பிலாத்து: இந்த மனுஷன்மேல் என்ன குற்றம் சாட்டுகிறீர்கள்?
Pilate said,What accusation do you bring against this Man? (John 18 :29)
Matthew 27:23; Mark 15:3; Act 21:33; Act 23:28-30; Act 25:5,16; 1 Timothy 5:19; Psalm 64:6.
ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனுஷன்மேல் என்ன குற்றஞ்சாட்டுகிறீர்கள் என்றான். (யோவான் 18:29)
மத்தேயு 27:23; மாற்கு 15:3; அப்போஸ்தலர் 21:33; அப்போஸ்தலர் 23:28-30; அப்போஸ்தலர் 25:5,16; 1 தீமோத்தேயு 5:19; சங்கீதம் 64:6.
இந்த மனுஷன்:
இயேசுவைத் தேவகுமாரனாக காணும் கண்களை பெறாததினால்தான் யூதர்கள் இயேசுவை தேசாதிபதியிடம் ஒப்புக் கொடுத்தனர். அவர்மேல் அபாண்டமான குற்றசாட்டுகளையும் சுமத்தினர். அவர்களை போலவே பிலாத்துவும் இயேசுவை சாதாரண மனிதனாக கண்டதினால்தான் இயேசுவை மனிதன் என்று குறிப்பிடுகின்றார். மனித சமுதாயத்துக்கு எதிரானதும், தேவனுக்கு எதிரானதுமான பிசாசுகளே இயேசுவை தேவகுமாரனாக கண்டு சாட்சியிட்டன. தேவசாயலாக படைக்கப்பட்டும், தேவ வாக்குகளைப் பெற்றும், தேவனுடைய ஜனமாக இருந்து பல நன்மைகளைபெற்றும் தேவனின் மகனை அடையாளம் கண்டு கொள்ளாத யூதர்களை போலவே, தேவனால் அதிகாரம், ஆளுகை, ஆற்றல் பெற்றிருந்தும் தேவனின் மகனை அடையளம் காணாத ஆட்சியாளர்களும் காணப்பட்டனர்.
அன்றுமட்டுமல்ல, சபை வரலாற்றிலும் கூட இயேசுவின் அடியவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் பல நன்மைகளை பெற்றுக்கொண்ட பெரிய மனிதர்களும் கூட இயேசுவை தேவகுமாரனாக அறிவிப்பதற்கு பதிலாக அவரை மனிதன் என்று கூறி தப்பறை உபதேசங்களை வசனித்து கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை களங்கப்படுத்தினார்கள். அப்படிபட்டவர்கள் இன்றைக்கும் சபைகளில் கோலொச்சிக் கொண்டிருக்கின்றனர். 1யோவான் 4:1-3. மனிதனாக சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே தேவகுமாரனாகவும், தேவனாகவும் இருக்கிறார் என்ற அறிக்கை இக்காலத்தில் பலரிடம் இல்லை.
இக்காலத்தின் உலகியாளர்களாகிய சமுதாய சிற்பிகள், அரசியல் மேதைகள், சமய விற்பன்னர்கள் எல்லாம் தேசத்தில் எழும்பி பல சாதனைகளை செய்ததாக அறியப்படுகின்றது. ஆனால் இயேசுவின் மிகப்பெரிய சாதனையாகிய மனித மீட்பு மறக்கப்பட்டு போகின்றது. இவர்கள் எல்லாம் தேவ மைந்தனாகிய இயேசுவை தேவ மகனாக காணும் கண்களை பெற்றிருக்கவில்லை. காரணம் இவர்களெல்லாம் ஞானம் என்று பொய்யாய் பெயர்பெற்றிருக்கிறவைகளினால் நிரப்பப்பட்டு தேவ மகனை தேவ மகனாக பார்க்காதபடிக்கு கண் சொருகிப்போனவர்களாக இருக்கிறார்கள்.
இவர்கள் இயேசுவை மனிதனாகவே பார்க்கட்டும். சமயதலைவராகவே பார்க்கட்டும். ஆனால் அவருடைய பிள்ளைகளாகிய – ஊழியகாரர்களாகிய நாம் இயேசுவை எப்படி பார்க்கின்றோம்?. அவரை தேவகுமாரனாக பார்க்காதபடிக்கு மாறாட்டம் பிடித்துள்ளதென்றால் அதிலிருந்து விடுபட்டு தெளிவு பெற்று தேவ மகனின் ஜீவனை கொண்ட தேவர்கள் என அழைக்கப்பட தகுதியாவோம்.
இயேசுவை மனிதனாகவும், தேவனாகவும் அறிந்து அவரோடு இணைந்து வாழ முயல்வோம்.
பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. 1யோவான் 4:1-3.
கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்; பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.
ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையுΠύ மாம்சத்தின்படி அறியோம்; நாΙ்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம். இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 2கொரிந்தியர் 5:14-17.