அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.
For their sakes I sanctify Myself, that they also may be sanctified by the truth. (John 17:19)
John 10:36; 1Corinthians 1:2; Hebrew 2:11; Hebrew 9:13,18,26; Hebrew 10:5-10,29.
அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன். (யோவான் 17:19)
யோவான் 10:36; 1கொரிந்தியர் 1:2; எபிரெயர் 2:11;9:13,18,26;10:5-10,29.
தன்னில்தானே பரிசுத்தம்:
தமது அழைப்புக்கு கீழ்படிந்து கிறிஸ்துவை பின்பற்றும் சீஷர்கள் சத்தியத்தினாலே பரிசுத்தமாகும்படியாக, இயேசு கிறிஸ்து தன்னைதானே பரிசுத்தமாக்கிக் கொள்கிறார்.
இயேசு தன்னைதானே பரிசுத்தம் பண்ணிக் கொள்வதின் பொருள் என்ன?
இயேசு கிறிஸ்துவின் பரிபூரணமான கீழ்படிதலையும், தமது தந்தையின் விருப்பத்தை பரிபூரணமாக சார்ந்து நிற்பதையும் குறிக்கின்றது. சத்தியத்தினால் பிறர் பரிசுத்தமாக சத்தியமாகிய கிறிஸ்து தமது அர்ப்பணத்தை வெளிப்படுத்தியாக வேண்டும்.
ஒருவரால் ஒன்றிற்காக வேறுபிரிக்கப்படுதலே பரிசுத்தம் ஆகும். பிதாவின் திருவுளத்துக்காக வேறுபிரிக்கப்பட்டவரே கிறிஸ்து. கிறிஸ்து எதற்காக வேறுபிரிக்கப்பட்டாரோ அதற்கேற்றபடியே வாழ்ந்தால் மட்டுமே பரிசுத்தம் கிறிஸ்துவில் நிலைபெற்றோங்கும்.
இதன் விளைவு என்னவெனில் கிறிஸ்து தம்மைதாமே பலியாக ஒப்புக்கொடுக்கிறார் என்பதாகும். தூய்மையான பலியே தேவனுக்கு அவசியமானது. கீழ்படிதலே தூய்மைக்கு அடித்தளம். கீழ்படிதலை சற்றும் இழக்காமல் இருக்க கிறிஸ்து பாதாளம் வரையிலும் இறங்கினார்.
தேவனுடைய மனிதர்கள் பிறர் சத்தியத்தை அறிந்து விடுதலையின் வாழ்வை அடையும் படியாக தன்னை அனுப்பினவரின் விருப்பத்துக்கு தன்னை முற்றிலும் ஒப்புக்கொடுக்க வேண்டும். கீழ்படிதலின் மூலமாக மட்டுமே அவரின் பரிசுத்தத்தை வெளிப்படுத்த முடியும். கீழ்படிதலில் வெளிப்படுகிற தேவ வார்த்தைகளே ஆரோக்கியமுள்ளதாகவும், உண்மையுள்ளதாயும், ஆற்றலுள்ளதாயும் காணப்படுகின்றது. நம்மை பிறர் புகழ்வதினால் , நமக்கு பிறர் மரியாதை கொடுப்பதினால் தேவன் மகிமைப்படுவதில்லை. நம்மால் எத்தனை பேர் சீர்திருத்தம் பெற்றுள்ளார்களோ அவர்களினாலேதான் தேவன் மகிமைப்படுகிறார்.
நம்மில் உள்ள கீழ்படிதல் யாவருக்கும் தெரியவரும்படியாக நாம் தேவனுக்கு கீழ்படிந்து அவர் விருப்பத்தை நிறைவேற்றி கிறிஸ்துவின் சாயலாகிய தூய்மையை வெளிப்படுத்துவோம்.
நமது தூய்மையாக்கப்படுதல் ஒவ்வொருநாளும் ஒவ்வொருபடியாக மகிமைக்கு ஏறச்செய்யும் படிகற்களாக இருக்கின்றன. எனவே அனுதினமும் நம்மை நாமே பரிசுத்தம் பண்ணிக்கொள்ள ஆயத்தமாகி முடிவில் மகிமைப்படுதலுக்குள் செல்ல ஆயத்தமாவோம்.
ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்; சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரண பலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்க தகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார். இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான். எபிரேயர் 10:5-10.