அதைக் கண்டவன் சாட்சி கொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது

அதைக் கண்டவன் சாட்சி கொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது.

he who has seen has testified, and his testimony is true. (John 19:35)

John 21:24; John 11:15,42; John 14:19; John 17:20,21; John 20:31; Acts 10:39; Romans 15:4; Hebrews 2:3,4; 1Peter 5:1; 1John 1:1-3; 1John 5:13.

அதைக் கண்டவன் சாட்சி கொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான். (யோவான் 19:35)

யோவான் 21:24; யோவான் 11:15,42; யோவான் 14:19; யோவான் 17:20,21; யோவான் 20:31; அப்போஸ்தலர்10:39; ரோமர் 15:4; எபிரெயர் 2:3,4; 1பேதுரு 5:1; 1யோவான் 1:1-3; 1யோவான்5:13.

மெய்யான சாட்சி:
சாட்சியங்கள் ஆதாரமாயிருக்கின்றது. கண்ட சாட்சிகள், கேட்ட சாட்சிகள், அனுபவித்த சாட்சிகள் என்று நாம் கூறுவதுண்டு. சாட்சியங்களில் பொய்யானவைகளும் உண்டு. அவைகளை பொய்சாட்சி என்று விவிலியம் கூறுகின்றது.  இங்கே கூறப்பட்டுள்ளது மெய்யான சாட்சியமாகும். அதாவது இயேசுவின் விலாவினில் குத்திய போர்சேவகர் மட்டுமல்ல, யோவான் நூலை எழுதிய ஆக்கியோனும் மற்றும் பலரும் சாட்சியமாயிருக்கின்றார்கள். சிலுவையின் அருகே நின்றுகொண்டிருந்த யோவான் இயேசுவின் சரீரத்திலிருந்து வெளிபட்ட இரத்தம் நீர் குறித்து சாட்சி கொடுக்கின்றார். இது மெய்யான சாட்சியமாகும். 

யோவான் சுவிசேஷம் உண்மை நிகழ்வுகளை போதிக்கின்ற உண்மையான புத்தகம் ஆகும். கட்டுகதைகளினாலும், கிழவிகள் பேச்சுகளினாலும் நிரம்பியதல்ல. சரித்திரபூர்வமாகவும், இறையியல் பூர்வமாகவும் இயேசுவின் வாழ்வினை எடுத்துரைக்கும் உண்மை நூலாகும். யோவான் சுவிசேஷத்தை போலவே மற்றைய சுவிசேஷங்களும் நிகழ்வுகளை பதிவேற்றுவதில் சில வேறுபாடுகளை காண்பித்திருந்தாலும்  இயேசுவின் வாழ்வியல் சார்ந்த உண்மை பதிவுகளை கொண்டதேயாகும். 

இயேசு கிறிஸ்து அவதார புருஷர் அல்ல, சரித்திர நாயகர். அவரின் பிறப்பிலிருந்து பரமேறுவதுவரையிலுமான அத்தனை நிகழ்வுகளும் பொய்யாடல் கொண்டவைகளல்ல, உண்மையானவைகளாகும். சுவிசேஷகர்கள் இயேசுவைக் குறித்து மிகைப்படுத்தி எழுதவில்லை. நடந்தவைகளை நடந்தவைகளாகவும், உபதேசித்தவைகளை உபதேசமாகவும் பதிவேற்றினார்கள். இதனை வாசிக்கும் தியானிக்கும் நமது வாழ்விலும் அதே நிகழ்வுகள் நடந்தேறக்கூடும்.
உயிரோட்டமான நிகழ்வுகள் உயிரோட்டமான அனுபவங்களை உண்டாக்கும். அந்த அனுபவங்கள் பாரம்பரியமாக அனுஷ்டிக்கப்பட்டாலும் அவைகளில் உள்ள உயிரோட்டம் தடைபடாது. 

இயேசு கிறிஸ்துவை குறித்து உண்மையான சாட்சியங்களை சாட்சியமாக பதிவேற்ற முக்கிய காரணம் தேவன் மனிதனானார் என்பதையும், மனிதனான தேவன் மனிதரிடையில் வாசம் செய்தார் என்பதையும், அவரே மனிதகுலத்தின் மீட்புக்காக மனிதனாக மரித்தார் என்பதையும், அந்த மனிதனே தேவனாக உயிர்த்து இன்றும் ஜீவிக்கிறார்  என்பதையும் வெளிப்படுத்தி காண்பிப்பதற்காகவேயாகும். 

இன்று இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்  என்பதற்கான உண்மை சாட்சிகள் மட்டுமல்ல, உயிருள்ள சாட்சிகளாகவும் இருக்கிறோம். இதை எழுதும் நானும், படிக்கும் நீங்களும் அவர் உயிரோடிக்கிறார் என்பதற்கான சாட்சிகளாவோம். 
ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்தும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். 1யோவான் 1:1-3.

இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர். [பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; பூலோகத்திலே] சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக் குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. 

தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக் குறித்துக்கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால் அவரைப் பொய்யராக்குகிறான். தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச்சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். 1யோவான் 5:6-13.

ADD YOUR COMMENT

Powered By Indic IME