ஒருவரையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை

ஒருவரையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை.

Therefore the Jews said to him,It is not lawful for us to put anyone to death, (John 18:31)

John 19:6,7; Act 25:18-20; Genesis 49:10; Ezekiel 21:26,27; Hosia 3:4,5; John 8:59.

அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இவனை நீங்களே கொண்டுபோய், உங்கள் நியாயப்பிரமாணத்தின்படி நியாயந்தீருங்கள் என்றான். அதற்கு யூதர்கள்: ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள். (யோவான் 18:31)

யோவான் 19:6,7; அப்போஸ்தலர் 25:18-20; ஆதியாகமம் 49:10; எசேக்கியேல் 21:26,27; ஓசியா 3:4,5; யோவான் 8:59.

அதிகாரமில்லா அதிகாரம்:

அதிகாரம், ஆளுகை, ஆற்றல் யாவும் உன்னதத்திலிருந்து மனிதர்க்கு தரப்பட்டுள்ளவையாகும். நீங்கள் ஆண்டுக்கொள்ளுங்கள் என்பது ஆதிகால வாக்கு. இஸ்ராயேலர் சமூக அடிப்படையில் உரோமர்க்கு கட்டுப்பட்டுள்ளனர். அதாவது, உரோமர்களால் ஆளப்படுகிறார்கள். மத அடிப்படையில் இஸ்ராயேலர்கள் ஒருவருக்கும் கட்டுப்பட்டவர்களல்ல. நியாயப்பிரமாணத்தின்படி ஒருவரை கொல்லவும் இஸ்ராயேலர்க்கு அதிகாரம் உண்டு. அப்படியிருந்தும் உரோமர்களின் ஆளுகைக்குள் மத சம்பிரதாயங்கள் கண்காணிக்கப்படுவதினால் இஸ்ராயேலர் இவ்வாறு கூறியிருக்கலாம்.

மனிதன் தேவனால் உண்டாக்கப்பட்டவன். மனிதனின் இரத்தத்தை சிந்துவதற்கு ஒருவருக்கும் அதிகாரமில்லை. நியாயப்பிரமாணம், சட்டங்கள் அடிப்படையில் தண்டனையாகிய மரணத்தை நிறைவேற்ற அதிகாரமுண்டு. சமயங்களிடமிருந்த அதிகாரம் சமுகங்களிடையில் வந்தது. இப்பொழுது அரசியலாளர்களிடம் வந்து விட்டது. இப்படியிருக்க, மனிதனை அழிப்பதற்காகவும், கொல்லுவதற்காகவும் தேவன் மனிதனை உண்டாக்கவில்லை. மனிதன் என்றும் வாழ்ந்திருக்கும் அழியாமைக்குள் இருப்பதற்கே உண்டாக்கப்பட்டான். ஆனால் பாவத்தையும் அதன் கிரியைகளையும் கொண்டு தேவனுக்கு எதிராக கலகம் விளைவித்த சாத்தான் மனுகுலத்தை கொல்லவும், அழிக்கவும் முயற்சிக்கின்றான். வாழ்வுக்குரிய சட்டங்களை அழிவுக்குரிய சட்டங்களாக பரிணாமம் அடைய செய்து விட்டான் சாத்தான். ஆனாலும் மரணமும் அதன் காரியங்களும் தேவனுடைய அதிகாரத்தில்தான் உள்ளது.

கொஞ்சநாள் வாழும்படி பிறப்பிக்கப்பட்டுள்ள மனிதன் தன்னிடம் அதிகாரம் உள்ளது என்பதற்காக எதை வேண்டுமென்றாலும் செய்ய இயலாது. எல்லா அதிகாரங்களையும் கொடுத்த தேவனே அதை கட்டுப்படுத்துகின்றார். ஒருவரிடமிருந்து பிடுங்கி இன்னொருவரிடம் கொடுக்கிறார். இந்த நிரந்தரமில்லாத அதிகாரத்தை கொண்டு பகைமையையும், வெறுப்பையும், தீமையையும் செய்வதற்கு பதிலாக நன்மையையும், அன்பையும், கரிசனையையும் காண்பிக்கலாமே.

அதிகாரம் பெற்றுள்ளவர்களே கொஞ்சகாலத்துக்கு தரப்பட்டுள்ள அதிகாரத்தைக் கொண்டு எதையும் செய்யலாம் என்று கனவு காண வேண்டாம். அதிகார கோல் பிறரிடம் தாண்டிப்போகச் செய்யும் இயேசு அனைத்தையும் கண்காணிக்கின்றார்.

உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடையபேரில் கடந்துபோகவேண்டும்.

ஆனாலும் விருட்சத்தின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்று சொல்லப்பட்டது என்னவென்றால்: நீர் பரம அதிகாரத்தை அறிந்தபின் ராஜ்யம் உமக்கு நிலைநிற்கும்.

ஆகையால் ராஜாவே, நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு நீதியைச் செய்து உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு இரங்கி உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும்; அப்பொழுது உம்முடைய வாழ்வு நீடித்திருக்கலாம் என்றான், மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமாவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று விளம்பினது. அந்த நாட்கள் சென்றபின்பு நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பி வந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை. தானியேல் 4:25-27,32,34,35.

ADD YOUR COMMENT

Powered By Indic IME