என்னை விசுவாசிக்கிறவன் பெரிய கிரியைகளைச் செய்வான்.
I say tou, he who believes in Me, the works that I do he will do also;and greater works than these he will do, (John 14:12)
Matthew 21:21; Mark 16:17,18; Luke 10:17-19; Act 2:4-11; Act 3:6-8; Act 4:9-12; Act 8:7; Act 9:34; Act 10:46; Act 16:18; 1Corinthians 12:8-11.
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். (யோவான் 14:12)
மத்தேயு 21:21; மாற்கு 16:17,18; லூக்கா 10:17-19; அப்போஸ்தலர் 2:4-11; அப்போஸ்தலர் 3:6-8; அப்போஸ்தலர் 4:9-12; அப்போஸ்தலர் 8:7; அப்போஸ்தலர் 9:34; அப்போஸ்தலர் 10:46; அப்போஸ்தலர் 16:18; 1கொரிந்தியர் 12:8-11.
பெரிய காரியம் செய்ய இயலும்.
வில்லியம் கேரி: ‘தேவனிடம் பெரிய காரியங்களை எதிர் பார்; தேவனுக்காய் பெரிய காரியங்களைச் செய்’ என்று கூறினார். நேற்றைய தினம் கர்த்தராகிய இயேசு மூன்றுவிதமான கிரியைகளைச் செய்ததாக நாம் தியானித்தோம். இன்றைக்கு இயேசுகிறிஸ்து செய்ததை போலவும், அதை விட மேலானதாக செய்யவும் தம்மை விசுவாசிக்கிறவர்களால் கூடும் என்று இயேசு கூறியதை தியானிக்கின்றோம்.
இயேசுவை விசுவாசிக்கின்றவன் இயேசுவை உடையவனாயிருக்கின்றான். இயேசுவைக் கொண்டு எதையும் செய்கின்றான். அவர் அவனுக்குள் இருப்பதினால் அவனால் தன் சுயபலத்தினாலும், சுய எண்ணத்தினாலும் செயல்பட முடியாது. பவுல் கலாத்தியர் 2:20 ல் ‘இனி நானல்ல, கிறிஸ்துவே என்னில் பிழைத்திருக்கிறார்’ என்று கூறிய கூற்று விசுவாசத்தின் உச்ச நிலையாகும். இவ்விதம் இயேசுவை கொண்டிருப்பவன் இயேசுவை மட்டுமே விசுவாசிப்பதினால் இயேசு செய்தவைகளையும் அதை விடவும் மேலானவைகளையும் செய்ய முடியும்.
நாம் பெரிய காரியங்களைச் செய்யவே அவர் விரும்புகிறார். அப்படிபட்ட கிரியைகளை நம்மூலம் நடப்பிப்பதற்காகவே தமது ஆவியை நம்மில் நிறைவாக தந்துள்ளார். இயேசு பாவத்தையும், சாபத்தையும், இச்சைகளையும், வியாதிகளையும், பிசாசுகளையும், மரனத்தையும் ஜெயித்தது போல நாமும் அதே இயேசுவை உடையவர்களாய் இருப்போமெனில் சாபத்தையும், வியாதிகளையும், வறுமைகளையும், பிசாசுகளையும் ஜெயிக்க முடியும். நாம் ஜெயம் பெறுவதையும், புகழ் அடைவதையும் அவர் விரும்புகிறார். ஏனெனில் இயேசுவை கொண்டிருப்பவன் ஒருநாளும் தனக்கு உண்டாகும் புகழ்ச்சியை தனக்குதானே கொண்டிராமல் அவருக்கே செலுத்துகிறவானாயிருக்கிறான்.
நாம் அவரை நம்புவதை விடவும் அவர் நம்மை நம்பும் படியாய் நடந்துகொள்வதே பெரிய கிரியைகளுக்கான மூலவழி.
தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால், சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல. மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். ரோமர் 8:9-15.