உலகின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினால் நியாயத்தீர்ப்பைக் கண்டித்துணர்த்துவார்

உலகின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினால் நியாயத்தீர்ப்பைக் கண்டித்துணர்த்துவார்.

Jn16:11. He will convict of judgment, because the ruler of this world is judged. (John 16:11)

John 12:31; John 14:30; John 5:22-27; Matthew 12:18,36; Act 10:42; Act 17:30,31; 1Corinthians 6:1-4; 2Corinthians 5:10,11.

இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார். (யோவான் 16:11)

யோவான் 12:31; யோவான் 14:30; யோவான் 5:22-27; மத்தேயு 12:18,36; அப்போஸ்தலர் 10:42; அப்போஸ்தலர் 17:30,31; 1கொரிந்தியர் 6:1-4; 2கொரிந்தியர் 5:10,11.

நியாயத்தீர்ப்பைக் குறித்து கண்டித்துணர்த்துவார்.

நியாயத்தீர்ப்பை அல்ல, உலகத்தின் அதிபதி ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டு விட்டதினால் வரப்போகிற நியாயத்தீர்ப்பை குறித்து உலகத்தைக் கண்டித்துணர்த்துவார் ஆவியானவர்.

இந்த வசனத்துக்கு பலவிதமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. என்றாலும் நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய ஒரு சத்தியம் உள்ளது.

உலகமெல்லாம் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது. உலகின் ஐசுவரியமெல்லாம், கல்வியெல்லாம் பிசாசுக்கு அடக்கமாயிருக்கிறது. எங்கு பார்த்தாலும் தேவனுக்கும், கிறிஸ்துவுக்கும், தேவனுடைய சபைக்கும் எதிராக தீமை ஆக்ரோஷிக்கின்றது. நன்மை தோற்றுவிடுமோ என்ற ஐயம் உண்டாகின்றது. சத்துரு – உலகத்தின் அதிபதி ஜெயித்து விடுவானோ என்று எண்ன தோன்றுகின்றது.

ஒன்றை நாம் நினைவில் கொள்ள பரிசுத்த ஆவியானவர் தூண்டுகின்றார். அதாவது அனைத்தையும் கைவசப்படுத்திய பிசாசு ஏற்கனவே தீர்ப்பிடப்பட்டவனாய் இருளின் சங்கிலியினால் அகட்டப்பட்டவனாகவும் இருக்கின்றான் என்பதை நினைவு படுத்துகின்றார். பிசாசையும் அவன் கூட்டத்தையும் பின்பற்றி செல்லும் உலகத்தை எச்சரிக்கும்படியாக பரிசுத்த ஆவியானவர் உலகத்தைக் கண்டித்துணர்த்துவார். சத்துரு தேவனால் தீர்ப்பிடப்பட்டவன். அவனை பின்பற்றினால் அதே தீர்ப்பு உங்களுக்கும் உண்டாகும் என்று கண்டித்து உணர்த்துகின்றார்.

நாம் உரக்க பேசமுடியாவிட்டாலும் நமது உள்ளம் சாத்தான் மேல் தேவனுடைய தீர்ப்பு வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து நம்மை சார்ந்தவர்களையாவது எச்சரிக்க வேண்டியவர்களாயிருப்போம்.

தீர்ப்பிடப்பட்டவனை பின்பற்றி செல்லும் உலகம்; தீமையை பின்பற்றி செல்லும் உலகம்.

விவிலியம் கூறுவதாவது….
மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். வெளிபடுத்தல் 20:10-15.

ADD YOUR COMMENT

Powered By Indic IME