நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்று அறிந்திருக்கிறோம்.
Now we are sure that You know all things,no need that anyone should question You. (John 16:30)
Genesis 20:6; Genesis 22:12; Exodus 3:7; Psalm 1:6; Matthew 9:4; Matthew 16:8; Matthew 6:8,32; Luke 8:46; John 2:24; John 17:7,25; John 21:17; Act 1:24; 1John. 3:3.
நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை வினாவவேண்டுவதில்லையென்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம், இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீரென்று விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 16:30)
ஆதியாகமம் 20:6; ஆதியாகமம் 22:12; யாத்திராகமம் 3:7; சங்கீதம் 1:6; மத்தேயு 9:4; மத்தேயு 16:8; மத்தேயு 6:8,32; லூக்கா 8:46; யோவான் 2:24; யோவான் 17:7,25; யோவான் 21:17; அப்போஸ்தலர் 1:24; 1யோவான் 3:3.
எல்லாம் அறிந்தவர்:
இயேசுகிறிஸ்து மண்ணிலிருந்து உண்டானவர் அல்ல, மனித வயிற்றில் ஜெனித்தவர். இயேசுகிறிஸ்து விண்ணிலிருந்து வந்தவர், மனிதக்குமாரனாய் வாழ்ந்தவர். இயேசுகிறிஸ்து தேவகுமாரனாகவும், மனுஷக்குமாரனாகவும் வந்திருந்து தேவனுடையவைகள் சார்ந்தவைகளையும் அதாவது ஆவி சார்ந்தவைகளையும், மனுஷர்கள் சார்ந்தவைகளையும் அதாவது சடபொருள் சார்ந்தவைகளையும் அறியும் ஆற்றல் உடையவர். மனித உள்ளங்களை உண்டாக்கினவராயிருப்பதினால் மனித உள்ளங்களின் இரகசியங்களையும் அறிகிறவர். அவருக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை.
இருக்கிறவைகளையும், இல்லாதவைகளையும், முன்னர் மறைந்து போனவைகளையும், இப்பொழுது இருப்பவைகளையும், இனிமேல் தோன்ற போகிறவைகலளையும், காணப்படுகிறவைகளையும் காணப்படாதவைகளையும் அறிகிறவர்.
ஞானம், புத்தி, அறிவு, நுண்ணறிவு, கூரறிவு போன்ற அனைத்தும் அவரிடம் உண்டு. அவருக்கு யாரும் கற்றுக்கொடுக்கவோ, போதிக்கவோ வேண்டியதில்லை. அவருக்கு ஒருவரும் ஆலோசனைக்காராராயிருக்க அவர் ஒருவரையும் நியமிக்கவில்லை. ஊழியக்காரர்கள் எஜமானாகிய அவருக்கு ஆலோசனை கொடுக்கவோ, அறிவை சொல்லிக்கொடுக்கவோ நியமிக்கப்படவில்லை. அவர் என்ன சொல்லுகிறாரோ அதைக்கேட்டு அதன்படி செய்ய பணிக்கப்பட்டுள்ளார்கள். விசுவாசிகளாகிய நாம் எனக்கு நீர் இதை தந்தால் நலமாயிருக்கும் என்று சொல்ல அவர் நம்மிடம் கேட்டு அவர் நம்மை இரட்சிக்கவில்லை. அவரின் விருப்பப்படியே நம்மை இரட்சித்துள்ளார். எனவே அவர் நமக்கு எதை தருகிறாரோ அதைகெகொண்டு சந்தோஷமாக வாழவே அவர் விரும்புகிறார். நீ உன் இஷ்டபடி கேட்டு கஷ்டப்படுவதை விட அவர் கொடுப்பதைப் பெற்றுக்கொண்டு நீண்ட நாள் வாழ்ந்திருப்பதையல்லாமல் வேறே எதை அவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
நாம் அவருக்கு வழிகாட்டுகிறவர்களல்ல, அவருடைய வழியில் நடக்கிறவர்கள்.
அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன். நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்மைக் கேள்விகேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும். என் காதில் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான். யோபு 42:1-6.