பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபோது அதிகமாய் பயந்தார்.
when Pilate heard that saying, he was the more afraid, (John 19 :8)
John 19:13; Act14:11-19; Daniel 3:25; Matthew 27:54; Luke 22:70; 2 Corinthians 1:19; Matthew 14:27; Matthew 17:6; 1 Peter 3:6,14.
பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாய்ப் பயந்து, (யோவான் 19:8)
யோவான் 19:13; அப்போஸ்தலர் 14:11-19; தானியேல் 3:25; மத்தேயு 27:54; லூக்கா 22:70; 2கொரிந்தியர் 1:19; மத்தேயு 14:27; மத்தேயு 17:6; 1பேதுரு 3:6,14.
பயமடைந்த பிலாத்து:
இயேசுவை பிலாத்துவிடம் ஒப்படைத்தவர்கள் 7 ஆம் வசனத்தில் கூறிய கூற்றைக் கேட்ட பிலாத்து மிகவும் பயந்துப் போனார் என்று சொல்லப்பட்டுள்ளது. உரோமை அரசாங்கத்தின் யூதேயா ஆளுநராக இருக்கின்ற பிலாத்து சகல அதிகாரமும் உடையவராக காணப்படுகின்ற பிலாத்து யூதசமய சார்பான கூற்றை கேட்டு பயப்படவேண்டிய காரணம் என்ன?
முதலாவது, யூதர்களின் நியாயபிரமாணம் குறித்த பயம். ஒவ்வொரு இனத்துக்கும், நாட்டுக்கும், அமைப்புக்கும் மாறாத பிரமாணங்கள் உண்டு. ஆனால் இஸ்ராயேலரின் பிரமாணங்கள் இவைகள் எல்லாவற்றைவிடவும் சமய வலிமையும், சமூக பரவலிலும் அதிக வலிமை கொண்டுள்ளதை பிலாத்து அறிந்திருக்ககூடும். பிரமாணங்களை கொண்டுள்ள நம்மைவிடவும் பிறத்தியார் நம் பிரமாணங்கள்மேல் அதிக மதிப்பு வைத்துள்ளார்கள். நியயபிரமாணத்தினிமித்தமாக இயேசு சாகவேண்டும் என்று கூறப்பட்ட கூற்று யூதர்களாலும், உரோமர்களாலும் தனக்கு பாதிப்பு உண்டாகும் என்று பயந்திருக்கக்கூடும். நிறைவேற்றினால் ரோமர்களாலும்,. நிறைவேற்றாவிட்டால் யூதர்களாலும் தனக்கு பிரச்சனைகள் உண்டாககூடும் என்ற பயம்.
இரண்டாவது, 7 ஆம் வசனத்தில் இயேசு கிறிஸ்து தன்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னார் என்ற கூற்றைகேட்டு பிலாத்து பயந்திருக்ககூடும். கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்கு கிறிஸ்துவின் தெய்வத்துவ நிலை குறித்து பயமில்லையே. தேவனுடைய குமாரன் என்றால் தேவனுடமிருந்து வந்தவர், சகல அதிகாரத்துக்கும் மேற்பட்டவர், தெய்வத்தில் தெய்வமானவர் என்றெல்லாம் சமய நம்பிக்கை கொண்டிருந்த பிலாத்துவுக்கு கடவுளை – கடவுளின் குமாரனை தீர்ப்பிடும் துர்பாக்கியத்துக்கு ஆளாகிவிட்டோமே. இதற்கு எத்தகைய இழப்புகளை தானும் தன் குடும்பமும் சந்திக்க நேரிடுமோ என்று பயந்திருக்ககூடும்.
மூன்றாவதாக, பிலாத்துவின் மனைவியின் கூற்று இந்த நேரத்தில் வெளிபட்டிருக்ககூடும். மத்27:19. பிலாத்துவின் மனைவி இயேசுவை நீதிமான், தவறு செய்யாதவர், பாவமில்லாதவர், தூய்மையானவர், தெய்வ அம்சம் கொண்டவர் என்று கூறி தான் கண்ட தரிசனத்தை தெரிவித்தாள். இதை கேட்ட பிலாத்து மிகவும் பயந்து போனார். தேவனுடைய பிள்ளைகள் தேவனின் வெளிப்பாட்டை குறித்துகூட பயமற்றவர்களாயுள்ளனர். ஆனால் ஒரு ராஜ குடும்பம் ஒரு சிறு தரிசனத்துக்கே பயந்து காணப்படுகின்றனர்.
அதிகாரமே இயேசுவுக்கு முன்பாக மண்டியிடும் காலம் வரப்போகின்றது. இயேசுவை நிராகரிப்போர் பயந்து ஜீவன் தப்ப ஓடிக்கொண்டிருக்கும் காலம் வரப்போகின்றது. அவரை – அவரது சபையை – அவரது மக்களை – அவரது விவிலியத்தை – அவரது ஆவியை நிந்திப்பவர்களும், எதிர்ப்பவர்களும், அகற்ற நினைப்பவர்களும் மண்டியிட்டு இயேசுவே தெய்வம் என்று சொல்லும் காலம் வரப்போகின்றது.
மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும் மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து, தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.
ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன். கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.
நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்? நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து, கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.
கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள். 1பேதுரு 3:8-16.