உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக
Let not your heart be troubled. (John 14:1)
Psalms 42:5,6,8-11; Psalms 43:5; Psalms 77:2,3,10; Isaiah 43:1,2; Jeremiah 8:18; Lamentations 3:17-23; 2Corinthians 2:7; 2corinthians 4:8-10; 2Corinthians 12:9,10; 1 Thessalonians 3:3,4; Hebrews 12:12,13.
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக, தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். (யோவான் 14:1)
சங்கீதம் 42:5,6,8-11; சங்கீதம் 43:5; சங்கீதம் 77:2,3,10; ஏசாயா 43:1,2; எரேமியா 8:18; புலம்பல் 3:17-23; 2கொரிந்தியர் 2:7;4:8-10; 2கொரிந்தியர் 12:9,10; 1தெசலோனிக்கேயர் 3:3,4; எபிரெயர் 12:12,13
கலக்கமில்லாத இருதயம்:
இயேசுகிறிஸ்துவின் திரும்பி செல்லும் நேரம் நெருங்கியதினாலும், இயேசுவோடு கூட இருந்துகொண்டே உரோமர்களிடம் காட்டிகொடுக்க சீஷர்களில் ஒருவர் முயற்சிக்கிறதையும் உணர்ந்துகொண்ட சீஷர்கள் இயேசு நம்மைவிட்டு போய்விட்டால் நமது நிலைமை என்னவாகுமோ என்ற பயத்தில் கலங்கியும், குழம்பியும், பயந்தும் காணப்பட்டனர். ஆவியில் அறியும் திறன் உள்ள இயேசுவால் சீஷர்களின், மன அழுத்தத்தை உணர்ந்துக் கொண்டவராய் உங்கள் இருதயம் கலங்க வேண்டாம் என்றார்.
சீஷர்களைப் போலவே பிரிவுகளினிமித்தமாகவும், வியாதிகளினிமித்தமாகவும், குறைவுகளினிமித்தமாகவும், சுவிசேஷத்துக்கு உண்டாகிற எதிர்ப்புகளினிமித்தமாகவும் கலங்கிபோய் பயந்துபோய் இருக்கிற தேவபிள்ளைகளுக்கு பயமில்லாத நல்ல அனுபவத்தையும் குழப்பமில்லாத ஆரோக்கிய சிந்தையையும், கலக்கமில்லாத தெளிந்த சிந்தனையையும் தருவதற்கு அவர் ஆவலாயிருக்கிறார்.
காண்பதைக் கண்டும், கேட்பதைக் கேட்டும், அனுபவிப்பதை அனுபவித்தும் வேதனையோடிருப்பவருக்கு அவர் கலக்கம் நீக்கும் கலங்கரைவிளக்காய் வருகிறார்.
பவுலுக்கு உண்டான கலக்கத்திலும், பயத்திலும், வேதனையிலும் கர்த்தராகிய இயேசு என் கிருபை உனக்கு போதும், உன் பலவீனத்தில் என் பலம் பூரணமாய் விளங்கும் என்று உற்சாகப்படுத்தினார்.
நமது கலக்கமான நேரத்தில் உற்சாகப்படுத்தும் ஆவியையும், ஆறுதல் படுத்தும் வசனத்தையும் தைரியப்படுத்தும் கூட்டாண்மையையும்(சபையை) நமக்கு அவர் தந்திருக்க பயம் நீங்கி, கலக்கம் நீங்கி தொடர் ஓட்டத்தில் விழுந்தாலும் தூசியை உதறிவிட்டு ஓட்டத்தை உற்சாகமாய் தொடர்வோம்.
உலகின் முடிவுவரையிலும் அவர் கூடவே இருக்கிறார்.
ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள், திரும்ப நிமிர்த்தி, முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள். யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். எபிரெயர் 12:12-16.