என்னாலேயல்லாமல் ஒருவரும் பிதாவினிடத்தில் வர இயலாது.
No one comes to the Father except through Me. (John 14:6)
John 10:7,9; Acts 4:12; 1Peter 2:4-7; 1Peter 3:18; 1John 2:22,23; 2John 1:9; Revelation 5:9,10; Revelation 7:9-17; Revelation 13:7,8; Revelation 20:15.
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14:6)
யோவான் 10:7,9; அப்போஸ்தலர் 4:12; 1பேதுரு 2:4-7; 1பேதுரு 3:18; 1யோவான் 2:22,23; 2 யோவான் 1:9; வெளி5:9,10; வெளி 7:9-17; வெளி 13:7,8; வெளி 20:15.
ஒரே வழி இயேசு:
இயேசுகிறிஸ்துவினாலேயல்லாமல் ஒருவரும் பிதாவாகிய தேவனிடத்திற்கு செல்ல முடியாது. எல்லாம் பிதாவினால் உண்டாக்கப்பட்டது. எல்லாம் பிதாவுக்குள் அடங்கவேண்டியுள்ளது. எல்லாவற்றையும் இயேசுகிறிஸ்துவினாலேயே பிதா உண்டாக்கினார். பாவம் செய்து தேவனோடுள்ள உறவை இழந்துபோன மனுகுலம் கர்த்தராகிய இயேசுவின் மூலம் மாத்திரமே அவரோடு உறவு கொள்ளவும், அவரிடம் சென்று சேரவும் இயலும். இயேசுகிறிஸ்துவை விசுவாசியாமலிருந்து அவரை நிராகரித்துவிட்டு ஒருவரும் பிதாவிடம் செல்ல இயலாது. வேறு வழி உருவாக்கப்படவும் இல்லை.
இயேசுகிறிஸ்து மாத்திரமே தன் ஜீவனை நமக்காய் கொடுத்துள்ளவர். மனிதனின் மீட்புக்காய் தன்னையே பாவ பரிகாரம் செய்தவர். மரணத்தை அனுபவித்து மரணத்தினின்று உயிரோடு எழுந்தவர் இயேசு மட்டுமே. இயேசு மாத்திரமே பரலோகினின்று இறங்கி வந்தவரும் திரும்ப பரலோகத்திற்கு ஏறிபோனவருமாய் இருக்கிறார். அவர் மாத்திரமே திரும்பிவந்து மறுபடியும் ஏறிபோகிறவருமாயிருக்கிறார்.
மனித வாழ்வின் இரு பரிமாணங்களாகிய இவ்வுலக வாழ்வுக்கும் மறுவுலக வாழ்வுக்கும் இயேசு மாத்திரமே போதுமானவராயிருக்கிறார். இவ்வுலக வாழ்வில் அவர் ஏற்றுக்கொள்ளபடாமல் மறு உலக வாழ்வில் நாம் ஏற்றுக்கொள்ளபடவியலாது. இயேசுகிறிஸ்துவால் மீட்கபடுகிறவர்கள் மாத்திரமே தேவனுடைய இராஜ்யமாகிய அவருடைய வீட்டுக்கு செல்ல இயலும்.
நாம் மரிப்பது வரையிலும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். நாம் மரித்தபின்பு நம்மிஷ்டம் போல் அங்கே வாழவியலாது. இங்கே நாம் அவருக்கு கட்டுபட்டு அவர் இஷடம்போல் வாழ்ந்தால் மட்டுமே அங்கே நம்மை அவர் ஏற்றுக்கொண்டு தமக்கிஷ்டமான வாழ்வைத் தருவார்.
அவரின்றி நானில்லை; நானின்றி அவருண்டு.
ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். எபிரெயர் 10:19-22.