யூதாசின் கூட்டத்தார் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி

யூதாசின் கூட்டத்தார் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி.

detachment of troops and the captain and the officers of the Jews arrested Jesus and bound Him. (John 18:12)

John 18:3; Matthew 26:57; Matthew 27:2a; Mark 15:1; Act4:3; Gensis 22:9; Genesis 40:3; Judgement 16:21; Psalm 118:27.

அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி, (யோவான் 18:12)

யோவான் 18:3; மத்தேயு 26:57; மத்தேயு 27:2a; மாற்கு 15:1; அப்போஸ்தலர் 4:3; ஆதியாகமம் 22:9; ஆதியாகமம் 40:3; நியாயாதிபதிகள் 16:21; சங்கீதம் 118:27.

கட்டப்பட்ட இயேசு:

பிதா தந்த பாத்திரத்தை சந்தோஷமாக குடித்த இயேசு எதிராளிகளின் கைகளினால் கட்டப்பட்டவராய் கொண்டுபோகப்படுகின்றார். இயேசுவை ஏன் பிடித்தார்கள் என்பதை சுவிசேஷங்களில் நாம் காணமுடிகின்றது. ஆனால் அவரைக் கட்டிக்கொண்டு போனதின் ரகசியம் என்ன என்பதை அறிந்தால் நலம். அவர் கைதியாக கருதப்படுகிறார். குற்றவாளியாகக் காட்டப்படுகிறார். பட்டயம் வீசும் கூட்டத்தின் தலைவனாக காட்டப்படுகிறார். அக்கிரமக்காராரில் ஒருவராக சித்தரிக்கப்படுகிறார்.

கர்த்தராகிய இயேசு எத்தனையோ பேரின் பலவீனக் கட்டுகளையும், மாம்ச கட்டுகளையும், வியாதிகளின் கட்டுகளையும், பிசாசுகளின் கட்டுகளையும், மரண கட்டுகளையும், இருளின் கட்டுகளையும் அவிழ்த்து விடுவித்தவர். இன்று கட்டப்பட்டவராக செல்கின்றார். எல்லா பொல்லாத கட்டுகளின் கோபமும், எரிச்சலும், பொறாமையும், ஆற்றலும் ஒருங்கிணைந்து நீதிமானாகிய இயேசுவைக் கட்டிப்போட்டது. இனி இவைகள் ஒவ்வின்றின் ஆக்கிரோஷமும் ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் இயேசுவுக்கு எதிராக தங்களின் கோபத்தை தணித்துக் கொள்ள முனையும்.

கட்டுகளை அறுக்கும், அவிழ்க்கும் சுவிசேஷம், கிறிஸ்தவம், சபைகள், ஊழியக்காரர்கள், விசுவாசிகள், சபை சார்பு இயக்கங்கள் செய்த சாதனைகளையும், கற்பித்த போதனைகளையும், பயிற்றுவித்த தலைவர்களையும் இக்காலத்தில் சபை இழந்து விட்டது. அடிமைதனத்தின் கட்டுகள், வியாதிகளின் கட்டுகள், அறியாமையின் கட்டுகள், இருளின் கட்டுகள், அக்கிரமத்தின் கட்டுகள், மரணத்தின் கட்டுகள், பாவத்தின் கட்டுகள், பிசாசுகளின் கட்டுகள் போன்ற கட்டுகளெல்லாம் மறுபடியும் ஒருங்கிணைந்து கட்டுகளை அறுத்துக்கொண்டிருந்த கிறிஸ்தவத்தை கட்டிப்போட்டுள்ளார்கள். அவர்கள் என்ன செய்ய முடிவு செய்துள்ளார்கள் என்பதை காலங்கள் நமக்கு படிப்பிக்கப் போகின்றது.

கட்டப்பட்ட நிலையில் கிடந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவ சமுதாயமே ஒருவேளை கிறிஸ்துவைபோல கழுமரமேற்றப்படலாம். பயந்து விடாதீர். ஒளி நம்மிடம் உள்ளது. ஜீவன் நம்மிடம் உள்ளது. நிறைவு நம்மிடம் உள்ளது. ஆசீர்வாதம் நம்மிடம் உள்ளது. ஆற்றலும், அதிகாரமும் நம்மிடம் உள்ளது. என்னவென்று கேட்கிறீர்களா? மத்தேயு 28:18 ன் படி வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் பெற்ற இயேசு நம்மோடிருக்கின்றார். கட்டுகள் அறுக்கப்படும்போது நீதிமான்களாகிய நாம் கெம்பீரமாய் முழங்குவோம்.

சங்கீதகாரன் தாவீதோடு ஒருமுறை கூட சேர்ந்து வாசிப்போம்.

ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்? கர்த்தருக்கு விரோதமாகவும் அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி: அவர்கள் கட்டுகளை அறுத்து அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.

பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார். அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார். நான் என்னுடைய பரிசுத்தபர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார். தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;
என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்; இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார். சங்கீதம் 2:1-9.

ADD YOUR COMMENT

Powered By Indic IME