நான் என்னை அனுப்பின பிதாவிடத்திற்குப் போகிறேன்

நான் என்னை அனுப்பின பிதாவிடத்திற்குப் போகிறேன்

Now I go away to Him who sent Me,none asks Me,Where are You going? (John 16:3)

John 16:10,16,28; John 6:62; John 7:33; John 13:3; John 14:28; John 17:4,13; Ephesians 4:6-10; Hebrew 1:3; Hebrew 12:2.

இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. (யோவான் 16:5)

நான் போகிறேன்:

கர்த்தராகிய இயேசு விவிலியம் முன்னுரைத்தபடி அவைகள் நிறைவேறதக்கதாக தாவீதின் சந்ததியில் மனுஷ குமாரனாக வந்தார். இயேசு கிறிஸ்து தேவனுடைய ஒரே பேறான குமாரனாகவும் அறியபட்டார். தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் பரிபூரணமாக அவருக்குள் வாசமாயிருந்தது. உலகில் இயேசு செய்துமுடிக்க வேண்டுமென்று ஒப்புவிக்கப்பட்ட யாவற்றையும் செய்து முடித்தவராய் நிற்கின்றார். இனி இயேசு கிறிஸ்து செய்ய வேண்டிய இரு காரியங்கள் மட்டுமே உண்டு. ஒன்று மனுகுலத்தை இரட்சிப்பதற்காய் பலியாக வேண்டும், இன்னொன்று இரட்சிக்கப்பட்டோருக்கு தேவனுடைய ஆவியைக் கொடுக்க உயிர்த்து பரமேறி செல்ல வேண்டும் என்பதே.

கர்த்தராகிய இயேசு, தான் எங்கிருந்து வந்தேன் என்பதை அறிந்திருந்தார். யாரால் அனுப்பப்பட்டேன் என்பதையும் அறிந்திருந்தார். ஆகையினால் தமது திருபணிகள் அனைத்தின் மத்தியிலும் தான் வந்த இடத்தைக் குறித்தும், அனுப்பிய பிதாவைக் குறித்தும் உளபார்வையும், வெளிபார்வையும் உடையவராயிருந்தார். எந்த போராட்டங்களினாலும், எவ்வித மன ஆசையை உருவாக்கும் உலகியல் காரியங்களினாலும் அந்த பரலோக வாஞ்சையை அவித்து போட முடியவில்லை. எப்பொழுதும் தான் வந்த இடத்தைக் குறித்தே பேசினார். அதனை தேவனுடைய இராஜ்யம் என்று எடுத்துரைத்தார். ஆகையினால்தான் அங்கு போவதையே அதிகமாய் விரும்புகிறார்.

பவுல் கூட இவ்வித வாஞ்சையுடையவராய் இருந்தார் என்பதை பிலிப்பியர் 1:20-26 ல் தெளிவாக வாசிக்கிறோம். தனது வாசகர்களுக்கு கூட பூமிக்குரியவைகளையல்ல மேலானவைகளையே நாடுங்கள் என்று கொலோசெயர் 3:1,2 ல் அழுத்தமாக கூறுகின்றார். தேவனுடைய மக்களாகிய நாம் விண்ணிலிருந்து வந்தவரால் மீட்கபட்டதுண்டானால் விண்ணிற்குரியவைகளையே நாடி தேட வேண்டும். உலகமும் அதன் காரியங்களும் அழிந்துபோகக் கூடியது. அழியாததும், காணப்படாததுமாகிய நித்தியத்தையே வாஞ்சிப்போம்.

காண்பது அநித்தியம்; காணாதது நித்தியம்.

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.

இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும். நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே சஞ்சரித்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள். இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே. கொலோசேயர் 3:1-10.

ADD YOUR COMMENT

Powered By Indic IME