பிரதான ஆசாரியர்: தன்னைத்தானே யூதரின் இராஜா என்று சொன்னான் என்று எழுதும்.
Jews,Do not write,The King of the Jews,but,He said,I am the King of the Jews. (John 19:21)
Romans 10:1; Romans 11:1-36.
அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள். (யோவான் 19:21)
ரோமர் 10:1; ரோமர் 11:1-36.
ஏற்றுக்கொள்ளாத இஸ்ராயேலர்:
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிதாவின் மகனாக – தாவீதின் மகனாக முழு உலகத்திற்கும் மீட்பை உண்டுபண்ணும் மீட்பராக இஸ்ராயேலரிடையில் தோன்றினார். இஸ்ராயேலர்களோ அவரை மீட்பராக – இராஜாவாக – மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆகையினால்தான் தான் தங்களின் அதிருப்தியை பிலாத்துவிடம் தெரிவிக்கின்றனர்.
இஸ்ராயேலர் இயேசுவை நிராகரிப்பதில் இரண்டுவிதமான தேவ நோக்கம் அடங்கியுள்ளதை நாம் அறிந்திருக்க வேண்டும்.
ஒன்று இஸ்ராயேலர் இயேசுவை நிராகரித்ததினால் புறஜாதியாருக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. அன்றிலிருந்து இன்றுவரையிலும் இஸ்ராயேலர் இயேசுவை ஏற்றுக்கொள்ளாதிருக்க புறஜாதியார் கூட்டம் கூட்டமாக இயேசுவை இரட்சகராக, ஆண்டவராக, இராஜாவாக ஏற்றுக்கொண்டு வருகின்றனர். இதனை குறித்து பவுல் தனது நிருபங்களில் குறிப்பிட்டுள்ளார். மன கடினம் கொண்டிருந்த மூத்த மகனாகிய இஸ்ராயேலர் மீது கோபம் கொள்ள மனந்திரும்பிய கெட்ட குமாரனாகிய புறஜாதியார் மேல் இரக்கம் காண்பித்தார்.
புறஜாதியாராகிய நமக்கு கிடைத்த மீட்பு புண்ணியங்களினாலும், நற்கிரியைகளினாலும் உண்டானதல்ல. அவரின் அளவற்ற இரக்கத்தினால் கிடைத்ததாகும். இரக்கத்தினால் கிடைத்த மீட்பினிமித்தம் இஸ்ராயேலர்கள் மேல் பொறாமையையும் கோபத்தையும் காண்பிக்காமலும், தங்களுக்குள் கேடுண்டாக்கதக்கவைகளை செய்யாமல் மீட்பை பாதுகாத்துக் கொள்வதினாலும் இரக்கம் நம்மேல் பெருகும். புறஜாதியாரின் மீட்பு முற்றுபெறுவது வரையிலும் அவரின் இரக்கம் தொடரும்.
இரண்டாவது, இஸ்ராயேலர் இயேசுவை நிராகரித்திருந்தாலும் இஸ்ராயேலரை தேவன் முற்றிலுமாக தள்ளிவிடவில்லை. ஒருபங்கு கடினப்பட்டு இழந்துபோனாலும் ஏற்றுக்கொள்ளும் மனம் கொண்ட இஸ்ராயேலர் எழும்புவது வரையிலும் அவரின் பொறுமை , இரக்கம் இஸ்ராயேலர் மேல் இருந்துக்கொண்டேயிருக்கும். புறஜாதியாரின் இரட்சிப்பு நிறைவடையும்போது இஸ்ராயேலரிடையில் இரட்சிப்பின் தாகம் எழும்பும். அதுவரையிலும் அவர்கள் அவருக்கு எதிராக காணப்பட்டாலும் அவர்களை இன்றுவரையிலும் காத்து வருகின்றார்.
புறஜாதியாரிடையிலேயும் ஒரு பெருங்கூட்டம் தள்ளப்பட்டதைப்போல இஸ்ராயேலரிடையிலேயும் ஒரு கணிசமான தொகை தள்ளப்படும். ஆனாலும் புறஜாதிகளை இரட்சித்த தேவன் தமது ஜனத்தையும் இரட்சித்து ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாக்குவார் என்பதை அறிவோமாக.
சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச்செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது. ரோமர் 10:1.
இப்படியிருக்க, விழுந்துபோகும்படிக்கா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படியல்லவே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பத்தக்கதாக அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது. அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க, அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் அப்படியிருக்கும். ரோமர் 11:11-12.
அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள், அவர்களை மறுபடியும் ஒட்டவைக்கிறதற்கு தேவன் வல்லவராயிருக்கிறாரே. சுபாவத்தின்படி, காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா?
மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரிலொரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும். இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்; நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது. சுவிசேஷத்தைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைஞராயிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக்குறித்து அவர்கள் பிதாக்களினிமித்தம் அன்புகூரப்பட்டவர்களாயிருக்கிறார்கள்.
தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே. ரோமர் 11:23-29.