குளிர்காலமானபடியினால் அவர்களுடனேகூட பேதுருவும் நின்று குளிர்காய்ந்தான்

குளிர்காலமானபடியினால் அவர்களுடனேகூட பேதுருவும் நின்று குளிர்காய்ந்தான்.

They warmed themselves. And Peter stood with them and warmed himself. (John 18:18)

John 18:25; Mark 14:54; Luke 22:55,56; Genesis 3:8; Psalm 147:17; Proverb 25:25; Proverb 31:21; Song 2:17.

குளிர்காலமானபடியினாலே ஊழியக்காரரும் சேவகரும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள், அவர்களுடனேகூடப் பேதுருவும் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். (யோவான் 18:18)

யோவான் 18:25; மாற்கு 14:54; லூக்கா 22:55,56; ஆதியாகமம் 3:8; சங்கீதம் 147:17; நீதிமொழிகள் 25:25; நீதிமொழிகள் 31:21; உன்னதப்பாட்டு 2:17.

குளிர்காலம்:

மிதமான வெப்பநிலை மற்றும் துணைத் துருவ பிரதேசங்களிலான நான்கு காலண்டர் அடிப்படையிலான பருவகாலங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன: இளவேனிற்காலம், கோடைக்காலம், இலையுதிர்காலம், குளிர்காலம் ஆகும். இந்த குளிர்காலமானது குளிர் அதிகமாக உள்ள ஒரு பருவகாலம் ஆகும். இந்த காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும், பகல் நேரம் குறைவாகவும் இருப்பதுடன் சில நாடுகளில் பனிமழை பெய்யும். வடக்கு அரைகோளத்தில் உள்ள பிரதேசங்களில் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களிலும், தெற்கு அரைகோளத்தில் உள்ள நாடுகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும் இந்த குளிர்காலத்துக்குரிய காலநிலை காணப்படும். இஸ்ராயேல் நாடு வடக்கு அரைகோள பகுதியில் உள்ளதினால் இதன் குளிர்காலம் மார்ச் வரையிலும் இருக்கும். இக்காலத்தில்தான் இயேசு சிலுவைப்பாடுகளை அனுபவித்தார்.

பகலின் குளிர்ச்சியான பொழுதில் தேவன் ஏதேன் தோட்டத்தில் உலாவினார் என்று ஆதியாகமம் 3:8 கூறுகின்றது. குளிர்காலத்தில் பனிபொழிவு அதிகமாக காணப்படும். பனியானது கடினதன்மையற்ற ஒரு வஸ்துவாகவும், பால்போன்ற வெண்மை நிற வஸ்துவாகவும், இயற்கையில் தேவனின் கைவண்ணத்தைக் காட்டுவதாகவும் காணப்படுகின்றது. குளிர்காலங்களில் குடும்ப பந்தங்கள் நெருக்கமாக காணப்படுவர். அதைபோலவே இணைந்து காணப்படும் மனுமக்கள் மத்தியில் இந்த குளிர்ச்சியான பொழுதில் தேவன் உலா வருகின்றார். அவரின் உலாவுதல் தூய்மையை வெளிப்படுத்துவதாகவும்,மென்மையானதாகவும் காணப்படுகின்றது. ஆதியாகமம் 3:8 ல் மாலைப்பொழுதைக் குறிப்பிடுவதாக காணப்படுகிறது. யோவான் 18:18 காலைபொழுதைக் குறிப்பிடுவதாக தெரிகிறது.

காலையில் கர்த்தரை கண்டடையும்படியாக தேவனுடைய மக்கள் தேவனிடமாய் அடைவிடம் தேடுவது நல்லது. காலையில் தேடுவோர் என்னை கண்டடைவர் என்று விவிலியம் கூறுகின்றது. மாலைபொழுது தேவன் மனிதர்களை தேடிவரும் நேரமாக உள்ளது. காலையில் தன்னை தேடிவந்த தேவபிள்ளைகளை மாலைபொழுதில் கர்த்தர் தேடி வருகிறார் – தம்மை வெளிப்படுத்துகின்றார். காலையில் தேவனுக்காய் காத்திருப்போர் மாலையில் அவரை தரிசிப்பார்கள். காலையும், மாலையும் அமைதியாய் அடைவிடங்களில் மனரம்மியமாய் அமர்ந்திருக்கும் நேரம் ஆகும். நாம் காலைபொழுதை தூக்கத்துக்காகவும், மாலைபொழுதை ஊர் சுற்றுவதற்கோ பணிகளில் படு பிசியாய் இருப்பதற்கோ பயன்படுத்துவதினால் அவர் சத்தத்தை கேட்கவும், அவரைப் பார்க்க முடியாமலும் போகின்றது.

அந்தந்த காலங்களில் நாம் நடந்துக் கொள்ள வேண்டிய முறைமைகளை தேவனே நமக்கு தருகிறார்.

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு. பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு; கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு; இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு; அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு; புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு;

கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலமுண்டு; தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு; தேட ஒரு காலமுண்டு, இழக்க ஒரு காலமுண்டு; காப்பாற்ற ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு; கிழிக்க ஒரு காலமுண்டு, தைக்க ஒரு காலமுண்டு; மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு; சிநேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு; யுத்தம்பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண ஒரு காலமுண்டு. வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?

மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன். அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும்கிரியையை மனுஷன் கண்டுபிடியான். மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். பிரசங்கி 3:1-12.

ADD YOUR COMMENT

Powered By Indic IME