சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன்

சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன்

I was born, I have come into the world,I should bear witness to the truth. ( John 18:37)

Psalm 19:7; Proverb 14:25; Isaiah 55:4; John 3:11; John 5:33,39; 1John 4:14; Job 16:19; Revelation 2:13; Revelation 6:9; Revelation 12:11.

அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான், சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன், சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். (யோவான் 18:37)

சங்கீதம் 19:7; நீதிமொழிகள் 14:25; ஏசாயா 55:4; யோவான் 3:11; யோவான் 5:33,39; 1யோவான் 4:14; யோபு 16:19; வெளி 2:13; வெளி 6:9; வெளி 12:11.

நான் பிறந்தேன்:

இயேசு கிறிஸ்து சத்தியத்தை சாட்சியாக அறிவிக்கவே இவ்வுலகிற்கு வந்தார். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு சத்தியத்தின் பிறப்பு. அசத்தியம் நிறைந்த உலகில் சத்தியத்தை அறிவிக்க வந்தார் இயேசு. சத்தியத்தை பேசுகிறவர் சத்தியவானாக வாழ்வதினால் சத்தியத்தின் சாட்சியாக அறியப்படுகின்றது. நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சத்தியத்தின் ஒரு பகுதியாகும். சத்தியத்தின் இன்னொரு பகுதிதான் நற்செய்தியாக சுவிசேஷமாகும்.

கிருபையும் கிரியைகளும் இணைந்து வருவதே சத்தியம் ஆகும். கிருபையைக் கொண்டு வந்த இயேசு தமது இரட்சணிய கிரியைகளினால் இலவசமாக இரட்சிப்பை தந்தார். சுவிசேஷத்தின் மையப் பொருளே இரட்சண்யகிரியை தான். ஆகையினால்தான் கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இயேசு கிறிஸ்து சத்தியத்தை கொண்டு வந்தார். சத்தியத்தை அறிவித்தார். சத்தியத்திற்காக மரித்தார். சத்திய சாட்சியாக மாறினார். உண்மையை உரக்க கூறினார். இயேசு கூறிய சத்தியமாவது என்ன? தேவன் ஒருவரே. அவர் என்னுடைய பிதா. நான் அவருடைய மகன். என்னை ஏற்றுக் கொள்வதே பிதாவாகிய தேவனை ஏற்றுக்கொள்வது ஆகும். இதனை தான் நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் அறிவித்தது. தீர்க்கதரிசிகள் இவரின் பிறப்பைக் காண வாஞ்சித்தனர். காணாதவர்கள் ஆவலோடே மரித்தார்கள். கண்டவர்கள் இவரே தெய்வமகன் என்று சாட்சி கொடுத்தனர்.

இயேசு கிறிஸ்துவின் முழு உபதேசமும் தன்னை மக்கள் ஏற்றுக்கொள்ளவும் தன்னைப்போல மக்கள் வாழ கற்றுக் கொள்ளவும் வஞ்சித்தது ஆகும். இயேசுவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் சத்தியத்திற்கு எதிரானவர்கள். ஏற்றுக் கொண்டவர்களோ சத்தியவான்கள்.

இயேசுவை தேவமகன் உலக ரட்சகர் ராஜாதி ராஜா என்று அறியும் மனமும், காணும் கண்களும் பாக்கியமுள்ளவைகள்.

ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்தும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்.
தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம். அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. 1யோவான்1:1-10.

ADD YOUR COMMENT

Powered By Indic IME