உலகத்துக்காக அல்ல, நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டுகிறேன்.
I do not pray for the world but for those whom You have given Me, for they are Yours. (John 17:9)
John 14:16; John 16:26,27; Luke 22:32; Hebrew 7:25; Hebrew 9:24; 1John 2:1,2; 1John 5:19; Revelation 12:9; Revelation 13:8; Revelation 20:15.
நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்: உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன், அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே. (யோவான் 17:9)
யோவான் 14:16; யோவான் 16:26,27; லூக்கா 22:32; எபிரெயர் 7:25; எபிரெயர் 9:24; 1யோவான் 2:1,2; 1யோவான் 5:19; வெளி 12:9; வெளி 13:8; வெளி 20:15.
வேண்டிக்கொள்கிறேன்:
கர்த்தராகிய இயேசு தேவன் தமக்குத் தந்த சீசர்களுக்காக வேண்டுதல் செய்கிறார். உலகத்துக்கும் உலகின் காரியங்களுக்காகவும் வேண்டுதல் செய்யாமல் உலகத்தாராயிராது தேவனுக்கும் தனக்கும் உரியவர்களாக இருக்கும் சீஷர்களுக்காக தமது தந்தையிடம் வேண்டுதல் செய்கிறார். ஏன் அவர்களுக்காக வேண்டுதல் செய்கிறார் என்பதற்கு தொடர்ந்த வசனங்களில் பல குறிப்புகள் காணப்பட்டாலும் இவ்வசனத்தில் ஒரே ஒரு குறிப்பு காணப்படுகிறது. அதாவது அவர்கள் உலகத்தார் அல்ல என்பதே ஆகும். இதனை நாம் 16 ஆம் வசனத்தில் காணமுடியும்.
கிறிஸ்துவின் அணுகுமுறைகளும் உபதேசங்களும் கிரியைகளும் உலக நடைமுறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. கிறிஸ்து தம்முடையவர்களுக்காக வேண்டுதல் செய்தல் என்பது குறுகிய மனோபாவம் என்று கருத முடியாது. சீஷர்கள் இயேசுவால் அழைக்கப்பட்டு அவரால் பயிற்றுவிக்கப்பட்டு அவரால் போஜிப்பிக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். தங்களை விட்டு கிறிஸ்து பிரிந்து போகிறார் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லாவற்றையும் விட்டு இயேசுவைப் பின்பற்றி வந்திருக்க இப்பொழுது இயேசு அவர்களை பாதி வழியிலேயே விட்டு செல்வது போல் அல்லவா இருக்கிறது என்று நினைத்தார்கள். இந்நிலையில் கிறிஸ்துவும் இவ்வுலகில் இவர்களை விட்டு செல்வதை குறித்த நினைவு வந்தவராய் தான் அவர்களுக்கு பாதுகாவலராக இருந்ததுபோல தந்தையே நீரும் அவர்களுக்கு பாதுகாவலராக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
தேவனுடைய மக்களுக்கு உலகம் பாத்திரமாக இருப்பதில்லை, அனுசரணையாக இருப்பதில்லை. எனவே அவர்களைக் காக்கும் பொறுப்பு தேவனுக்குரியதே. எரேமியாவிடம் தேவன் உன்னை காக்கும்படிக்கு உன்னோடு இருக்கிறேன் என்று கூறியதைப் போலவே தமது பிதாவானவர் தமது சீஷர்களை காக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்காக வேண்டுகிறார்.
உலகத்துக்காக ஜெபிக்காமல் உலகத்தை மீட்க உழைக்கப் போகிற கிறிஸ்துவின் சீஷர்களுக்காக ஜெபிக்கிறார். நாமும் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாக உள்ளோருக்காக ஊக்கமாக ஜெபிக்க கடனாளிகளாக இருக்கிறோம்.
இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு, நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். எபேசியர் 3:14-19.