என்னுடைய சமாதானத்தையே உங்களுக்கு வைத்துப்போகிறேன்

என்னுடைய சமாதானத்தையே உங்களுக்கு வைத்துப்போகிறேன்.

Peace I leave with you, My peace I give to you; not as the world gives do I give to you. (John 14:27)

John 16:33; John 20:19,21,26; Act 10:36; Romans 5:1,10; 2 Corinthians 5:18-21; Ephesians 2:14-17; Isaiah 53:5.

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக. (யோவான் 14:27)

யோவான் 16:33; யோவான் 20:19,21,26; அப்போஸ்தலர் 10:36; ரோமர் 5:1,10; 2கொரிந்தியர் 5:18-21; எபேசியர் 2:14-17; ஏசாயா 53:5.

என் சமாதானம்:

கர்த்தராகிய இயேசு சமாதானமாய் வந்தார். ஏசாயா 9:6. சமாதானத்தை தமது மரணத்தின் மூலம் உருவாக்கினார். ஏசாயா 53:5. நொறுங்கிபோனவர்களுக்கு சமாதானத்தைக் கொடுப்பதாக வாக்களித்தார். மாற்கு 5:34. சமாதானத்தைப் பெற்றுக் கொள்ளும் வழியைக் கூறினார். பிலிப்பியர் 4:6,7. சமாதானம் இருதயத்துக்கானது என்றார். சமாதானம் பூமியை விட்டு நீக்கப்படும் காலம் வரும் என்றார். வெளி 6:4.

சமாதானமாய் தேசத்தில் வாழ்வதையும் சமாதானம் என்கிறோம். இருவருக்கிடையில் உள்ள பிணக்கு நீக்கப்படுவதை சமாதனம் என்கிறோம். இரட்சிப்பினால் உண்டாகும் சமாதானம். ஆவியின் கனியாகிய சமாதானம். மரணத்துக்கு பின்புள்ள அமைதி நிலையை சமாதானம் என்கிறோம். பாதுகாப்பு செழிப்பு போன்ற நிலையை சமாதானம் என்கிறோம்.

இயேசுகிறிஸ்து தான் கொண்டு வந்த சமாதானத்தை இவ்வுலகில் வைத்துப் போயுள்ளார். அதை நீக்கிபோடும் காலத்துக்கு முன்பதாகவே அந்த சமாதானத்தை பெற நாம் என்ன செய்கின்றோம்?. நாம் கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்து இந்த சமாதானத்தை பெற வாஞ்சிக்கின்றோமா? இந்த சமாதானம் நமக்குள் இருந்தால் தான் நாம் யாவரோடும் சமாதானமாய் இருக்க முடியும். பிறருக்குள் இந்த சமாதானத்தை உண்டுபண்ன பிரயாசப்படுவோம். இந்த சமாதானத்தை தேடி பெற்று கொள்ள பிறருக்கு அறைகூவல் விடுப்போம். இந்த ச,மாதானம் மனிதர்களுக்குள் ஊடுருவி செல்ல வேண்டுதல் செய்வோம்.

நாம் கர்த்தரை நேசிப்போம். கர்த்தரின் வார்த்தைகளை நேசிப்போம். கர்த்தரின் ஆவியை நேசிப்போம். கர்த்தரின் சபையை நேசிப்போம். கர்த்தரின் ஊழியகாரர்களை நேசிப்போம். கர்த்தரின் மந்தையை நேசிப்போம். அப்படிபட்டவர்களுக்கு அவர் சமாதானம் அருளி அவர்களை காப்பார். சங்கீதம் 29:11; சங்கீதம் 85:8.
சமாதானமே குறைவிலும் பலவீனத்திலும் பிரிவிலும் நம்மை மகிழ்ச்சியாய் வைக்கிறது.

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார். பிலிப்பியர் 4:6-9.

ADD YOUR COMMENT

Powered By Indic IME