிந்திருக்கவும், அனுபவிக்கவும் செய்கிறார்கள். பிதாவுக்குள் வாழும்படியாக தேவன் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். கிறிஸ்துவுக்குள் வாழும்படியாக புதிய பிரமாணத்தைக் கொடுத்தார். ஆவிக்குள் வாழும்படியாக ஆவியின் பிரமாணத்தைக் கொடுத்தார். சபைக்குள் வாழும்படியாக விசுவாச பிரமாணத்தைக் கொடுத்தார். கிறிஸ்தவர்கள் ஒருவரிலொருவர் நிலைத்திருக்கும்படியாக அன்பின் பிரமாணத்தைக் கொடுத்திருக்கிறார். ஆகவே கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்கள் மட்டுமே அவருக்குள் நிலைத்திருக்க முடியும்.
அவருக்குள் இருக்கிற அனுபவமானது ஐக்கியத்தின் வெளிப்பாடு ஆகும். அவர் நமக்குள்ளும் நாம் அவருக்குள்ளும் வாழும் அனுபவத்துக்கு அடிப்படை காரணம் அவரை தேடி அவர் சமுகம் நாடி அவரை அன்றாடம் தரிசிக்கும் தனிப்பட்ட ஆவிக்குரிய அனுபவம் ஆகும். கட்டளைகளுக்கு கீழ்படிவோர், அவரைக் கொண்டிருப்போர், அவருக்குள் இருப்போர் நித்தமும் அவரை தரிசிக்க அவர் சந்நிதானம் விரைவார்கள். அவரிடம் தங்கள் இருதயத்தை ஊற்றாமல் இருக்க மாட்டார்கள். அது ஒரு உன்னத அனுபவம். இந்த அனுபவத்தில் வளர்ந்தவர்கள் அவரை தரிசிக்காமல் வாழமாட்டார்கள். இந்த உன்னத ஐக்கியத்துக்கு உடன்படாதோர் அவரின் இராஜ்யத்துக்கும் சொந்தமாக இயலாது.
அவருக்குள் இருக்கிற அனுபவமானது உன்னதமான விளைவுகளை வெளிப்படுத்தும். அவரின் சுபாவங்கள் உண்டாகும். சொந்த சுபாவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போகும். இந்த உன்னத அனுபவங்கள் ஆவியின் கனியாக வெளிப்படும். கோபங்கள் மறைய ஆரம்பிக்கும் சாந்தகுணம் பிரகாசிக்கும். முரட்டுக்குணங்கள் மாறி கீழ்படிதல் உண்டாகும். எதிர்த்து நிற்றல் மறைந்து தாழ்மை உண்டாகும். ஆவிக்குரிய சோம்பல் மாறி வலிய வந்து செயல்படும் சுபாவம் உண்டாகும். பலவீனங்கள் மறைந்து ஆரோக்கியம் உண்டாகும். இவைகளைக் கொண்டு நாம் அவருக்குள் இருக்கிறோம் என்பதை அறியலாம்.
அவருக்குள் இருக்கிறோம் என்பதினால்….
நாம் பிழைத்திருக்கிறோம்….
நாம் கிறிஸ்துவாக மாறுகிறோம்….
இழப்பதை மறந்து பெறவேண்டியதை வாஞ்சிப்போம்…
சில கேள்விகள்…
தாங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறீர்கள் என்பதை எப்படி வெளிப்படுத்துவீர்கள்?
அவருக்குள் வாழ்தல் என்பது சொல் சார்ந்த அனுபவமா? அல்லது செயல் சார்ந்த அனுபவமா?
அவருக்குள் இருக்கிற – வாழ்கிற ஒருவரை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?
இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு, நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். எபேசியர் 3:14-19.