காய்பாவுக்கு மாமனாயிருந்த அன்னாவிடம் இயேசுவைக் கொண்டுபோனார்கள்

காய்பாவுக்கு மாமனாயிருந்த அன்னாவிடம் இயேசுவைக் கொண்டுபோனார்கள்.

They led Him away to Annas first, for he was the father-in-law of Caiaphas who was high priest that year. (John 18:13)

Matthew 26:57,3-4; Mark 14:53; Luke 3:2; John 11:49,51; John 18:24; Act 4:6.

முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள், அவன் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு மாமனாயிருந்தான். (யோவான் 18:13)

மத்தேயு 26:57,3-4; மாற்கு 14:53; லூக்கா 3:2; யோவான் 11:49,51; யோவான் 18:24; அப்போஸ்தலர் 4:6.

அந்தகாரத்தின் அதிகாரம்:

அன்னா என்றால் தாழ்மை என்று பொருள். அன்னா தாழ்மை என்ற பெயரைக் கொண்டிருந்து தாழ்மையின் வடிவமாக வந்த இயேசுவின் மீது அதிகாரம் செலுத்தினான். விவிலியத்தில் துன்மார்க்கனின் ஆளுகையும், பெண்களின் ஆளுகையும், அடிமையின் ஆளுகையும் தேவனால் நிராகரிக்கப்பட்டுள்ளதை அறிகின்றோம். சிறியவன் பெரியவனை ஆளுகை செய்ய துடிக்கும் காலம். தேவனின் மகனை தேவனிடமிருந்து அதிகாரம் பெற்றவர்கள் ஆளுகை செய்கிறார்கள். பொய்யாய் தாழ்மை என்று பெயர் பெற்றிருக்கிறவர்கள் ஆளுகிறார்கள்.

காய்பா என்றால் அழகுள்ள, இன்பம் உண்டாக்குபவன் என்று பொருள். யூதேயா கவர்னரால் பிரதான ஆசாரியனாக நியமிக்கப்பட்டவன். அன்னா என்பவன் காய்பாவுக்கு மாமனாயிருந்தான். அழகுள்ள காய்பா தன் அழகின்மேல் கர்வம் கொண்டவனாய் இளங்கிளையைப்போல துளிர்த்தெழும்பும் தேவ சாயலின் தேஜஸ் உடையவராகிய இயேசுவின்மேல் அதிகாரம் செலுத்துகிறான். அழகு எல்லாம் வீண் என்று விவிலியம் கூறுகின்றது. உலக அழகுள்ளவர்களின் அழகினால் உண்மை அழகுள்ள இயேசுவை அந்த சேட்டை செய்தனர்.

உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் விழுந்து கிடக்கிறது என்று விவிலியம் கூறுகின்றது. உலகத்தின் மக்கள் உலகத்தின் அறிவுக்கும், அழகுக்கும், பெருமைக்கும் தங்களை ஒப்புக்கொடுத்து மாயையான உலகில் மாய்மால வாழ்க்கை வாழுகின்றனர். தேவ சமூகம் வரும்போது தூய்மையானவர்கள் போலும், யோக்கியர்கள் போலும், பக்தியுள்ளவர்கள் போலும், கீழ்படிதல் உள்ளவர்கள் போலும் நடந்து கொள்கின்றனர். ஆனால் தேவ சமூகத்தை விட்டு போன பின்பு பன்றியின் மூக்குத்தி போலவும், எல்லாவிதமான அசுத்தங்களையும் ஆவலோடு நடப்பிக்கிறவர்களாகவும் காணப்படுகின்றனர். அதிலே அவர்கள் பழகிப் போனதினால் அவைகளிலிருந்து வெளியேறி அசுத்தமானவைகளை தொடாதிருங்கள் என்ற செய்திக்கு தங்களை ஒப்புக்கொடுக்க தயங்குகின்றார்கள். இவைகளெல்லாம் அந்தகாரத்தின் கிரியைகளாக இருக்கிறது. இருளில் பழகிபோனவர்கள் வெளிச்சத்துக்குள் ரொம்ப நேரம் இருக்க இயலாது. கூடுமானால் வெளிச்சத்தையும் தன் இருளின் கிரியைகளினால் மேற்கொள்ளவே முயற்சிப்பார்கள்.

முட்டாள்கள் ஞானவான்களாகவும், பேதைகள் அறிவாளிகளாகவும், அக்கிரமக்காரன் அந்தஸ்துக்குரியவனாகவும் காணப்படுகிறது அந்தகாரத்தின் கிரியையே. ஆனால் வெளிச்சமாகிய இயேசுவை ரொம்ப நாள் மூடி வைக்க முடியாது.

விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குப் பங்காளிகளாகாதிருங்கள். முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.

அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே.
அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது. ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார். எபேசியர் 5:5-14.

ADD YOUR COMMENT

Powered By Indic IME