தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்
Mary came and told that she had seen the Lord, and that He had spoken these things to her. (John 20:18)
Matthew 28:10; Mark 16:10-13; Luke 24:10,11; daniel 6:22; 1Corinthians 15:5-7; Ephesians 2:17; 1Peter 2:9; 2Peter 2:20.
மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.(யோவான் 20:18)
மத்தேயு 28:10; மாற்கு 16:10-13; லுக்கா 24:10,11; தானியேல் 6:22; 1கொரிந்தியர் 15:5-7; எபேசியர் 2:17; 1பேதுரு 2:9; 2பேதுரு 2:20.
சீஷருக்கு அறிவித்தாள்.
சீஷர்களுக்கு மகதலேனா மரியாள் இரண்டு காரியங்களை அறிவிக்கின்றாள். ஒன்று, தான் கர்த்தரை கண்டேன் என்பதாகும். இன்னொன்று, கர்த்தர் தன்னுடனே இன்னென்ன காரியங்களை சொன்னார் என்பதாகும். அறிவிக்க வேண்டிய சீஷர்கள் பெற்றுக்கொள்ளவேண்டிய இடத்திலும், பெற்றுக்கொள்ள வேண்டிய மரியாள் அறிவிக்கிறவளாகவும் இருக்கிறார்கள். விசுவாசம், நம்பிக்கை என்பதை விடவும் வாஞ்சையானது, ஆர்வமானது மங்கிப்போக்கூடியதுமல்ல, வற்றிப்போக்கூடியதுமல்ல; அடைய வேண்டியதை அடைவது வரையிலும் கொண்டு சேர்ப்பதுமாகும்.
இயேசுவின் உயிர்ப்பின் செய்தியை முதல் சாட்சியாக பெற்றுக்கொள்ள வேண்டிய சீஷர்கள் இரண்டாம் பட்சமாக காணப்படுகிறார்கள். மானானது நீரோடைகளை வாஞ்சித்து கதறுவது போல ஜீவதண்ணீர் ஊற்றாகிய இயேசுவின் துரவண்டை வாஞ்சித்து கதறுகிறவளாயிருந்தாள் மரியாள். வாஞ்சையுடையோரும், தாகமுடையோரும், பசியுள்ளோரும் திருப்தியாக்கப்படுகிறார்கள்.
இயேசுவை கண்ட மரியாள் இயேசுவை சீஷர்களுக்கு அறிவிக்கிறவளாக மாறினாள். சீஷர்களின் சுணக்கம் சீஷர்களை மூன்றாந்தரவாதிகளாக மாற்றியது. இயேசுவிடமிருந்து நேரடியாக சட்சியங்களை பெறவேண்டியவர்கள் மரியாளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் மூன்றாந்தரவாதிகளானார்கள். ஆனாலும் கர்த்தர் அவர்களுக்கு தரிசனம் கொடுத்து முதல்தரமான இரத்தசாட்சிகளாக தமக்கென்று சீஷர்களை நிறுத்தினார் என்பது வரலாறு.
கொடுக்க வேண்டிய சீஷர்கள் பெற்றுக்கொள்கிறவர்களாக மாறினார்கள். முன்னணியத்தில் நிற்க வேண்டியவர்கள் பின்னணியத்தில் நிற்கின்றார்கள். எதையும் சகிக்க வேண்டியவர்கள் அறைகளிலே பதுங்கிப்போனார்கள். அவரால் அனுப்பப்பட்டவர்கள் பிறரால் அனுப்பப்பட காரணமானார்கள். இவர்களைபோல இரட்சிக்கப்பட்டு, அபிஷேகம் பெற்று முன்னணியத்தில் நிற்கவேண்டிய போர்வீரர்கள் அறைகளிலே பதுங்கியும், மறைந்தும் வாழ்கிறார்கள். இதனால் தேவன் சமுதாயத்தில் பெண்களையும், வாலிபர்களையும், குழந்தைகளையும் எழுப்புகின்றார். இப்பொழுதாவது பணமயக்கத்தினாலும், பதவி மோகத்தினாலும் அறைகளிலே பதுங்கிக்கிடக்கிறவர்கள் வெளியே புறப்பட்டு வந்து கிறிஸ்துவுக்கு உண்மையுள்ள சாட்சிகளாக நிற்பார்களெனில் சுவிசேஷ இரதம் ஆகாயத்தில் பறக்கும்.
சீஷர்களுக்கும், கல்விமான்களுக்கும், பேராயர்களுக்கும், பெரியவர்களுக்கும் புத்தி புகட்ட சாதாரண மனிதர்களை தேவன் எழுப்பப் போகிறார். தண்டிக்க அல்ல, தடுமாற்றத்திலிருந்து முன்னணியத்துக்கு கொண்டுவர… ஆயத்தமா?
நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன். யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.
நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப் போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணாமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச்செய்கிறேன்.
பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன். மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன். 1கொரிந்தியர் 9:19-27.