மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்.
Mary stood outside by the tomb weeping, and as she wept she stooped down and looked into the tomb. (John 20:11)
Luke 8:2,3; Luke 24:10; Matthew 27:55,56,61; Mark 15:47; Mark 16:1-3,9; Luke 23:55.
மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து, (யோவான் 20:11)
லூக்கா 8:2,3; லூக்கா 24:10; மத்தேயு 27:55,56,61; மாற்கு 15:47; மாற்கு 16:1-3,9; லூக்கா 23:55.
மகதலேனா மரியாள்.
திபேரிய கடற்கரையின் மேற்குப் பகுதியில் உள்ள மக்தேலா என்ற பட்டணத்தை சார்ந்தவர். இயேசு கிறிஸ்துவோடு கூட இருந்து ஆஸ்திகளினால் ஊழியம் செய்த பெண்களின் கூட்டத்தில் முதன்முதலாக இவர் அறியப்படுகின்றார். இவர் இவ்விதம் உதவிகள் செய்ததற்கான காரணம் தரப்பட்டுள்ளது. அதாவது இவளிடம் இருந்து 7 பிசாசுகளை துரத்தி இருந்தார் இயேசு. ஆகையினால் அவரை நேசித்து அவருக்கு பணிவிடை செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு இருந்தாள்.
இயேசு கிறிஸ்துவின் பாள்மரணங்களின் நிறைவாகிய சிலுவைப் பாடுகளை கடைசிவரையிலும் நின்று கவனித்தாள். அவரின் வேதனைகள் அத்தனையும் கவனித்தாள். எல்லாரும் சென்றிருந்தாலும் கடைசிவரையிலும் நின்றிருந்தாள். இது அவளின் அளவிற்கதிகமான பற்றை குறிக்கின்றது. தன்னை வாழ வைத்தவர் இவ்வளவு கொடுமையாக சித்திரவதை அனுபவிக்கின்றார் என்று கூறி தன் கண்ணீர் அனைத்தையும் சிந்தினாள்.
இந்த மரியாள் இயேசுவை அடக்கம் செய்யப்பட்ட இடத்திலும் யோசேப்பு அவரை அடக்கம் செய்துவிட்டு சென்ற பின்பு கல்லறைத் தோட்டத்தில் இருந்து கடைசியாக வெளியேறினாள். தனக்காய் ஜீவன் கொடுத்தவர் தன் ஜீவனை இழந்து இந்த கோலமானார் என்று நொந்தவளாய் நிற்கின்றாள்.
ஓய்வு நாளுக்கு மறுநாள் ஞாயிற்றுக் கிழமையில் தன்னோடு உள்ள பெண்களுடன் முதல் ஆளாக கல்லறை தோட்டத்திற்கு வந்தாள். அவரின் சரீரத்துக்கு சுகந்த வர்க்கம் இடும் படியாகவே வந்தாள். இயேசுவை உளப்பூர்வமாக மட்டுமல்லாது உடல் பூர்வமாகவும் நேசித்தாள். அதாவது தன் வாழ்வுக்காக தன் ஜீவனை மட்டுமல்ல தன் சரீரத்தை கொடுத்துள்ளார் என்பதை அவள் மறக்கவில்லை.
ஒரு பாவியாகிய பெண் அநேக நற்கிரியைகளுக்கும் மாதிரியாக இருந்துள்ளது ஆச்சரியப்படத்தக்கது. அவளுக்காய் அவர் எவ்வளவு பெரிய நன்மை செய்தாரோ அவ்வளவாய் அவருக்குத் திரும்ப செய்யும் மனநிலையை கொண்டிருந்தாள். இக்காலத்துப் பெண்களுக்கும் தாய்மார்களுக்கும் இந்த மரியாள் ஒரு பெரிய எடுத்துக்காட்டாகும்.
எந்த ஒரு மனிதனும் தன் பிறப்பினாலோ, குல பெருமையினாலோ, தன் கல்வியினாலோ, தன் பண பெருமையினாலோ மேன்மை அடைவதில்லை. நல்ல தூய்மையான உள்ளமும் நற்கிரியைகளை செய்யும் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பதினால் தான் மேன்மை அடைகிறார்கள். ஒரு பெண்ணின் தோற்றம் அல்ல அவளின் பணிகளே அவளை குணசாலியான பெண்ணாக மாற்றுகிறது.
மரியாள் போன்ற பெண்கள் சபை வளர்ச்சியில் பங்களிக்க முன் வருவார்களானால் இந்தியா இயேசுவை அறியும் நாட்கள் விரைவில் உண்டாகும்.
அந்தப்படியே ஸ்திரீகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும் எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்வேண்டும். 1தீமோ3:11.
அந்தப்படி ஸ்திரிகளே, உங்கள்சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள். 1பேதுரு 3:1-6.