பிலாத்து, நான் இவரிடத்தில் ஒரு குற்றமும் காணேன்

பிலாத்து, நான் இவரிடத்தில் ஒரு குற்றமும் காணேன்.

Pilate said, you may know that I find no fault in Him. (John 19:4)

John 18:38; Matthew 27:4,19,24,54; Luke 23:41,47; 2 Corinthians 5:21; Hebrew 7:26; 1Peter 1:19; 2 Peter 2:22; 2 Peter 3:18; 1John 3:5.

பிலாத்து மறுபடியும் வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டுவருகிறேன் என்றான். (யோவான் 19:4)

யோவான் 18:38; மத்தேயு 27:4,19,24,54; லூக்கா 23:41,47; 2கொரிந்தியர் 5:21; எபிரெயர் 7:26; 1பேதுரு 1:19; 1பேதுரு 2:22; 1பேதுரு 3:18; 1யோவான் 3:5.

நம் குற்றங்களை சுமந்த இயேசு:

கர்த்தராகிய இயேசு குற்றமில்லாதவர் என்று பிலாத்து, பிலாத்துவின் மனைவி, நூற்றுக்கு அதிபதி ஆகிய மூன்று பேரின் சாட்சியங்களும் பதியப்பட்டுள்ளன. இந்த குற்றமின்மையே இயேசு கிறிஸ்துவை எல்லா மனிதர்களுக்கும், தெய்வங்களுக்கும் மேலாக உயர்த்தியது. இந்த குற்றமின்மையே அவரைதவிர வேறு யாவரும் குற்றவாளிகள் என்பதையும் வெளிப்படுத்துகின்றது. இந்த குற்றமின்மையே மனுகுலத்தின் குற்றதன்மைகளை சுமந்து தமக்கு முன்பாக குற்றமில்லாதவர்களாக நிறுத்த காரணமாயமைகிறது.

மனிதன் ஜென்மபாவத்தினாலும், கர்ம பாவத்தினாலும் பிடிக்கப்பட்டுள்ளான். ஆதிபாவம் அவனுக்குள் ஜென்ம பாவத்தையும், ஜென்மபாவமானது கர்ம பாவத்தையும் உருவாக்கியது. இதினிமித்தம் மனிதன் தன் பிறப்பிலும் (சங்கீதம் 51:3), வளர்ச்சியிலும், கிரியைகளிலும், மரணத்திலும் பாவியாகவே காணப்படுகின்றான். மனிதனின் ஜென்மபாவம் தொலைக்கப்பட்டாலொழிய கர்ம பாவத்திலிருந்து விடுதலையடைய முடியாது. இந்த ஜென்மபாவத்தை அகற்றுவதற்கு யாகங்களும், சடங்குகளும், மந்திரங்களும் உண்டாக்கப்பட்டது. இந்த ஜென்மபாவத்தை தொலைக்க புண்ணியம் தேடுதலும், புண்ணிய ஸ்தலம் செல்லுதலும், அறுபது வயதில் சன்னியாசியாகி வனவாசம் செல்லுதலும், உடல் உபாதைகளுக்கு ஒப்புக்கொடுத்தலும் ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் ஜென்மபாவம் தொலைந்தபாடில்லை, தொலைத்துவிட வழியுமில்லை.

இயேசுகிறிஸ்து ஜென்மபாவத்தை தொலைக்கவும், அகற்றவும் அதிகாரமுடையவராயிருக்கிறார். பாவம் பிசாசினால் வந்தது. பாவத்துக்கான தண்டனை தேவனிடமிருந்து வந்தது. அப்படியானால் சாத்தானால் உண்டான பாவத்தை அகற்றியோ, மன்னித்தோ, தண்டனையை விலக்கி காப்பதோ தேவனிடமிருந்து மட்டுமே வர வேண்டியுள்ளது. எனவே தேவன் தமது குமாரனை பாவ மாம்சத்தின் சாயலாக அனுப்பி மனுகுலத்தின் பாவங்களை அகற்றி தண்டனையிலிருந்து விடுவிக்க சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தார். இந்த இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் மட்டுமே ஜென்மபாவத்திலிருந்து விடுபட்டு கர்ம பாவம் செய்யாதபடிக்கு நற்கிரியைகளை செய்ய பழக்குவிக்கபடுகிறார்கள்.

இயேசு கிறிஸ்து நமது ஜென்மபாவங்களை நம்மை விட்டு விலக்கினார். கர்ம பாவத்தில் பிடிபடாதபடிக்கு காத்தார். நற்கிரியைகளை செய்து பழகி தேவபிள்ளைகளாக வாழ உதவி செய்கிறார்.

நம் பாவங்களை சுமந்த அவர் மட்டுமே குற்றமற்றவர். அவரை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நாம் குற்றமற்றவர்களாக வாழ முடியும். குற்றமற்றவர்கள் மட்டுமே அவர் முன்னிலையில் நிற்க முடியும்.

தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார். எபேசியர் 1:4-6.

நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.

பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.

அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை. அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. 1யோவான் 3:1-6.

ADD YOUR COMMENT

Powered By Indic IME