பிலாத்து: இதோ உங்கள் இராஜா

பிலாத்து: இதோ உங்கள் இராஜா.

Preparation Day of the Passover,Pilate said to the Jews,Behold your King!. (John 19 :14)

John 19:3,5,19-22; Isaiah 53:1,2; Micah 5:1,2; Psalm 24; Psalm 44:4; Matthew 21:4; Luke 19:38; 1 Timothy 1:17; 1 Timothy 6:15; Revelation 1:5.

அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது,அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான். (யோவான் 19:14)

யோவான் 19:3,5,19-22; ஏசாயா 53:1,2; மீகா5 5:1,2; சங்கீதம் 24; 44:4; மத்தேயு 21:4; லூக்கா 19:38; 1 தீமோத்தேயு 1:17; 1 தீமோத்தேயு 6:15; வெளி 1:5.

இயேசுவே இராஜா:

கர்த்தராகிய இயேசு யூதர்களின் இராஜாவாக வந்தது மெய்தான். இயேசுவோ தன்னை இராஜா என்று அறிவிக்கவும் இல்லை, வெளிப்படுத்தவும் இல்லை. மேசியா என்ற ஒருவர் வருவார் என்பது இஸ்ராயேலர்களின் எதிர்பார்ப்பு. இயேசு மேசியாவாக வந்திருந்தும் இயேசு தன்னை மேசியா என்று வெளிப்படுத்தவில்லை. ஆனால் இயேசுவை மேசியா என்றும் யூதரின் இராஜா என்றும் நம்பி பலர் தங்கள் குரல்களை உயர்த்தியதுண்டு. ஆனால் பெரும்பான்மையான யூதர்கள் இயேசுவை இராஜாவாக பார்க்க விரும்பவில்லை. இவ்விதம் அவர்கள் விரும்பாததற்கு காரணங்கள் உண்டு.

முதாவதாக, இயேசுகிறிஸ்துவின் எளிமையான பிறப்பு இஸ்ராயேலர்களிடையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர் ஒரு சாதாரணமான மனித பிறப்பை உடையவராக இருந்தார் என்று நம்பியிருந்தார்கள். இயேசுவின் கன்னிபிறப்பு போன்றவற்றை இஸ்ராயேலர்கள் அறிந்திருக்கவில்லை போலும்.

இரண்டாவதாக, இயேசுவின் வளர்ப்பை தவறுதலாக புரிந்துக் கொண்டனர். நாசரேத்தை விரும்பாத இஸ்ராயேலர்கள் இயேசுவை நாசரேத்திலிருந்து வந்தவர் என்று கருதி நாசரேத்திலிருந்து ஒரு நன்மையும் உண்டாவதில்லை என்ற பழமொழியைப் பிடித்துக்கொண்டு இயேசுவை நாசரேத்தூர் இயேசு என்று முத்திரை குத்தினர்.

மூன்றவதாக, இயேசுவின் உபதேசங்கள் மற்றும் செயல்களில் அநேகமானவைகள் மோசேயின் பிரமாணத்துக்கு எதிரானதாக இருப்பதாக கருதினர். இயேசு கிறிஸ்து மோசேயின் பிரமாணங்களுக்கு உண்மையான விளக்கத்தை கொடுத்தார். அவர்களோ பாரம்பரியமாக அனுசரிக்கப்பட்டு வரும் முறைமைகளிலேயே நின்றார்கள்.

இந்த மூன்று காரியங்களும் இயேசு யூதர்களின் இராஜா என்று ஏற்றுக்கொள்ள தடுத்தது. இவர்களை போலவே இக்காலத்தில் உள்ளவர்களும் இயேசுவை இராஜாவாக – மீட்பராக ஏற்றுக்கொள்ள சில தடைகளை தங்களுக்குள் கொண்டுள்ளனர்.

இயேசுகிறிஸ்து ஏன் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்? இயேசு கிறிஸ்து ஏன் குற்றவாளியாக மரித்தார்? இயேசுகிறிஸ்து 2000 வருடமாக இன்னும் வராதிருக்கிற காரணம் என்ன? என்ற மூன்று விஷயங்களுமே. இந்த மூன்று விஷயங்களுக்கும் நாம் உறுதியான பதிலை தர முடியும். ஆனாலும் அநேகர் இடறலடைந்து அவரை ஏற்றுக்கொள்ளாமலிருப்பதற்கும், பின்வாங்கிப்போவதற்கும் இத்தியாதி கேள்விகளை தடைகற்காளாக தேவ ஆவியானவரே இவ்வுலகத்தில் வைத்துள்ளார். கேள்விகள் கேட்டு குழம்பிப்போகும் சமுதாயம் உணர்வடையும்படி இயேசு இராஜாவாக வரப்போகின்றார். ஆனால் அவரின் வருகையில் இவர்களில் ஒருவரும் அவரிடமாய் சேர்க்கப்படமாட்டார்கள்.

பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை. உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.

ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.

உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.
அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள். மத்தேயு 13:11-17.

வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே. வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே உயருங்கள், மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா. சங்கீதம் 24:7-10.

சேனைகளையுடைய நகரமே, இப்போது தண்டுதண்டாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாக முற்றிக்கை போடப்படும்; இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள். எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. மீகா 5:1,2.

ADD YOUR COMMENT

Powered By Indic IME