நீங்கள் கேட்கிற வசனம் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது

நீங்கள் கேட்கிற வசனம் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.

The word which you hear is not Mine but the Father’s who sent Me. ( John 14:24)

John 14:10; John 3:34; John 5:19,38; John 8:26,28,38,42; John 12:44-50; 1Peter 1:8.

என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது. (யோவான் 14:24)

யோவான் 14:10; யோவான் 3:34; யோவான் 5:19,38; யோவான் 8:26,28,42; யோவான் 12:44-50; 1பேதுரு 1:8.

பிதாவின் வார்த்தை:

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியில் தோன்று முன்பதாக கொடுக்கப்பட்ட வார்த்தைகள் பிதாவின் வார்த்தைகளாக கருதப்படுகிறது. இந்த வார்த்தைகள் இயேசுவை முன்னறிவிக்கும் வார்த்தைகளாகவும், இயேசுவைச் சுட்டி காட்டும் வார்த்தைகளாகவும் காணப்பட்டது. இயேசு கிறிஸ்து வந்த பின்பு உரைக்கப்பட்ட வார்த்தைகள் இயேசுவின் வார்த்தைகளாகவும், இயேசுவைப் பற்றிய வார்த்தைகளாகவும் கூறப்படுகிறது.

இயேசுகிறிஸ்து பிதா தனக்கு கற்பித்ததும், காண்பித்ததுமாகும் என்று கூறுகிறார். எனவே அவைகள் பிதாவின் வார்த்தைகள் எனப்படுகின்றது. தான் பேசும் வார்த்தைகள் யாவும் பிதாவின் வார்த்தைகளாக இருப்பதினால் அவைகளை ஏற்றுக்கொள்கிறவன் பிதாவை ஏற்றுக்கொண்டு இயேசுவை நேசிக்கிறவனாயிருக்கிறான்.

கர்த்தரின் வார்த்தைகளைப் போதிக்கிற தேவ மனிதர்கள் கிறிஸ்துவின் வார்த்தைகளைப் பேசுகிறார்கள். இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு அதற்கு கீழ்ப்படிகின்றவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறவர்களாகவும், தேவ மனிதர்களை நேசிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் அவரின் அன்புக்குரியவர்களாகவும், ஆசீர்வாதங்களுக்குரியவர்களாகவும் மாறுகிறார்கள்.

விவிலியம் தேவனுடைய வார்த்தைகளையும் தேவனைக் குறித்த வார்த்தைகளையும் கொண்டுள்ளது. உலக வரலாற்றில் தேவன் எவ்விதம் செயல்பட்டார் என்று காண்பிக்கின்றதுவே விவிலியம். இந்த விவிலியத்தில் மனதை செலுத்தி தேவனை உற்று நோக்குவோமெனில் நமது வரலாற்றிலும் அவரின் கிரியைகளை நாம் காணலாம்.

மனிதவாழ்வுக்கு போதுமானதாக காணப்படுகின்றதே விவிலியம். இதற்கு வெளியே நாம் எதையும் தேட வேண்டியதில்லை. இதற்குள் உள்ள வாக்குகளை நம்புவோம், பின்பற்றுவோம், பயனடைவோம்.
பிதாவினால் நாம் பெற்ற கற்பனையின்படியே உம்முடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் கண்டு; மிகவும் சந்தோஷப்பட்டேன். இப்பொழுதும் அம்மாளே, நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்று, உமக்குப் புதிய கற்பனையாக எழுதாமல், ஆதிமுதல் நமக்கு உண்டாயிருக்கிற கற்பனையாக எழுதி, உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான். உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள். கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக்கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். 2யோவான் 1:4-10

ADD YOUR COMMENT

Powered By Indic IME