அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால் நீங்கள், அவரை அறிவீர்கள்.
But you know Him, for He dwells with you and will be in you. (John 14:17)
Isaiah 57:15; Isaiah 59:21; Ezekiel 36:27; Romans 8:9,11,13,14; 1Corinthians 3:16; 1Corinthians 6:19; 2 Corinthians 6:16; Eph 3:17; 2 Timothy 1:14; 1John 2:27; 1John 3:24; 1John 4:12,13.
உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும்.இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது, அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். (யோவான் 14:17)
ஏசாயா 57:15; ஏசாயா 9:21; எசேக்கியேல் 36:27; ரோமர் 8:9,11,13,14; 1கொரிந்தியர் 3:16; 1கொரிந்தியர் 6:19; 2கொரிந்தியர் 6:16; எபேசியர் 3:17; 2தீமோத்தேயு 1:14; 1யோவான் 2:27; 1யோவான் 3:24; 1யோவான் 4:12,13
உள்ளே வாசம் பண்ணும் ஆவி:
மனித ஆவி மனிதனுக்குள் வாசம் செய்கிறது. உலகத்தில் மாம்சத்தின் ஆவிகள், பிசாசின் ஆவிகள் வாசம் பண்ணுகிறது. சாத்தானை பின்பற்றுகிறவர்களில் சாத்தானின் ஆவி வாழ்கிறது. இச்சைகளை பின்தொடர்கிறவனில் இச்சையின் ஆவியும், ஐசுவரியத்தை பின்தொடர்கிறவனில் பொருளாசையின் ஆவியும் வாசம் பண்ணுகிறது. அவர்களின் கனிகளினாலே அவர்களுக்குள் வாசம் பண்ணும் ஆவியை அறியலாம்.
பிதாவினால் அனுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவினால் மீட்கப்பட்டவர்களில் தேவனின் ஆவியர் வாழ்கிறார். அவன் தேவனுடைய குணங்களைக் குறிப்பாக இயேசுவின் குணங்களை உடையவனாகவே காணப்படுகின்றான். அவனில் உலகத்தின் ஆவியோ, இச்சைகளின் ஆவியோ, மாம்சத்தின் ஆவியோ, பிசாசுகளின் ஆவியோ, எரிச்சலின் ஆவியோ காணப்படுவதில்லை. ஆட்டுகுட்டியின் இரத்தத்தால் மீட்கபட்டவன் ஆட்டுகுட்டியை போலவே காணப்படுவான். வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்பட்டவன் அவைகளை போலவே காணப்படுவான். நம்மிலிருந்து வெளிப்படும் ஆவியின் கனிகளினாலே நாம் தேவனுடைய ஆவியை பெற்றிருக்கிறோம் என்று நிரூபணமாகின்றது.
சுவர்களால் கட்டப்பட்ட ஆலயத்தில் அவர் வெளிப்படுவது உண்மைதான். ஆனாலும் வசனத்தினாலும், தேவனுக்கு பயப்படும் பயத்தினாலும் கட்டப்படுகிற சரீரமாகிய ஆலயத்தில் மாத்திரமே அவர் வாசம் செய்கிறார். அங்கேதான் தேவன் தமது ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் வைத்திருக்கிறார். திறந்த வாசலையும் வைத்திருக்கிறார். நம்மில் வாசம் பண்ணும் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தும்போது நமது வாழ்நாளெல்லாம் கண்ணீரும் வேதனையுமே பங்காக காணப்படும்.
நமக்குள் தரப்பட்ட ஆவியை திரும்ப வாங்கிக்கொள்ள அவர் எவரையும் கலந்தாலோசிப்பதில்லை.
இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு, நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். எபேசியர் 3:14-19.