நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.
you will see Me. Because I live, you will live also. (John 14:19)
John 6:56-58; John 11:25; Romans 5:10; Romans 8:34; 1Corinthians 15:20,45; 2 Corinthians 4:10-12; Col3:3,4; Hebrew 7:25; 1John 1:1-3.
இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள், நான் பிழைக்கிறபடியினால் நீங்கள் பிழைப்பீர்கள். (யோவான் 14:19)
யோவான் 6:56-58; யோவான் 11:25; ரோமர் 5:10; ரோமர் 8:34; 1கொரிந்தியர் 15:20,45; 2கொரிந்தியர் 4:10-12; கொலோசெயர் 3:3,4; எபிரெயர் 7:25; 1யோவான் 1:1-3.
பிழைப்பீர்கள்:
பிழைத்தல் என்ற சொல் பு.ஏ ல் 147 தடவைகள் வந்துள்ளன. கர்த்தராகிய இயேசு என்றென்றும் உயிரோடிருப்பவர் ஆகையினால் அவரை விசுவாசிக்கிறவன் என்றென்றும் உயிரோடிருப்பான். கர்த்தராகிய இயேசு மரித்து உயிர்த்தது போல அவரை விசுவாசிக்கிறவனும் மரித்தாலும் பிழைப்பான். இயேசுகிறிஸ்து பாவத்துக்காய் செத்து நீதிக்காய் பிழைத்தது போல அவரை விசுவாசிக்கிறவனும் பாவத்துக்கு செத்து நீதிக்கு பிழைப்பான்.
அவர் ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருப்பதினால் அவரை விசுவாசிக்கிறவன் பிழைப்பான். லூக்கா 20:38. அவருடைய ஜீவன் அவரை விசுவாசிப்பவனிடத்தில் இருப்பதினால் மரணம் அவர்களை ஆண்டுகொள்ளுவதில்லை. பாவம் அவர்களை ஆண்டுகொள்ளுவதில்லை, ஆக்கினை தீர்ப்புக்கு உட்படுவதில்லை. நாம் இயேசுவின் மரணத்தை சுமந்து சென்றாலும் ஜீவனையும் சுமந்து செல்கிறோம். 2கொரிந்தியர் 4:10-12.
கிறிஸ்துவினால் பிழைத்தல் உண்டானதினால் பிழைத்திருக்கிறவர்கள் இனி தங்களுக்கென்று பிழைத்திராமல் தங்களுக்காய் மரித்தும் பிழைத்துமிருக்கிறவருக்காய் பிழைத்திருக்க வேண்டும். 2கொரிந்தியர் 5:15. இதனை பவுல் கலாத்தியர் 2:20 ல் பிழைத்திருக்கிறேன், இனி நானல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் என்கிறார்.
இதனால் நாம் பிழைக்கதக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் கீழ்படிந்து அடங்கி நடக்க வேண்டும். எபிரெயர் 12:9.
கிறிஸ்துவினால் கிடைத்த வாழ்வை கொண்டு கிறிஸ்துவுக்குள் அநேகரை பிழைக்க வைக்க உழைப்பதையே அவர் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். பாவத்தின் பிடியில் சிக்கி நரகம் நோக்கி ஓடுபவர்களுக்கு – மரணமே தங்களை அடிமைபடுத்தியுள்ளது என்பதை அறியாது வைராக்கியம் பாராட்டுபவர்களுக்கு – காரிருளுக்குள் தள்ளப்பட போகிறோம் என்று தெரியாமல் விரைகின்றவர்களுக்கு கிறிஸ்துவின் ஜீவனை சுமந்து சென்று ஜீவன் கொடுத்து ஜீவனடைய செய்வோமா?
அவர் ஜீவிக்கிறார். அவர் ஜீவனை நாம் இருப்பது வரையிலும் சுமந்து செல்லுவோம்.
ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே. பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்? கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனேகூட பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம். ரோமர் 6:1-8.