அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.
He breathed on them,and said to them,Receive the Holy Spirit. (John 20:22)
Genesis 2:7; Job 33:4; Psalms 33:6; Ezekiel 37:9; John 14:16; John 15:26; John 16:7; Acts 2:4; Acts 4:8; Acts 8:15; Acts 10:47; Acts 19:2; Galathians 3:2.
அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்; (யோவான் 20:22)
ஆதியாகமம் 2:7; யோபு 33:4; சங்கீதம் 33:6; எசேக்கியேல் 37:9; யோவான் 14:16; யோவான் 15:26; யோவான் 16:7; அப்போஸ்தலர் 2:4; அப்போஸ்தலர் 4:8; அப்போஸ்தலர் 8:15; அப்போஸ்தலர் 10:47; அப்போஸ்தலர் 19:2; கலாத்தியர் 3:2.
பரிசுத்த ஆவியைப் பெறுங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின்பு தமது சீஷர்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுக்கின்றார். அவர்கள் மேல் ஊதி பரிசுத்த ஆவியைக் கொடுத்ததாக யோவான் கூறுகின்றார்.
இதோடு இணைந்த 3 விஷயங்களை நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.
முதலாவது, ஆதியிலே மனிதன் உயிரடையும்படியாக தேவன் தமது சுவாசத்தை மனிதனின் நாசியிலே ஊதினார். அதனால் அவன் ஜீவாத்துமாவானான்.
இரண்டாவது, இயேசு கிறிஸ்து தமது ஆவியை சீஷர்கள் மேல் ஊதி பரிசுத்த ஆவியைக் கொடுக்கின்றார். இது அப்போஸ்தலரில் நடைபெறபோவதற்கான டோக்கன் ஆகும். முன்னடையாளம் ஆகும். இதில் பல உண்மைகள் உண்டு.
மூன்றாவது, சீஷர்களை தாம் குறித்து வைத்த நாளுக்காக ஆயத்தமாயிருக்க கூறினார். அந்த நாள் வந்தபோது தேவன் தமது ஆவியை அளவில்லாமல் சீஷர்கள் மேல் ஊற்றினார். இதனால் ஒரு புது சமுதாய படைப்பு உண்டானது.
இயேசு கிறிஸ்து அன்று ஊதியதைப்போல இன்றைக்கு ஊழியக்காரர்கள் விசுவாசிகள் மேலும், ஊழியக்காரர்கள் மேலும் ஊதலாமா என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும். அவருடையவர்களாயிருக்க பரிசுத்த ஆவி அவசியமானது என்பதே.
சீஷர்கள் இயேசுவோடு மூன்றரை வருடங்கள் வாழ்ந்திருந்தாலும் தேவனுடைய இராஜ்யத்தின் சகலவற்றையும் அறிந்து கற்று அப்பியாசபடுத்தியிருந்தாலும், இயேசுவின் கட்டளைகளை பெற்றிருந்தாலும் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பது கட்டாயமானதாகும். யோவேல் தீர்க்கதரிசியின் மூலமாகவும், எசேக்கியேல் மூலமாகவும் உரைக்கப்பட்டவைகள் நிறைவேறவேண்டுமென்பது தேவனுடைய கட்டளையாகும்.
ஊழியங்கள் செய்வதற்கும், பாடுகளை அனுபவிப்பதற்கும், விசுவாசத்தில் உறுதிபட்டிருக்கவும், நம்பிக்கையை விடாதிருக்கவும், சத்தியத்தை போதிக்கவும், இயேசுவை அறிவிப்பதற்கும், இயேசுவின் கிரியைகளை செய்வதற்கும், இயேசுவைபோல வாழ்வதற்கும், இயேசுவின் சாயலை தரித்துக் கொள்வதற்கும், பாவமில்லாத தூயவாழ்வு வாழ்வதற்கும், மாம்சத்தின் கிரியைகளை விட்டோய்வதற்கும், தேவனுடைய ஆழங்களை அறிவதற்கும், சாத்தானின் ஆழங்களையும் தந்திரங்களையும் கிரியைகளையும் அறிகிறதற்கும், ஞானமடைவதற்கும், நிதானமாய் பகுத்து போதிப்பதற்கும், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், யாவற்றிற்கும் பரிசுத்த ஆவி தேவைப்படுகிறார்.
மனிதவாழ்வுக்கு இரத்தம் அவசியமானது. ஆவிக்குரிய வாழ்வுக்கு பரிசுத்த ஆவி அவசியமானது. வரங்களை விடவும் கிரியைகளும் கனிகளும் தன்மைகளுமே உசிதமானது. இதனால் வரங்கள் தேவையில்லை என்று கூறவில்லை. ஆவியானவர் நம்மில் நிரம்பியிருந்தால் முடிவிலே நாம் கிறிஸ்துவைபோல் காட்சியளிப்போம்.
தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்ட பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன். அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார். அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள். அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:1-8.
ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல. மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார். ரோமர் 8:12-16.