என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.
He who hates Me hates My Father also. (John 15:23)
John 8:40-42; John 15:18; John 16:3; Romans 1:30; Romans 8:7; James 4:4; 1John 2:23; 2John 1:9.
என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான். (யோவான் 15:23)
யோவான் 8:40-42; யோவான் 15:18; யோவான் 16:3; ரோமர் 1:30;8:7; யாக்கோபு 4:4; 1யோவான் 2:23; 2யோவான் 1:9.
தேவ பகைஞர்:
உலகின் அசுத்தங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள் தேவ பகைஞராய் இருந்து மரணத்திற்கு பாத்திராகிறார்கள் என்று ரோமர் 1:20-32 ல் பவுல் தெளிவாகக் கூறுகின்றார். உலக சிநேகமும், மாம்ச சிந்தையும் தேவனுக்கு விரோதமான பகையை உண்டாக்கும் சாத்தானின் ஆயுதங்கள் என்றும் அறிகின்றோம் (ரோமர் 8:7; யாக்கோபு 4:4).
இப்பகுதியில் கிறிஸ்துவை நிராகரிப்போர், வெறுப்போர், விசுவாசியாதோர், தவறாக சித்தரிப்போர் தேவனைப் பகைக்கிறவர்களாயிருக்கிறார்கள் என்று இயேசு கூறுகின்றார். யூதர்கள் கிறிஸ்துவை நிராகரித்துவிட்டு பிதாவிடம் நெருங்கினர். அவரோ அவர்களை விட்டு விலகி அவர்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். இன்றுவரையிலும் தேவாலயம் இல்லாமல் யூதர்கள் காணப்படுகின்றனர். குமாரனைக் கொன்றுவிட்டு திராட்சைத்தோட்டத்தை சொந்தமாக்கிக்கொள்ள நினைத்த குத்தகைதாரர்கள் எஜமானால் வெளியேற்றப்பட்டனர்.
மாம்சத்தில் வந்த கிறிஸ்துவை விசுவாசித்து அறிக்கைபண்ணாதவர்கள் அனைவரும் அந்திகிறிஸ்துவின் ஆவியையுடையவர்களே (1யோவான் 4:3). நாம் அவரை மாம்சத்தின்படி அறியாதிருந்தாலும் தேவனுக்குரிய ஜனமாக நிலைத்திருப்பதற்கு மாம்சத்தில் வந்த கிறிஸ்துவை நிராகரிக்காமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவைக் குறித்த தப்பறை உபதேசங்களை பரப்புகிறவர்களையும், கிறிஸ்துவை பிரசங்கிப்பதை விட்டுவிட்டு வேறுவிதமாக பிரசங்கிப்பதையும் தேவன் வெறுக்கிறார்.
பிதாவின் அன்பையும், பிதாவின் வாக்குதத்தங்களையும், பிதாவின் ஆசீர்வாதங்களையும் நிறைவாய் பெறுவதற்கு மாம்சத்தில் வந்த கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினால் அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று விசுவாசித்து இரட்சிக்கப்பட்டாக வேண்டும்.
உலக சிநேகம் தேவ பகை; தெய்வ சிநேகம் உலக பகை.
தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய், புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறு பண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப்பிணைக்கிறவர்களுமாய் பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய், உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள். ரோமர் 1:28-32.