இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியுள்ளது

இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியுள்ளது

I still have many things to say to you, but you cannot bear them now. (John 16:12)

John 14:30; John 15:15; Act 1:3; Mark 4:33; 1Corinthians 3:1,2; Hebrew 5:11-14.

இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். (யோவான் 16:12)

யோவான் 14:30; யோவான் 15:15; அப்போஸ்தலர் 1:3; மாற்கு 4:33; 1கொரிந்தியர் 3:1,2; எபிரெயர் 5:11-14.

இன்னும் அனேகம் உண்டு:

கர்த்தராகிய இயேசு பிதாவின் குமாரனாக வந்தார். பிதாவையும் அவரது விருப்பங்களையும் நன்றாக அறிந்திருந்தவர் அவர் மட்டுமே. கர்த்தராகிய இயேசு தமக்கு போதிக்கப்பட்ட, காண்பிக்கப்பட்ட, ஒப்படைக்கப்பட்ட எல்லாவற்றையும் தமது சீஷர்களுக்கு அறிவித்தார் என்று யோவான் 15:15 கூறுகின்றது. தமது வாழ்க்கை, பணி யாவற்றையும் முடித்தவராய் தமது தந்தையிடம் செல்லும்போது யாவையும் செய்து முடித்ததாக தந்தையிடம் கூறுகின்றார். யோவான் 17:4. சிலுவையில் தொங்கும்போது கூட முடிந்தது என்று சொல்லி முற்றுபுள்ளி வைத்தார்.

இந்த சூழ்நிலையில் நான் சொல்ல வேண்டியவைகள் ஏராளம் உண்டு. அவைகளை இப்பொழுது சொன்னால் நீங்கள் தாங்கமாட்டீர்கள் என்று இயேசு தமது சீஷர்களிடம் கூறுகின்றார். மேலும் தாம் அனுப்பபோகின்ற பரிசுத்த ஆவியானவர் தான் சொல்லாமல் விட்ட யாவையும் எடுத்துகூறி உங்களை சத்தியத்துக்குள் நடத்துவார் என்று கூறுகின்றார்.

இயேசுகிறிஸ்து ஏன் யாவற்றையும் எடுத்துக் கூறவில்லை? அவைகளை இப்பொழுது நான் எடுத்து கூறினேனென்றால் நீங்கள் தாங்கமாட்டீர்கள் என்று கூறுகின்றார். ஏன் அவர்கள் தாங்கமாட்டார்கள்? நான் போகிறேனென்று சொன்னபோதே சீஷர்களால் அந்த பிரிவை தாங்க முடியவில்லை. எனவே அவைகளை இப்பொழுது சொல்லவில்லை. மேலும் சீஷர்கள் இன்னும் யூதசமய ஒழுங்கு முறைகளில் இருப்பதினால் இயேசு கிறிஸ்துவின் உபதேசங்கள் யாவற்றையும் ஏற்றுகொள்ளும் பக்குவம் உண்டாகாது இடறிபோக நேரிடும்.

பரிசுத்த ஆவியின் நிறைவை பெற்ற பின்பு எல்லா காரியங்களையும் அறிவார்கள். இயேசுவின் சீஷர்களாகிய பேதுரு, யோவான் போன்றவர்கள் கடைசிகாலங்களில் நடப்பவைகளைக் குறித்து எழுதியுள்ளார்கள். ஆம். பரிசுத்த ஆவியின் நிறைவை பெறும்போது அனேக ரகசியங்கள், கிரியைகள் உண்டாகும்.

நாமும் ஆவியின் நிறைவையும், வரங்களையும் பெற்றுக்கொண்டு இயேசுவுக்காய் உண்மையான சாட்சியாய் வாழுவோம்.

நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும். காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும். எபிரேயர் 5:11-14.

ADD YOUR COMMENT

Powered By Indic IME