என் பிதாவினிடம் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்

என் பிதாவினிடம் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்

For all things that I heard from My Father I have made known to you. (John 15:15b)

John 17:6-8,26; Matthew 13:11; Luke 10:23; Act 20:26,27; Romans 16:25,26; 1Corinthians 2:9-12; Ephesians 1:9,10; Colossians 1:25,26.

இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன். (யோவான் 15:15b)

யோவான் 17:6-8,26; மத்தேயு 13:11; லூக்கா 10:23; அப்போஸ்தலர் 20:26,27; ரோமர் 16:25,26; 1கொரிந்தியர் 2:9-12; எபேசியர் 1:9,10; கொலோசெயர் 1:25,26.

அறிவித்தேன்:

இயேசு கிறிஸ்து தமது சீஷர்களை அன்புக்குரியவர்களாய் கொண்டிருந்து தமக்கு தன் பிதாவினால் வெளிப்படுத்தபட்டவைகள் யாவையும் வெளியரங்கமாக அவர்களுக்கு அறிவித்தார். அவ்விதம் அறிவிக்கப்பட்டவைகளை இயேசுவோடு கூட இருந்த காலங்களில் அவ்வளவாக விளங்கி கொள்ளவில்லை. இதனால் அவரின் விருப்பத்துக்கு மாறான பேச்சுக்களையும், செயல்களையும் செய்தனர். ஆனால் இயேசுவின் பரமேறுதலுக்கு பின்பு – பரிசுத்த ஆவியின் நிறைவை அனுபவித்த பின்பு இயேசுவால் அறிவிக்கப்பட்ட யாவற்றையும் செம்மையாக அறிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் தங்கள் ஜீவனையும் அவருக்காய் கொடுக்க துணிந்தனர்.

ப.ஏ ல் இரகசியங்களாக அறியபட்டவைகள் கர்த்தராகிய இயேசுவினால் வெளிப்படுத்தப்பட்டது. ப.ஏ ன் இரகசியமே கர்த்தராகிய இயேசுதான். இயேசுவில் வெளிப்பட்ட இரகசியங்களை அறியகூடிய மனகண்கள் சீஷர்களுக்கு இல்லாதிருந்தது உண்மையே. ஆனால் ஆவியானவர் சகல சத்தியத்துக்குள்ளும் உங்களை நடத்துவார் என்ற வாக்குப்படி பரிசுத்த ஆவியினால் இரகசியங்களின் தாற்பரியங்களை அறிந்து உலகமெங்கும் சாட்சிகளாக மாறினர்.

பிதாவின் இரகசியங்களை இயேசு அறிவித்தார். பிதா குமாரனின் இரகசியங்களை பரிசுத்த ஆவியானவர் அறிவித்தார். பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் இரக்சியத்தை அறிந்து வெளிபடுத்துகிறது அவரது விவிலியமே. இந்த விவிலியத்தின் மாண்பை எடுத்து செல்லும் பொறுப்பு நமக்கு தரப்பட்டுள்ளது. அறிந்த நாம் அறிவிக்க தயாராக வேண்டும். விவிலியத்தை எந்த ஒன்றோடும் இணைத்து பொருள் கொள்ள முடியாது.

பரிசுத்த ஆவியின் செம்மையான வழிகாட்டுதல் படியாகவே நாம் விவிலியத்தை அறிந்து கிறிஸ்துவை குறித்த ரகசியங்களை அறிய வேண்டும். சீஷர்களுக்கு அறிவித்தவரே நமக்கும் வெளிப்படுத்துவார்.

ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்துகிறதற்கு, உங்கள்பொருட்டு தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட உத்தியோகத்தின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன். புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம். எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம். அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன். கொலோசேயர் 1:25-29.

ADD YOUR COMMENT

Powered By Indic IME