கற்பனைகளைக் கைக்கொள்ளாதவர் பொய்யராயிருக்கிறார்கள்.
He who says,I know Him,and does not keep His commandments, is a liar, and the truth is not in him. (1e2:4)
1John 2:9; 1John 1:6,8,10; 1John 4:20; Luke 6:46; James 2:14-16; Hosia 8:1-4; Titus 1:16; Galathians 4:9;Eph1:15-19.
1யோவான் 2 :6,8,10; 1யோவான் 4:20; லூக்கா 6:46;யாக்கோபு 2:14-16; ஓசியா 8:1-4; தீத்து 1:16; கலாத்தியர் 4:9; எபே 1:15-19.
கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யன்.
இந்த நிருபத்தில் மூன்றாவது தடவையாக யார் பொய்யன் என்பதற்கான பதில் வருகிறது. 1:6 ல் இருளில் நடக்கிறவன், 1:8,10 ல் தன்னில் பாவமில்லை என்று சொல்லுகிறவன், இப்பொழுது அவரது கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாய் இருக்கிறான் என்று கூறுகின்றார். கற்பனைகள் – கட்டளைகள் – பிரமாணங்கள் யாவும் தேவனிடமிருந்து வந்தவையே. பாவம் நிறைந்த – கீழ்படியாமற்போன மனித சமுதாயத்தை சீர்படுத்தி கீழ்படிதலுக்கு கொண்டுவரும்படியாகவே தேவன் தமது வார்த்தைகளைக் கொடுத்தார். எங்கோ எழுதப்பட்டிருந்தவைகளை தேடி கண்டுபிடித்து தூசு தட்டி மாற்றியமைத்து தரவில்லை. தமது இருதயத்தில் உண்டாயிருந்த எண்ணங்களையே வழிமுறைகளாக – சட்ட தொகுப்புகளாக எழுதிக் கொடுத்தார். தேவனுடைய மனமாகவும் – சிந்தையாகவும் – சித்தமாகவும் – நோக்கமாகவும் இருக்கின்ற கட்டளைகளை எவரொருவர் வேண்டாமென்று புறந்தள்ளுகிறார்களோ அவர்கள் பொய்யராயிருக்கிறார்கள்.
தேவனுடைய கற்பனைகளை இயேசு கிறிஸ்துவோ, பவுலோ நிராகரிக்கவில்லை. சடங்குகளையே சீர்படுதலுக்கு ஒப்புக்கொடுத்தனர். இஸ்ராயேலருக்கு கொடுக்கப்பட்ட கற்பனைகள் கிறிஸ்தவர்களுக்கானதல்ல என்ற கூற்று சடங்கு முறைகள் சார்ந்து சரியானதே. லேவியராகம ஒழுங்குமுறைகள், ஆசரிப்பு கூடார முறைகள் நமக்கானவைகளல்ல. ஆனால் 10 கட்டளைகள் சார்ந்த சட்ட தொகுப்புகள் யாவும் எக்காலத்துக்கும், எல்லா ஜாதியாருக்கும் தரப்பட்டுள்ள தேவனின் கற்பனைகளே. அவைகளை நிராகரிப்போர் தாங்களும் பொய்யர்களாகி, பிறரையும் பொய்யர்களாக்கி, தேவனையும் பொய்யராக்குகிறார்கள். பிசாசானவன் ஆதிமுதலே தேவனுடைய கட்டளையை எதிர்த்து நிற்கிறவனாயிருக்கிறான். மத்தேயு 4:3,4 ஓடு ஒப்பிடுக. அவன் தவறான விளக்கம் கொடுத்து பொய்யானவன். இக்காலத்தில் இந்த பிசாசைப்போல தேவனுடைய கற்பனைகளை நிராகரிப்பவர்களும், தவறான வியாக்கியானம் செய்கிறவர்களும் பொய்யானவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும்.
கற்பனைகளை கைக்கொள்ளாதவன்……
தன்னை பாவியென்று ஒத்துக்கொள்ள மாட்டான்…
தனக்கு மீட்பு வேண்டும் என்பதை விரும்ப மாட்டான்…
இருந்தவாறே – இருக்கிறவண்ணமாகவே முக்தியடைய முயற்சிப்பவன்…
பாவங்கள் தவறுகள் யாவும் அவரவர் மனநிலை சார்ந்தது என்று கூறுபவன்….
சில கேள்விகள்….
பழைய ஏற்பாட்டு கட்டளைகளுக்கும் இயேசுவின் போதனைகளுக்கும் உள்ள தொடர்புகள் என்ன?
பவுல் நியாய பிரமாணத்தை விலக்கி வைத்தாரா?
இயேசு கிறிஸ்து பிரமாணத்தை நிறைவேற்றியிருக்க அவருடைய போதனைகளின் சாரம் நியாய பிரமாணங்கள் சார்ந்தது தானா
நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே. நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான். மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்லாக்கி மீட்டுக்கொண்டார். கலாத்தியர் 3:11-13.
வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் பெரியவன் என்னப்படுவான். மத்தேயு 5:18,19..
ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். வெளிபடுத்தல் 22:14.