நீங்கள் என் நாமத்தினால் எதைக் கேட்பீர்களோ அதைச் செய்வேன்
And whatever you ask in My name, that I will do, that the Father may be glorified in the Son. (John 14:13)
John 15:7,16; John 16:23,26; Matthew 7:7; Matthew 21:22; Mark 11:24; Luke 11:9; Ephesians 3:20; James 1:5; James 5:16; 1John 3:22; 1John 5:14,15.
நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். (யோவான் 14:13)
யோவான் 15:7,16; யோவான் 16:23,26; மத்தேயு 7:7; மத்தேயு 21:22; மாற்கு 11:24; லூக்கா 11:9; எபேசியர் 3:20; யாக்கோபு 1:5; யாக்கோபு 5:16; 1யோவான் 3:22; 1யோவான் 5:14,15.
கேட்பதைச் செய்வேன்:
இவ்வார்த்தைகள் இரு தடவைகள் வருகின்றன. கர்த்தராகிய இயேசு நாம் கேட்பதைச் செய்வதாக வாக்கு அருள்கின்றார். கேட்பதற்கு ஒரு நிபந்தனையும், ஒரு காரணமும் உண்டு.
நிபந்தனை என்னவெனில் இயேசுவின் நாமத்தில் கேட்கவேண்டும் என்பதுவே. அதாவது இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகும். இயேசுவிடம் உள்ள நன்மையை அவரிடம் கேட்டு பெற்றுக்கொள்வதற்கு கட்டாயமாக இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரின் விசுவாசியாக வேண்டும். வழியில் உள்ளோர் எளியவர்களாய் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் அல்ல, அவரை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயாகும். இந்த நிபந்தனையை நிறைவேற்றாமல் எளியவர்கள், வறியவர்கள் என்ற காரணத்தைச் சொல்லி அவரிடமிருந்து எதையும் பெறவியலாது.
அவர் நமக்கு கொடுப்பதின் காரணம் என்னவெனில் கர்த்தராகிய இயேசு தம்மிடம் உள்ளதை கொடுப்பதினால் பரலோகத்திலிருக்கிற பிதா மகிமைப்படுத்தப்பட வேண்டும், தொழுகைச் செய்யப்படவேண்டும், புகழப்பட வேண்டும் என்பதாகும். இயேசுவை ஏற்றுக்கொண்டு பிதாவை மகிமைப்படுத்துகிறவன் பிதாவின் புத்திராராக மாறுகிறான். அப்படிபட்டவர்கள் கேட்பதைப் பெறுகிறார்கள். நமக்கு அவர் தருவதினால் பிதாவை நாம் மகிமைப்படுத்துவோமா இல்லையா என்பதை அவர் முன்னதாகவே அறிகின்றார். நாம் பிதாவுக்குரிய மகிமையை செலுத்துவதை அவர் எதிர்பார்க்கின்றார். கொடுத்தவர்களையல்ல கொடுக்கவைத்த தேவனையே நாம் புகழ வேண்டும்.
இலவசமான ஈகைதான். ஆனாலும் நிபந்தனையும் உண்டு. எதிர்பார்ப்பும் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக இரட்சிப்பும் அவசியமே.
காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். ரோமர் 1;20-25.