நீங்கள் துக்கப்படுவீர்கள், உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்
world will rejoice;u will be sorrowful,but ur sorrow will be turned into joy. (John 16:20)
Matthew 5:4; Luke 6:21; Act 2:46,47; Act 5:41; 1Thes1:6; James 1:2,3; Psalm 30:5,11; Psalm 40:1-3; Psalm 97:11; Psalm 126:5,6.
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும், நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். (யோவான் 16:20)
மத்தேயு 5:4; லூக்கா 6:21; அப்போஸ்தலர் 2:46,47; அப்போஸ்தலர் 5:41; 1தெசலோனிக்கேயர் 1:6; யாக்கோபு 1:2,3; சங்கீதம் 30:5,11; சங்கீதம் 40:1-3; சங்கீதம் 97:11; சங்கீதம் 126:5,6.
துக்கம் சந்தோஷமாக மாறும்:
சீஷர்களின் வேதனையை – துன்பத்தை – அழுகையை – இழப்பை சரி செய்வதே இயேசுகிறிஸ்துவின் திருப்பணியாகும். தமது பணிவிடைக்காரர்கள் தம்மைபோல எப்படிபட்ட துன்பத்தை அடைவார்கள் என்று இயேசு அறிந்திருந்தார். தமக்கு தம்முடையவர்களும், உலகமும் எதிர்த்து நிற்பதுபோல தம்மை பின்பற்றுகிற பணிவிடைக்காரர்களுக்கும் உலகம் பாத்திரமாயிருக்கவில்லை என்று அறிந்திருக்கிறார். ஆகையினால் தான் இப்பொழுது நீங்கள் துக்கப்படுகிறீர்கள், ஆனால் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்று கூறுகின்றார்.
நேற்றையதினம் மூன்று விஷயங்களை நாம் அறிந்தோம். இன்றைக்கு இயேசுவைக் காணாதிருக்க வேண்டிய காலம் வருவதினால் சீஷர்கள் துக்கமாயிருக்கலாம். இருதயம் துக்கத்தினால் நிரம்பியிருக்கலாம். இதினிமித்தம் உலகம் சந்தோஷப்பட்டிருக்கலாம். ஆனாலும் இயேசுவை காணும் நாட்கள் வரும் போது உலகம் துக்கப்பட நீங்களோ சந்தோஷப்படுவீர்கள் என்கிறார். இதனால் உலகம் தொடர்ந்து துயரத்திலே, வேதனையிலே வாழ தேவ ஜனமோ எப்பொழுதும் சந்தோஷமாயிருக்கும்.
கிறிஸ்தவ வாழ்வில் கிறிஸ்துவினிமித்தம் உண்டாகும் துக்ககரமான நிகழ்வுகள் நிரந்தரமானவைகளல்ல, தீமைகளும், தீங்கு செய்பவர்களும் அதிகாரம் பெற்றிருப்பது வரையிலும் மட்டுமே தேவனுடைய ஜனம் துன்பத்தை அனுபவிக்கிறது. ஆனால் இயேசுகிறிஸ்துவினால் கிடைத்துள்ள சந்தோஷம், சமாதானமானது நிரந்தரமானது. அவைகள் உலகத்திலிருந்து உண்டானதாயிராததினால் அவைகளை விலக்கி வைக்க உலகத்தாலும், தீமையினாலும் இயலாது.
கிறிஸ்துவை நம்பி வாழ்கின்றவர்களுக்கு உலகம் பாத்திரமாயிருப்பதில்லை. உலகத்தோடு ஒட்டியும், இணைந்தும் வாழாதிருப்பதினால் முழு உலகமும் தேவனுடைய மக்களுக்கு எதிராகவே எழும்பி நிற்கும். இதற்கு காரணம் உண்டு. சிருஷ்டிகளானது தேவபக்தியுள்ள சந்ததி தோன்றும்படி மன்றாடிக் கொண்டிருக்க தீமையின் கர்த்தாக்கள் தங்களுக்கும் கொஞ்சம் காலம் மாத்திரமே உண்டு என்று அறிந்து தேவனுடைய ஜனத்தை அழித்து ஒழிக்க போராடுகின்றது. ஆனால் சிருஷ்டிகளின் ஏக்கமும், தேவனின் வாக்குதத்தங்களும் தோற்றுபோகாது என்பதை தீமை அறிந்திருக்கவில்லை.
ஆம் நமது துக்கம், இழப்பு, வேதனை ஈடு செய்யப்படும்.
விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறடியால் பேசுகிறோம். கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம். தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு இவையெல்லாம் உங்கள்நிமித்தம் உண்டாயிருக்கிறது. ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது. மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். 2கொரிந்தியர் 4:13-18.