நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்

நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்

if anyone sins, we have an Advocate with the Father, Jesus Christ the righteous. (1John 1:2)

Romans 8:34; 1 Timothy 2:5; Hebrew 7:24,25; Hebrew 9:24; Job 9:33; Galathians 3:19,20; Hebrew 8:6; Hebrew 9:15; Hebrew 12:24.

என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். (1 யோவான் 2:1)

ரோமர் 8:34; 1தீமோத்தேயு 2:5; எபிரெயர் 7:24,25; எபிரெயர் 9:24; யோபு 9:33; கலாத்தியர் 3:19,20; எபிரெயர் 8:6; எபிரெயர் 9:15; எபிரெயர் 12:24.

பரிந்து பேசும் இயேசு.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நீதிபரராயிருக்கிறார். பிதாவினால் நீதிகரிக்கப்பட்டவர் . இயேசு கிறிஸ்து தன்னைப் பிதாவின் சித்தப்படி ஒப்புக்கொடுத்து பலியானதினால் பிதா அவரை நீதியாக்கினார். நியாயப்பிரமாணம் தேடிய நீதியை – அது எதிர்பார்த்த நீதியை இயேசு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினதினால் அவருக்கு கிடைத்தது. பூமியில் உள்ள ஒருவரும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றாததினால் இயேசு கிறிஸ்து மட்டுமே தேவ நீதியானார். நீதியாயிருக்கிற இயேசு கிறிஸ்து தம்மை விசுவாசிக்கிறவர்களையும் நீதிமான்களாக மாற்ற வல்லவராயிருக்கிறார்.

1,2 ஆகிய இரு வசனங்களும் இருவிதங்களில் அர்த்தப்படுத்தபடுகின்றது. ஒன்று இரட்சிக்கப்படாதவர்களை இரட்சித்து தேவனுடைய நீதியாக்குகின்ற செயல். இன்னொன்று இரட்சிக்கப்பட்டும் – இயேசு கிறிஸ்துவினால் நீதிமான்களாக்கப்பட்டும் காணப்படுகிறவர்கள் செய்கிற பாவங்கள் பரிகரிக்கப்பட்டு நீதியாக்கப்படுகின்ற செயல். இதில் இரண்டாவது காரியமாவது எளிதான ஒன்றல்ல. தேவனுடைய நீதியாக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவினால் நீதிமான்களாக்கப்பட்டவர்கள் திரும்பவும் பாவத்தில் விழுந்து கிருபையால் கிடைத்த நீதியை இழந்தபின்பு இரண்டாம்விசை மீட்டெடுக்கப்படுதல், நீதிகரிக்கப்படுதல் கடினமான ஒன்றாகும். அடிக்கடி பாவம் செய்தலும், அடிக்கடி மன்றாடுதலும், அடிக்கடி நீதிகரிக்கப்படுதலும் காணப்படுமானால் இயேசு கிறிஸ்துவினால் கிடைக்கப்பெற்ற மீட்பை தக்கவைத்துக்கொள்ள மறுபடியும் இரத்தம் சிந்தி போராட வேண்டியதாயிருக்குமே.

இந்த இரு வசனமும் இரட்சிக்கப்படாதவர்கள் மீட்கப்பட்டு நீதிகரிக்கப்படுவதற்காக கர்த்தராகிய இயேசு பிதாவிடம் பரிந்து பேசி மன்றாடுகின்றார் என்பதை குறிக்கிறதாக இருக்கலாம். பாவம் பெருகுகிற இடத்தில் கிருபை பெருகுகிறது என்பது இதன் விளக்கமேயாகும். பாவம் செய்ய செய்ய கிருபையாகவும் நீதியாகவும் வெளிப்பட்ட இயேசு தனது தந்தையிடம் இரக்கத்திற்காய் மன்றாடுகின்றார். பாவத்தினிமித்தம் தேவ கோபாக்கினை வெளிப்பட்டு மரணம் உண்டாகாதபடிக்கு பாவத்துக்கு செத்து நீதிக்கு பிழைக்கவைக்கும்படியாக மன்றாடுகின்றார். பாவம் நிறைந்த உலகம் இன்றுவரையிலும் வாழ்ந்திருக்க காரணம் இதுவே.

கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது இயேசு கிறிஸ்துவின் நீதியை பாவம் நிறைந்த உலகத்தில் வெளிச்சமாக வெளிபடுத்துகிறது. கிறிஸ்துவின் வழியாக பிதாவிடம் சபையானது பரிந்து பேசுகின்றது. பாவத்தினால் அநீதிமான்களாகவும், அக்கிரமக்காரர்களாகவும் மாறிப்போன சமுதாயம் இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைத்து இரட்சிக்கப்பட்டு கிறிஸ்துவின் நீதியாகும்படியாக சபை வாஞ்சிக்கின்றது. கிறிஸ்து மன்றாடுகின்றார். சபையும் மன்றாடுகின்றது.கிறிஸ்து இன்னும் ஜீவிக்கிறார் என்பதற்கான சத்தம் சபையின் பரிந்து பேசுதலாகும். சபை இரட்சிக்கப்பட்டவனின் பாவத்துக்காக அல்ல, இரட்சிக்கப்படாதோரின் பாவத்துக்காக மன்றாடுகின்றது. இரட்சிக்கப்பட்டு பாவம் செய்கிறவர்கள் சபையிலிருந்தும் தேவனுடைய காணியாட்சியிலிருந்தும் வெளியேற்றப்படுகிறார்கள். எச்சரிக்கை.

பரிந்து பேசும் இயேசுவினால்…
இந்த உலகம் இன்னும் வாழ்கிறது….
பாவம் பெருகுகிறது, அதேவேளையில் கிருபையும் பெருகுகிறது….
இயேசுகிறிஸ்து மட்டுமே மீட்பின்வழி, தேவநீதி என்று வெளிப்படுகின்றது…
தேவசாயல் பரிணமிக்கின்றது….

சில கேள்விகள்…..
இரட்சிக்கப்பட்டு பாவம் செய்கிறவனை மீட்டெடுக்க வேறு என்ன வழி?
இரட்சிக்கப்படாதவனை மீட்டெடுக்க இயேசு மட்டுமே வழியாயிருக்கின்றாரா?
பாவம் செய்கிற ஆத்துமா சாகும் என்பது யாருக்காக சொல்லப்பட்டுள்ளது?

சீயோனினிமித்தமும் எருசலேமினிமித்தமும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப்போலவும், அதின் இரட்சிப்பு எரிகிற தீவட்டியைப்போலவும் வெளிப்படுமட்டும் அமராமலும் இருப்பேன். ஜாதிகள் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; கர்த்தருடைய வாய் சொல்லும் புது நாமத்தால் நீ அழைக்கப்படுவாய். நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய். நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சி என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும். ஏசாயா 62:1-4..

ADD YOUR COMMENT

Powered By Indic IME